கிலேரிவாக்ஸ் நகர பெர்நாது
புனித கிலேரிவாக்ஸ் நகர பெர்நாது | |
---|---|
San Bernardo by Juan Correa de Vivar, held in the டெல் பிராடோ அருங்காட்சியகம் in மத்ரித், எசுப்பானியா | |
மறைவல்லுநர் | |
பிறப்பு | c. 1090 பான்தேய்ன் லெஸ் தியோன், பர்கன்டி, பிரான்சிய இராச்சியம் |
இறப்பு | 20 ஆகஸ்ட் 1153 கிலேர்வாக்ஸ் மடம், கிலேர்வாக்ஸ், பிரான்சிய இராச்சியம் |
ஏற்கும் சபை/சமயங்கள் | |
புனிதர் பட்டம் | 18 ஜனவரி 1174, உரோம், திருத்தந்தை நாடுகள் by மூன்றாம் அலெக்சாண்டர் |
முக்கிய திருத்தலங்கள் | டிராய்ஸ் மறைமாவட்டப் பேராலயம் |
திருவிழா | ஆகஸ்ட் 20 |
சித்தரிக்கப்படும் வகை | சிஸ்டேர்சியன் துறவு ஆடை, நூல் , சிலுவை |
பாதுகாவல் | சிஸ்டேர்சியன் சபையினர், பர்கன்டி, தேனீ வளர்ப்பவர்கள், மெழுகுவர்த்தி தயாரிப்பாளர்கள், ஜிப்ரால்ட்டர், Algeciras, Queens' College, Cambridge, Speyer Cathedral, தேவாலய புனித வீரர்கள் |
கிலேரிவாக்ஸ் நகர பெர்நாது அல்லது கிலேர்வாக்ஸ் நகர பெர்நார்து (இலத்தீன்: Bernardus Claraevallensis; 1090 – 20 ஆகஸ்ட் 1153) என்பவர் பர்கன்டியினைச்சேர்ந்த ஆதீனத் தலைவர் ஆவார். சிஸ்டேர்சியன் சபையின் மூலமாக கத்தோலிக்க துறவரதில் புனித ஆசிர்வாதப்பர் சபையினை புத்துயிர் பெறச்செய்ததில் குறிக்கத்தக்கப்பங்கு வகித்த்வர் இவர்.
சிற்றோ நகரில் இருந்த புனித பெனடிக்ட்டின் மிகக் கடுமையான ஒழுங்குகளுடன் கூடிய சிஸ்டேர்சியன் துறவு மடத்தில் சேர்ந்தார். இந்த மடத்தில் இவர் சேர்ந்தது மட்டுமன்று, இவரின் உடன் பிறந்தார் நால்வரும் மாமனும் இவரோடு சேர்ந்து கொண்டனர். இவர்களுடன் மேலும் 31 இளைஞர்கள் பெர்னார்துவின் முன்மாதிரிகையால் இம்மடத்தில் துறவு மேற்கொண்டனர். நாளடைவில் இங்கு இருந்த துறவிகளின் எண்ணிக்கை 130 ஆக உயர்ந்தது. பார்-சுர்-ஆபேவின் தென்கிழக்க்கில் ஒரு புதிய மடம் அமைக்க இவர் அனுப்பட்டப்பார். 25 ஜூன் 1115இல் மடத்தை இவர் நிருவினார்.
இவர் கன்னி மரியாவிடம் பக்தியினைப் பரப்பினார்.[2] 1128இல் இவர் டிராய்ஸ் சங்கத்தில் இவர் தேவாலய புனித வீரர்களின் சட்டவிதிகளுக்கு[a] அடிக்கோடிட்டார். 13 பெப்ரவரி 1130இல் திருத்தந்தை இரண்டாம் ஹோனோரியுஸின் இறப்புக்குப்பின்னர் திருச்சபையில் பிளவு ஏற்பட்டது. பிரான்சின் ஆறாம் லூயிஸ் அரசர் சங்கம் ஒன்றை கூட்டினார். இதற்கு பெர்நார்து நடுவராக நியமிக்கப்பட்டார். 1139இல் இவர் இரண்டாம் இலாத்தரன் பொதுச்சங்கத்தில் பங்கு பெற்றார். 1141இல் பியேர் அபேலார்டுக்கு எதிராக சென்ஸ் சங்கத்தில் முறையிட்டார். பெர்நார்தின் சீடர் மூன்றாம் யூஜின் என்னும் பெயரின் திருத்தந்தையானார். திருச்சபையின் உள்ள நடந்த பிளவுகளை சரிபடுத்த முயன்ற இவரை இதன் பின் திரிபுக் கொள்கைகளை எதிர்க்க அழைப்பக்பட்டார். ஜூன் 1145இல் இவர், தெற்கு பிரான்சில் பயணம் மேற்கொண்டு அங்கு திரிபுக் கொள்கைகளை எதிர்த்து கத்தோலிக்க மறையினை வலுப்படுத்தினார். 1146இல் இரண்டாம் சிலுவைப்போருக்கு அழைப்பு விடுத்த வெசெலே சங்கத்தில் அதனை ஆதரித்து மறையுரை ஆற்றினார். எடிசா முற்றுகையில் கிறிஸ்தவ தோல்விக்குப் பிறகு, திருத்தந்தை இவரை இரண்டாம் சிலுவைப் போர் வீரர்களுக்கு மறைஉரை ஆற்றப்பனித்தார். இவரின் கடைசி நாட்கள் சிலுவைப்போரின் நேர்ந்த தோல்வியின் பொருப்பு இவர்மீது சாட்டப்பட்டதால் துன்பம் மிகுந்ததாக இருந்தது. துறவியாக 40 ஆண்டுகள் வாழ்ந்தப்பின்னர் தனது 63ஆம் அகவையின் இவர் இறந்தார். கத்தோலிக்க திருச்சபையின் பொது நாள்காட்டியில் இடம் பெற்ற முதல் சிஸ்டேர்சியன் புனிதர் இவர் ஆவார். இவருக்கு 18 ஜனவரி 1174இல் திருத்தந்தை மூன்றாம் அலெக்சாண்டர் புனிதர் பட்டமளித்தார். 1830இல் திருத்தந்தை எட்டாம் பயஸ் இவரை "திருச்சபையின் மறைவல்லுநர்" என அறிவித்தார்.
குறிப்புகள்
[தொகு]- ↑ André de Montbard, தேவாலய புனித வீரர்களின் நிறுவனர்களில் ஒருவர் பெர்னார்ட்டின் தாயின் அரை சகோதரர் ஆவார்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Anon. 2010, ப. 534-535.
- ↑ Smith 2010, ப. 32.