உள்ளடக்கத்துக்குச் செல்

பெடரிக்கு இசுட்டால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

யோஃகான் ஃவிரெடரிக்கு இசுட்டால் (Johan Frederik (Frits) Staal, நவம்பர் 3, 1930- பெப்ரவரி 19, 2012 ) என்றும் பரவலாக ஃவிரிட்சு இசுட்டால் என்றும் அறியப்பட ஆய்வாளர், வேதச் சடங்குகள், மந்திரங்கள் முதலியவற்றை ஆய்ந்ததில் புகழ் ஈட்டியவர். ஆம்சிட்டர்டாமில் பிறந்த இவர் தாய்லாந்தில் சியாங்மை என்னும் ஊரில் இயற்கை எய்தினார். இவர் அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாநிலத்தில், பெரிக்கிலியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் மெய்யியல், தெற்கு, தென்கிழக்கு ஆசிய அறிவுத்துறைப் பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்று எமரிட்டசுப் பேராசிரியராக இருந்தார்.

இவர் ஒரு கட்டடவியலாளர் யான் ஃவிரெடரிக்கு இசுடால் (Jan Frederik Staal) என்பாரின் மகனாகப் பிறந்தார். இவர் கணிதம், இயற்பியல், மெய்யியல் ஆகியவற்றை ஆம்சிட்டர்டாமில் படித்தார். பிறகு இந்திய மெய்யியலையும், சமற்கிருதத்தையும் சென்னையிலும், காசியிலும் கற்றார். இசுட்டால் ஆம்சிட்டர்டாமில் பொது மெய்யியல், ஒப்பீட்டு மெய்யியல் பேராசிரியராக 1962–67 இல் இருந்தார். பின்னர் 1968 இல் பெர்க்கிலியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் மெய்யியல், தென் ஆசிய மொழிகள் துறைப் பேராசிரியராகச் சேர்ந்து 1991 இல் ஓய்வு பெற்றார்.

இவர் 1975 இல் கேரளாவில் ஒரு 12 நாள் வேத அக்னிசயனச் சடங்கை ஆவணப்படுத்தினார்.

இவருடைய அண்மைய ஆய்வுகள் கிரேக்க, வேதிய வடிவவியல் கருத்துகளைப் பற்றியன. தொல்பழம் இலக்கண ஆசிரியரான பாணினி, அண்மைக் காலத்தில் உணரப்பட்டுள்ள மொழியியல் கொள்கைகளை மிக ஆழமாக உணர்ந்திருந்தார் என்றும் அண்மையில் 1950 இல் மீண்டும் நோம் சோம்சுக்கி கண்டுபிடிக்கும் வரை அதுவே உயர்நிலை என்றும் பல பத்தாண்டுகளாகக் கருத்துரைத்து அறிவுலகை ஏற்கச் செய்துள்ளார் இசுட்டால். முற்கால முறைகள் கணக்கிடற்கரிய பற்பல நுண்ணிய பிறப்பியல் மொழியியல் கருத்துகளை வாய்வழியாக நிலைநிறுத்த உதவின என்று கூறினார். பாணினியின் முறைகள் துணைக்குறியீடுகள் ("auxiliary" markers) வழி உருவாக்கப்பட்டது என்றும் இவற்றை 1930களில்தான் ஏரணவியலாளர் எமில் போசுட்டு (Emil Post) மீண்டும் கண்டுபிடித்தார். கணினி மொழிகளை மீள்வரைவு செய்வதில் இவை பயன்படுவதாகக் கூறுகின்றார். "இந்திய யூக்ளிடு பாணினி" ("Panini is the Indian Euclid." ) என்கிறார் இசுட்டால். எப்படி பேசும் சமற்கிருத மொழியை அதே மொழியை விளக்கும் மேல்மொழியாக (metalanguage) நீட்டிக்க முடியும் என்று பாணினி காட்டியதாகக் கூறுகின்றார். சமற்கிருதத்தைத் துல்லியமாக ஒலிக்கவும், கருத்துக்கும் எண்ணத்துக்கும் மொழி மிக முதன்மையானதால், இவை கண்டுபிடிக்கத் துணையாகவும் ஊன்று கோலாகவும் இருந்தது என்கிறார்.

ஃவிரிட்சு இசுட்டால் ஓய்விடமாகத் தாய்லாந்தில் வாழ்ந்துவந்தார்.

நூல்வரைவுகள்

[தொகு]

(முழுமையானதன்று)

Additional biographical source: Frits Staal. "There Is No Religion There." pp. 52–75 in The Craft of Religious Studies, edited by Jon R. Stone. New York: St. Martin's Press, 1998.

English
  • Advaita and Neoplatonism, University of Madras, 1961.
  • Nambudiri Veda Recitation, The Hague: Mouton, 1961.
  • Word Order in Sanskrit and Universal Grammar, Dordrecht: Reidel, 1967.
  • A Reader on the Sanskrit Grammarians, Cambridge Mass.: MIT, 1972.
  • Exploring Mysticism. A Methodological Essay, Penguin Books; Berkeley: University of California Press, 1975.
  • The Science of Ritual, Poona: Bhandarkar Oriental Research Institute, 1982.
  • with C. V. Somayajipad and Itti Ravi Nambudiri, AGNI - The Vedic Ritual of the Fire Altar, Vols. I-II, Berkeley: Asian Humanities Press, 1983.
  • The Stamps of Jammu and Kashmir, New York: The Collectors Club, 1983.
  • Universals. Studies in Indian Logic and Linguistics, Chicago and London: University of Chicago, 1988.
  • Rules Without Meaning. Ritual, Mantras and the Human Sciences, Peter Lang: New York- Bern-Frankfurt am Main-Paris, 1989.
  • Concepts of Science in Europe and Asia, Leiden: International Institute of Asian Studies, 1993, 1994.
  • Mantras between Fire and Water. Reflections on a Balinese Rite, Amsterdam: Royal Netherlands Academy of Sciences/North-Holland, 1995.
  • "There Is No Religion There." in: The Craft of Religious Studies, ed. Stone, New York: St. Martin's Press, 1998, 52-75.
  • Artificial Languages across Sciences and Civilizations, Journal of Indian Philosophy 34, 2006, 89-141.
  • Discovering the Vedas: Origins, Mantras, Rituals, Insights, Penguin Books India, 2008.
பிரான்சியம்
  • Jouer avec le feu. Pratique et theorie du rituel vedique, Paris: College de France, 1990.
Dutch
  • Over Zin en Onzin, Amsterdam: Meulenhoff, 1986.
  • Een Wijsgeer in het Oosten. Op reis door Java en Kalimantan, Amsterdam: Meulenhoff, 1988.
  • Drie bergen en zeven rivieren: Essays, Amsterdam: Meulenhoff 2004.

மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும்

[தொகு]

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெடரிக்கு_இசுட்டால்&oldid=4045723" இலிருந்து மீள்விக்கப்பட்டது