உள்ளடக்கத்துக்குச் செல்

வியட் மின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வியட் மின் சின்னம்

வியட் மின் (Việt Minh) என்பது பிரான்சிடம் இருந்தும் ஜப்பான் இடமிருந்து வியட்நாமை விடுவிக்க 1941 ஆம் ஆண்டில் கம்யூனிஸ்ட் தலைவர் ஹோ சி மின் ஆரம்பித்த ஒரு கம்யூனிச புரட்சி விடுதலை இயக்கம் ஆகும். இதன் பெயர் Việt Nam Ðộc Lập Ðồng Minh Hội (வியட்நாம் விடுதலைக்கான முன்னணி) என்பதன் சுருக்கமாகும்.

இரண்டாம் உலகப் போர்

[தொகு]

இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பான் பிரெஞ்சு இந்தோசீனாவை கைப்பற்றியிருந்தது. ஜப்பானியர்களுக்கெதிராக இராணுவப் போராட்டத்தினை வியட் மின் ஆரம்பித்திருந்தது. இதனால் இது அமெரிக்கா மற்றும் சீனாவிடம் இருந்து நிதி உதவிகளைப் பெறக்கூடியதாக இருந்தது. ஹோ சி மின் கம்யூனிசவாதியாக இருந்தமையினால் அவர் சீனா வில் ஓர் ஆண்டு காலம் சிறையிலும் கழிக்க வேண்டி இருந்தது. ஆகஸ்ட் 1945 உல் ஜப்பான் சரணடைந்தபோது, ஹனோய் நகரின் சில கட்டிடங்களை ஹோ சி மின் தலைமையிலான வியட் மின்னின் பாவானைக்கு தந்தது. செப்டம்பர் 2, 1945 இல் ஹோ வியட்நாம் சனநாயகக் குடியரசை விடுவிக்கப்பட்ட நாடாக அறிவித்தார்.

முதலாம் இந்தோசீனப் போர்

[தொகு]

சீனா, பிரான்ஸ் ஆகிய நாடுகளுடன் வியட் மின் ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டது. அதன்படி பிரெஞ்சுக் கூட்டமைப்பில் சுதந்திர நாடாக இருக்க வியட்நாம் ஒப்புக் கொண்டது. இவ்வொப்பந்தம் முறிவடைந்து பிரான்சுடன் 10 ஆண்டுகள் கடும் போர் இடம்பெற்றது. பிரான்ஸ் ஹனோயை மீண்டும் கைப்பற்றினாலும் 1947 இல் வியட் மின் தளத்தைக் கைப்பற்ற எடுத்த முயற்சி தோல்வி கண்டது. 1949 இல் சீனாவின் உதவி கிடைத்தது. நாட்டின் பல புறப் பகுதிகளைத் தம்வசமாக்கினர்.

வடக்கு வியட்நாம்

[தொகு]

பிரான்ஸ் வியட்நாமில் இருந்து வெளியேறுவதற்கு பேச்சுவார்த்தையில் இறங்கியது. 1954 இல் ஜெனீவாவில் இடம்பெற்ற மாநாட்டினை அடுத்து நாடு வடக்கு வியட்நாம், தெற்கு வியட்நாம் என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. அக்டோபர் 11 1954 இல் வடக்கு பகுதியின் ஆட்சி வியட் மின்னுக்கு வழங்கப்பட்டது. ஹோ அதன் பிரதமரானார். தெற்குப் பகுதிக்கு Ngo Dinh Diem என்பவர் பிரதமரானார்.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வியட்_மின்&oldid=3531476" இலிருந்து மீள்விக்கப்பட்டது