ராமேசசு (இளவரசர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராமேசசு படவெழுத்துக்களில்
N5
Z1
msssA51

ராமேசசு
N5
Z1
ms s
z
A51

ராமேசசு
லக்சர் கோயிலில் ராமேசசு

ராமேசசு (Ramesses) (சில நேரங்களில் ரமேசசு பி எனவும் குறிப்பிடப்படுகிறார்) பண்டைய எகிப்தின் பத்தொன்பதாம் வம்சத்தின் பட்டத்து இளவரசராக இருந்தார்.

குடும்பம்[தொகு]

இரண்டாம் ராமேசசு அவரது ராணி இசெட்னோபிரெட் ஆகியோரின் மூத்த மகனும் மற்றும் அமுன்-கெர்-கெபெசெப்பின் இரண்டாவது மகனும், பார்வோன் இரண்டாம் ராமேசசின் பட்டத்தரசி நெபர்தரியின் மூத்த மகனுமாவார்.[1] இவரது தாத்தா முதலாம் சேத்தியின் ஆட்சிக் காலத்தில் பிறந்தார். இவருக்கு குறைந்தது ஒரு சகோதரியும் இரண்டு சகோதரர்களும் இருந்தனர். இவரது சகோதரி பிந்தநாத் பின்னர் இரண்டாம் ராமேசசு ஆட்சியில் பெரிய அரச மனைவியாக உயர்த்தப்பட்டார். மேலும் அரசவையில் முக்கிய பங்கும் வகித்தார். இசெட்னோப்ரெட் என்ற பெயருடைய ஒரு சகோதரி அவளுடைய சகோதரன் மெர்நெப்தாவை மணந்து அவனது ராணியாக ஆகியிருக்கலாம். இவரது அறியப்பட்ட இளைய சகோதரர்களான கெம்வாசேத் மற்றும் மெர்நெப்தா ஆகியோருடன் பல நினைவுச்சின்னங்களில் இடம்பெற்றுள்ளார். அல்-உக்சுர் மற்றும் அபு சிம்பெலில் ரமேசசின் மகன்களின் பட்டியலில் இரண்டாவது இளவரசராக இவர் தோன்றுகிறார்.[2]

அஸ்வான் பாறைகளில் மேலே: இரண்டாம் ரமேசசு, ஐசெட்னோபிரெட் மற்றும் கேம்வாசெத் இருவரும் குனும் கடவுளின் முன். கீழே இடமிருந்து வலமாக: மெர்னெப்தா, பிந்தநாத் மற்றும் இளவரசர் ரமேசசௌ

வரலாறு[தொகு]

காடேசு போருக்குப் பிறகு எகிப்திய 'வெற்றி' காட்சிகள் உட்பட பல கல்வெட்டுகளில் அவர் தோன்றுகிறார். [2] "அரசரின் மகன் அவருக்குப் பிரியமானவர்" என்ற பட்டங்களை ராமேசசு கொண்டுள்ளார். 10 ஆம் ஆண்டு லக்சரில் நடந்த கோட் போர் காட்சிகளில், இளவரசர்கள் அமுன்-கெர்-கெபெசெப், ரமேசசு, பரேகெர்வெனெமெப் மற்றும் கேம்வெசேத் ஆகியோர் மன்னனான தங்கள் தந்தைக்கு முன்பாக காட்டப்படுகிறார்கள். [3]

அபு சிம்பெலில் உள்ள பெரிய கோயிலுக்கு முன்னால் இரண்டாம் ராமேசசின் அருகே சித்தரிக்கப்பட்ட இரண்டு இளவரசர்களில் ஒருவராக இவர் சித்தரிக்கப்படுகிறார். அவர் நுழைவாயிலின் வடக்கே உள்ள இராட்சச உருவத்தின் முன் தோன்றுகிறார்.[3]

ரமேசசு எகிப்திய சிம்மாசனத்தின் வாரிசாக தனது தந்தையின் ஆட்சிகாலத்தின் 25 முதல் 50 ஆண்டு வரை பணியாற்றினார். [2] இவர் தனது மூத்த சகோதரர் அமுன்கெர்கெபெசெப்பின் மரணத்திற்குப் பிறகு அரியணை ஏறியதாகத் தெரிகிறது.[1]

சக்காராவிலும் இவர் காணப்படுகிறார். அபிஸ் காளைகளுக்கான சில விழாக்களில் இவர் பங்கேற்றிருக்க வேண்டும். இவருடைய சகோதரர் கேம்வாசேத் முதலில் பிதா கோயிலின் செம் -பூசாரியாகவும் பின்னர் மெம்பிசில் உள்ள பிதா கோயிலின் பிரதான பூசரியாகவும் இருந்தார். இவரது தந்தையின் ஆட்சிகாலத்தின் 16 மற்றும் 30 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், அரசரின் மகனும் வாரிசுமான ரமேசசும் அபிஸ் காளைகளின் புதைகுழிகளில் ஒன்றிற்காக ஒரு சிலையை நன்கொடையாக அளித்துள்ளார்.[3]

மரணமும் , அடக்கமும்[தொகு]

செபுவா கோயிலி காணப்படும் பார்வோன் இரண்டாம் ரமேசசின் மகன்கள். வலமிருந்து இடமாக: அமுன்கெர்கெபெசெப், ரமேசசு, பரேகெர்வெனெமெப், கெம்வேசேத், மொன்டுகெர்கெபெசெப், நெபென்காரு, [மெரியாமுன்] செதெம்வியா

ராமேசசின் மரணத்திற்குப் பிறகு, மன்னர்களின் சமவெளியிலுள்ள இரண்டாம் இரமேசசின் மகன்களின் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார்.[2] இவருக்குப் பிறகு இவரது சகோதரர் கேம்வாசேத் எகிப்தின் புதிய இளவரசரானார். கேம்வாசேத் இரண்டாம் ராமேசசின் நான்காவது மகன். முன்னதாக மூன்றாவது மகன், பரேகெர்வெனெமெப் முன்னதாகவே இறந்தார்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Kitchen, Kenneth A., Pharaoh Triumphant: The Life and Times of Ramesses II, King of Egypt, Aris & Phillips. 1983 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-85668-215-5
  2. 2.0 2.1 2.2 2.3 Aidan Dodson & Dyan Hilton, The Complete Royal Families of Ancient Egypt, Thames & Hudson (2004), pp. 160–173, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-500-05128-3
  3. 3.0 3.1 3.2 3.3 Kitchen, K.A., Ramesside Inscriptions, Translated & Annotated, Translations, Volume II, Blackwell Publishers, 1996
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராமேசசு_(இளவரசர்)&oldid=3831482" இலிருந்து மீள்விக்கப்பட்டது