உள்ளடக்கத்துக்குச் செல்

தார்தனெல்சு நீரிணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தார்தனெல்சு நீரிணை is located in ஐரோப்பா
பொசுபோரசு
தார்தனெல்சு
துருக்கிய நீரிணைகளைக் காட்டும் படத்தில் பொசுபோரசு செவ்வண்ணமாகவும் தார்தனெல்சு மஞ்சள் வண்ணத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளன. துருக்கியின் இறையாண்மை உள்ள பகுதிகள் பசும் வண்ணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.
தார்தனெல்சு நீரிணை மஞ்சள் வண்ணத்திலும் பொசுபோரசு சிவப்பாகவும் காட்டப்பட்டுள்ள துருக்கியின் நிலப்படம். இதில் மர்மரா கடல், ஏஜியன் கடல், மற்றும் கருங்கடலும் குறிக்கப்பட்டுள்ளன.
செப்டம்பர் 2006இல் எடுக்கப்பட்ட செய்மதிப் படிமம். இடப்புறமுள்ள நீர்நிலை ஏஜியன் கடல். வலப்புற மேற்பகுதியில் உள்ளது மர்மரா கடல். இவ்விரு கடல்களுக்குமிடையே வடகிழக்கிலிருந்து தென்மேற்காக குறுகலாக அமைந்துள்ளதே தார்தனெல்சு நீரிணை. நீரிணையின் வட கடலோரமாக உள்ள நீளமான, குறுகிய மூவலந்தீவு கெலிபோலி எனப்படும் ஐரோப்பிய நிலப்பரப்பாகும். கீழுள்ள திரோடு என அழைக்கப்படும் மூவலந்தீவு ஆசிய நிலப்பரப்பாகும். திரோடு மூவலந்தீவில் கனக்காலே நகரம் தெரிகின்றது.
தார்தனெல்சு நீரிணை புவிப்பரப்பின் அண்மித்தக் காட்சி

தார்தனெல்சு (Dardanelles, (/dɑːrdəˈnɛlz/; துருக்கியம்: Çanakkale Boğazı, கிரேக்க மொழி: Δαρδανέλλια), செவ்வியல் தொன்மைக்காலத்து எல்லெசுபொன்ட் (Hellespont) (/ˈhɛlɪspɒnt/; கிரேக்கம்: Ἑλλήσποντος, Hellespontos, தமிழில் "எலியின் கடல்"), துருக்கியின் வடமேற்கிலுள்ள குறுகலான இயற்கை நீரிணை ஆகும். இது பன்னாட்டளவில் மிகவும் குறிப்பிடத்தக்க நீர்வழியாகும். இது ஐரோப்பா, ஆசியா கண்டங்களின் எல்லையில் அமைந்துள்ளது. ஆசிய துருக்கியையும் ஐரோப்பிய துருக்கியையும் பிரிக்கிறது. பன்னாட்டுக் கடற் போக்குவரத்தில் பயன்படுத்தப்படும் உலகின் மிகக் குறுகலான நீரிணைகளில் ஒன்றாக விளங்குகின்றது. இந்த நீரிணை மர்மரா கடலை ஏஜியன், நடுநிலக் கடல்களுடன் இணைக்கிறது. அதே சமயம் பொசுபோரசு வழியாக கருங்கடலுக்கும் வழியமைக்கிறது. தார்தனெல்சு 61 கிமீ (38 மைல்) நீளமும், 1.2 முதல் 6 கிமீ (0.75 முதல் 3.73 மைல்) அகலமும் உள்ளது. மிகுந்த ஆழப்பகுதி கனக்கலே நகரருகே இதன் மிகக் குறுகலான பகுதியில் 103 மீ (338 அடி) உள்ளது. சராசரியாக இதன் ஆழம் 55 மீ (180 அடி).

இந்த நீரிணையின் வட பகுதியில் மக்கள் குடியேற்றம் குறிப்பிடும்படி இல்லை; ஆனால் தெற்கில் 110,000 மக்கள்தொகை கொண்ட கனக்கலே நகரம் உள்ளது.

பொசுபோரசும், தார்தனெல்சும் கூட்டாக துருக்கிய நீரிணைகள் எனப்படுகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தார்தனெல்சு_நீரிணை&oldid=3820854" இலிருந்து மீள்விக்கப்பட்டது