பெப்ரவரி 19
Appearance
(பெப்பிரவரி 19 இலிருந்து வழிமாற்றப்பட்டது)
<< | பெப்ரவரி 2024 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | ||||
4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
25 | 26 | 27 | 28 | 29 | ||
MMXXIV |
பெப்ரவரி 19 (February 19) கிரிகோரியன் ஆண்டின் 50 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 315 (நெட்டாண்டுகளில் 316) நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
[தொகு]- 356 – பேரரசர் இரண்டாம் கான்ஸ்டன்டியசு உரோமைப் பேரரசில் உள்ள அனைத்து பாகன் கோவில்களையும் மூடிவிட கட்டளை பிறப்பித்தார்.
- 1594 – போலந்து-லித்துவேனியா பொதுநலவாயத்தின் மன்னர் மூன்றாம் சிகிசுமண்டு சுவீடன் மன்னராக முடி சூடினார்.
- 1600 – பெருவின் உவாய்நப்பூட்டினா என்ற சுழல்வடிவ எரிமலை வெடித்தது.
- 1649 – இரண்டாம் குவாராராப்பசு சமர் ஆரம்பமானது. பிரேசிலில் டச்சு குடியேற்றம் முடிவுக்கு வந்தது.
- 1674 – இங்கிலாந்துக்கும் நெதர்லாந்துக்கும் இடையில் அமைதி உடன்பாடு எட்டப்பட்டதில் மூன்றாவது ஆங்கிலேய-இடச்சுப் போர் முடிவுக்கு வந்தது. இதன்படி டச்சு குடியேற்றப் பகுதியான நியூ ஆம்ஸ்டார்டாம் இங்கிலாந்துக்குக் கொடுக்கப்பட்டு நியூ யோர்க் எனப் பெயர் மாற்றப்பட்டது.
- 1807 – அமெரிக்காவின் முன்னாள் துணை அரசுத்தலைவர் ஆரன் பர் தேசத்துரோகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார்.
- 1815 – கண்டிப் போர்கள்: கண்டியின் கடைசி மன்னர் விக்கிரம ராஜசிங்கன் பிரித்தானியரால் தூம்பறை என்ற இடத்தில் கைது செய்யப்பட்டார்.[1]
- 1876 – யாழ்ப்பாணம் கத்தோலிக்க கார்டியன் ஆங்கில இதழ் வெளியிடப்பட்டது.[2]
- 1878 – கிராமபோனிற்கான காப்புரிமத்தை தாமசு ஆல்வா எடிசன் பெற்றார்.
- 1884 – 60 இற்கும் மேற்பட்ட சுழல் காற்றுகள் ஐக்கிய அமெரிக்காவின் தெற்குப் பகுதிகளைத் தாக்கின.
- 1913 – பெத்ரோ லாசுகுராயின் மெக்சிக்கோவின் அரசுத்தலைவராக 45 நிமிட நேரம் மட்டும் பதவியில் இருந்தார். உலகில் மிகக் குறைந்த நேரம் பதவியில் இருந்த அரசுத்தலைவர் இவரே.
- 1915 – முதலாம் உலகப் போர்: தார்தனெல்சு நீரிணை மீதான முதலாவது கடற்படைத் தாக்குதல் ஆரம்பமானது. ஆங்கிலோ-பிரெஞ்சுக் கூட்டுப் படைகள் உதுமானியப் படைகள் மீது கலிப்பொலி கரையோரப் பகுதிகளில் குண்டுகளை வீசின. கலிப்பொலி போர் ஆரம்பமாயிற்று.
- 1942 – இரண்டாம் உலகப் போர்: சப்பானிய அமெரிக்கர்களை இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்க அமெரிக்கத் தலைவர் பிராங்க்ளின் ரூசவெல்ட் உத்தரவிட்டார்.
- 1942 – இரண்டாம் உலகப் போர்: கிட்டத்தட்ட 250 சப்பானியப் போர் விமானங்கள் ஆத்திரேலியாவின் வட மண்டலத்தின் தலைநகர் டார்வின் மீது குண்டுகளை வீசியதில் 243 பேர் கொல்லப்பட்டனர்.
- 1943 – இரண்டாம் உலகப் போர்: தூனிசியாவில் கேசரைன் கணவாய் சண்டை ஆரம்பமானது.
- 1945 – இரண்டாம் உலகப் போர்: இவோ ஜீமா சண்டை: 30,000 ஐக்கிய அமெரிக்க கடற்படையினர் சப்பானின் இவோ ஜீமா தீவில் தரையிறங்கினர்.
- 1948 – விடுதலைக்காகப் போராடும் தென்கிழக்காசியாவின் இளையோர் மற்றும் மாணவர் மாநாடு கல்கத்தாவில் ஆரம்பமானது.
- 1954 – கிரிமியாவை உருசிய சோவியத் குடியரசில் இருந்து உக்ரைன் சோவியத் குடியரசிற்கு கையளிக்க சோவியத் உயர்பீடம் முடிவெடுத்தது.
- 1959 – ஐக்கிய இராச்சியம் சைப்பிரசுக்கு விடுதலையை வழங்கியது. சைப்பிரசு அதிகாரபூர்வமாக 1960 ஆகத்து 16 இல் விடுதலை பெற்ற நாடாகியது.
- 1965 – வியட்நாம் குடியரசு இராணுவத் தளபதி பாம் ஙொக் தாவோ, வடக்கு வியட்நாம் வியட் மின் கம்யூனிச உளவாளியுடன் இணைந்து (அனைவரும் கத்தோலிக்கர்கள்) தெற்கு வியட்நாமில் பௌத்தரான நியூவென் கானின் ஆட்சிக்கு எதிராக இராணுவப் புரட்சியை நடத்தித் தோல்வியடைந்தனர்.
- 1978 – சைப்பிரசின் லனார்க்கா விமான நிலையத்தில் கடத்தப்பட்ட எகிப்திய விமானத்தை விடுவிக்க சைப்பிரசின் முன் அனுமதியின்றி தாக்குதலில் ஈடுபட்ட எகிப்திய அதிரடிப் படைகளை சைப்பிரஸ் இராணுவத்தினர் தாக்கியட்தில் 15 எகிப்திய படைகள் கொல்லப்பட்டனர்.
- 1985 – வில்லியம் சுரோடர் செயற்கை இதயம் வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டு மருத்துவமனையில் இருந்து வெளியேறிய முதலாவது நபரானார்.
- 1985 – எசுப்பானியாவின் போயிங் விமானம் ஒன்று ஓயிஸ் மலையில் மோதியதில் 148 பேர் கொல்லப்பட்டனர்.
- 1986 – சோவியத் ஒன்றியம் மீர் விண்வெளி நிலையத்தை விண்ணுக்கு ஏவியது.
- 1986 – உடும்பன்குளம் படுகொலைகள், 1986: அம்பாறையின் உடும்பன்குளத்தில் 80 தமிழ் விவசாயிகள் இலங்கை இராணுவத்தினரால் சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்டனர்.
- 2002 – நாசாவின் மார்சு ஒடிசி விண்ணுளவி செவ்வாய்க் கோளின் மேற்பரப்பை வெப்ப உமிழ்வு முறை மூலம் வரைய ஆரம்பித்தது.
- 2003 – ஈரானில் இலியூசின் ரக இராணுவ விமானம் வீழ்ந்து நொருங்கியதில் 275 பேர் உயிரிழந்தனர்.
- 2006 – மெக்சிக்கோவில் நிலக்கரி சுரங்கம் ஒன்றில் மெத்தேன் வெடிப்பு ஏற்பட்டதில் 65 சுரங்கத் தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
- 2012 – மெக்சிக்கோவில் சிறைச்சாலை ஒன்றில் நிகழ்ந்த வன்முறைகளில் 44 பேர் உயிரிழந்தனர்.
பிறப்புகள்
[தொகு]- 1473 – நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ், போலந்து கணிதவியலாளர், வானியலாளர் (இ. 1543)
- 1630 – சிவாஜி, மராட்டியப் பேரரசர் (இ. 1680)
- 1821 – ஆகஸ்ட் சிலெய்ச்சர், செருமானிய மொழியியலாளர் (இ. 1868)
- 1855 – உ. வே. சாமிநாதையர், தமிழறிஞர் (இ. 1942)
- 1859 – சுவாந்தே அறீனியசு, நோபல் பரிசு பெற்ற சுவீடன் வேதியியலாளர் (இ. 1927)
- 1906 – மாதவ சதாசிவ கோல்வால்கர், இந்திய இந்துத்துவவாதி (இ. 1973)
- 1922 – தரம்பால், உத்தரப் பிரதேச காந்தியவாதி, வரலாற்றாளர் (இ. 2006)
- 1922 – பியான்ட் சிங், இந்திய அரசியல்வாதி, பஞ்சாப் முதலமைச்சர் (இ. 1995)
- 1930 – கே. விஸ்வநாத், இந்திய நடிகர், இயக்குநர் (இ. 2023)
- 1941 – டேவிட் கிராஸ், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர்
- 1947 – பாண்டு, தமிழகத் திரைப்பட நகைச்சுவை நடிகர் (இ. 2021)
- 1953 – கிறிஸ்டினா ஃபெர்னாண்டஸ் தெ கிர்ச்னர், அர்ச்செந்தீனாவின் 52வது அரசுத்தலைவர்
- 1960 – இளவரசர் ஆண்ட்ரூ, யார்க் கோமகன்
- 1989 – சரண்யா மோகன், தென்னிந்திய நடிகை.
- 1993 – விக்டோரியா ஜஸ்டிஸ், அமெரிக்க நடிகை, பாடகி
இறப்புகள்
[தொகு]- 1553 – எராசுமசு இரீன்கோல்டு, செருமானிய வானியலாளர், கணிதவியலாளர் (பி. 1511)
- 1897 – கார்ல் வியர்ஸ்ட்ராஸ், செருமானியக் கணிதவியலாளர் (பி. 1815)
- 1915 – கோபால கிருஷ்ண கோகலே, இந்திய மெய்யியலாளர், விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (பி. 1866)
- 1916 – எர்னெசுட் மாக், ஆத்திரிய இயற்பியலாளர், மெய்யியலாளர் (பி. 1838)
- 1937 – சிதம்பரம் வைத்தியநாத பிள்ளை, தமிழக நாதசுவர இசைக் கலைஞர் (பி. 1884)
- 1950 – சைமன் கிரகரி பெரேரா, இலங்கை யேசு சபை மதகுரு, வரலாற்றாளர் (பி. 1882)
- 1962 – ஜியார்ஜியோ பாபனிகொலாவு, பாப் சோதனையைக் கண்டுபிடித்த கிரேக்க-அமெரிக்க மருத்துவர் (பி. 1883)
- 1981 – ஜி. நாகராஜன், தமிழகச் சிறுகதை எழுத்தாளர் (பி. 1929)
- 1988 – எஸ். வி. சகஸ்ரநாமம், தமிழக நாடக, திரைப்பட நடிகர் (பி. 1913)
- 1997 – டங் சியாவுபிங், சீன அரசியல்வாதி (பி. 1904)
- 2003 – ஜேம்ஸ் ஹார்டி, அமெரிக்க மருத்துவர், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் முன்னோடி (பி. 1918)
- 2012 – பெடரிக்கு இசுட்டால், டச்சு மெய்யியலாளர் (பி. 1930)
- 2014 – ஜிம் விரிச், அமெரிக்கக் கணிணி அறிவியலாளர் (பி. 1956)
- 2016 – உம்பெர்த்தோ எக்கோ, இத்தாலியக் குறியியலாளர், எழுத்தாளர் (பி. 1932)
- 2016 – ஹார்ப்பர் லீ, அமெரிக்க எழுத்தாளர் (பி. 1926)
- 2020 – திருவாளப்புத்தூர் டி. ஏ. கலியமூர்த்தி, தமிழகத் தவில் கலைஞர் (பி. 1948)
- 2023 – மயில்சாமி, தென்னிந்திய நடிகர், நகைச்சுவையாளர் (பி. 1965)
சிறப்பு நாள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Remarkable enents". Ferguson's Ceylon Directory, Colombo. 1871.
- ↑ John H. Martyn, Notes on Jaffna, American Ceylon Mission Press, தெல்லிப்பழை, இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக். 37