எராசுமசு இரீன்கோல்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எராசுமசு இரீன்கோல்டு
Erasmus Reinhold
பிறப்பு(1511-10-22)அக்டோபர் 22, 1511
சால்பீல்டு, செக்சானி தொகுதி
இறப்புபெப்ரவரி 19, 1553(1553-02-19) (அகவை 41)
சால்பீல்டு, செக்சானி தொகுதி
தேசியம்செருமானியர்
துறைவானியல், கணிதவியல்
பணியிடங்கள்விட்டன்பர்கு பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்விட்டன்பர்கு பல்கலைக்கழகம்
Academic advisorsஜேஜோப் மில்ச்
குறிப்பிடத்தக்க மாணவர்கள்Michael Beuther
Sebastian Dietrich
Johannes Hommel
Valentine Naibod
Caspar Peucer
Bartholomäus Schönborn
Matthias Stoius[1]

எராசுமசு இரீன்கோல்டு (Erasmus Reinhold) (அக்தோபர் 22, 1511- பிபரவரி 19, 1553) ஒரு செருமானிய வானியலாளரும் கணிதவியலாளரும் ஆவார். இவர் இவரது தலைமுறையின் ஆழ்ந்த தாக்கம் செலுத்திய வானியல் கல்வியியலாளராகக் கருதப்படுகிறார்.[2] இவர் சாக்சானில் உள்ள சால்பீல்டில் பிறந்து அங்கேயே இறந்தார்.

இவர் விட்டன்பர்கு பல்கலைக்கழகத்தில் யாகோபு மிலிச் கீழ் கல்வி கற்று பின்னர் அதன் முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட புலத் தலைவராகவும் பின்னர் காஆளராகவும் விளங்கிய இவர் 1536 இல் பிலிப் மெலஞ்சுதானால் உயர்கணிதப் பேராசிரியராகப் பணியில் அமர்த்தப்பட்டார். அக்காலத்தில் கணிதவியல் பயன்முறைக் கணிதவியலையும் உள்ளடக்கியது, குறிப்பாக வானியலையும் உள்ளடக்கியது. இவரது சமகாலப் பணியாளராகிய யோச்சிம் இரெடிகசுவும் விட்டன்பர்கில் படித்தார். இவரும் தாழ்கணிதவியல் பேராசிரியராக 1536 இல் பணியில் அமர்த்தப்பட்டார்.

இவர் பேரளவு விண்மீன்களைப் பட்டியலியலிட்டுள்ளார். இவரது வானியல் சார்ந்த வெளியீடுகளில் ஜார்ஜ் பியூர்பக்கின் Theoricae novae planetarum எனும் நூலுக்கான 1542, 1553 ஆகிய ஆண்டு குறிப்புரைகளும் அடங்கும்.இவர் கோப்பர்னிக்கசு தனது De revolutionibis நூலை வெளியிடுவதற்கு முந்தைய சூரிய மையக் கோட்பாட்டு வடிவத்தை இரீன்கோல்டு அறிந்திருந்தார். இதைப் பின்பற்றி மேற்கோள்களைப் பியூர்பக்கின் நூலுக்கான தனது குறிப்புரையில் இரீன்கோல்டு பயன்படுத்தினார்.[3] என்றாலும், இவர் கெப்ளர், கலீலியோ ஆகியோருக்கு முந்தைய வானியலாளர்களைப்போலவெ கோப்பர்னிக்கசுவின் கணிதவியல் முறைகளைத் தன் புறநிலைச் சூழல், இறையியல் காரணங்களுக்காக சூரிய மையக் கோட்பாட்டு அண்டவியலைப் புறக்கணித்துவிட்டு புவி மையக் கோட்பாட்டு வட்டத்துக்குள் கொணர்ந்து மொழிபெயர்த்துள்ளார்.[4]

பிரசிய மன்னர் ஆல்பெர்ட் இரீன்கோல்டுக்கு நிதிஏற்பாடு செய்து இரீன்கோல்டை ஆதரித்தார். இரீன்கோல்டின் Prutenicae Tabulae அல்லது பிரசிய அட்டவணைகள் எனும் நூலை வெளியிட நிதியளித்தார். இந்த அட்டவணைகள் பிரசியா எங்கும் கோப்பர்னிக்கசுவின் கணக்கீட்டு முறையை பரப்பிட உதவியது. என்றாலும் கிங்கெரிச் என்பார் அவை உண்மையான சூரிய மையக் கோட்பாட்டுக் கடப்பாடின்மையைக் காட்டுவனவாக குறிப்பிடுகிறார், மேலும், அவை புவி தனித்து இயங்குவதாகக் காட்டுவதற்காக கவனமாக புனைந்த்தாகத் தெரிகிறது எனவும் கருதுகிறார்.[5] இரீன்கோல்டின் பிரசிய அட்டவணைகளும் கோப்பர்னிக்கசுவின் ஆய்வுகளும் ஆகிய இரண்டுமே பதின்மூன்றாம் போப் கிரிகொரியின் நாட்காட்டிச் சீர்திருத்தத்துக்கு 1582 இல் அடைப்படையாகின.

எடின்பர்கில் அமைந்த அரசு வான்காணகத்தில் உள்ள இரீன்கோல்டின் பரவலான குறிப்புரையுள்ள De revolutionibus படிதான், ஓவன் கிங்கெரிச்சை அதன் முத்லிரு பதிப்புகளைத் தேட்த் தூண்டியுள்ளது. இவற்ரைப் பற்றி, இவர் தன் எவராலும் படிக்கப்படாத நூல்கள்.[6] இரீன்கோல்டு தனது வெளியிடப்படாத De revolutionibus எனும் நூலின் குறிப்புரையை வைத்து புவிக்கும் சூரியனுக்கும் உள்ள தொலைவைக் கணித்துள்ளார். தாலமியின் மதிப்பைக் கொணரப் பெரிதும் பூசி மெழுகியுள்ளார்.[7]

நிலாவில் மேர் இன்சுலாரத்தில் அமைந்த கோப்பர்னிக்கசு குழிப்பள்ளத்துக்குத் தென் தென்மேற்கில் உள்ள நிலாவின் குழிப்பள்ளம் ஒன்று இவரது நினைவாக இரீன்கோல்டு குழிப்பள்ளம் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. *NDSU Department of Mathematics (1997). "Mathematics Genealogy Project". Mathematics Genealogy Project. American Mathematical Society. பார்க்கப்பட்ட நாள் 5 April 2016. {{cite web}}: Invalid |ref=harv (help)
  2. Owen Gingerich: The Role of Erasmus Reinhold and the Prutenic Tables in the Dissemination of the Copernican Theory, 1973, Studia Copernicana, Poland [1]
  3. Owen Gingerich, The Book Nobody Read (Heinman, 2004, p. 19)
  4. Hanne Andersen, Peter Barker, and Xiang Chen. The Cognitive Structure of Scientific Revolutions. New York: Cambridge University Press, 2006. pp 138-148
  5. Owen Gingerich, From Copernicus to Kepler (Proceedings of the American Philosophical Society, 1973)
  6. Owen Gingerich, The Book Nobody Read (Heinman, 2004, p. 25)
  7. Richard Kremer, Book review of On the distances between the sun, moon and earth [2]
"https://ta.wikipedia.org/w/index.php?title=எராசுமசு_இரீன்கோல்டு&oldid=2716518" இலிருந்து மீள்விக்கப்பட்டது