கிழக்கு திரேசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திரேசினுள் கிழக்கு திரேசு (நீலம்)
துருக்கியின் மர்மரா வலயத்திலுள்ள கிழக்கு திரேசு (நீலம்)
துருக்கியின் எடிர்னெ மாகாணத்தில் கிழக்கு திரேசின் நிலப்பரப்புக் காட்சி.

கிழக்கு திரேசு, (East Thrace, Eastern Thrace (துருக்கியம்: Doğu Trakya, அல்லது திராக்கியா; (Trakya, கிரேக்க மொழி: Ανατολική Θράκη, Anatoliki Thraki; பல்கேரிய: Източна Тракия, Iztochna Trakiya), தென் ஐரோப்பாவிலுள்ள, திரேசு புவியியற் பகுதியின் கிழக்கிலுள்ள, தற்கால துருக்கி குடியரசின் அங்கமாகும். இது துருக்கிய திரேசு எனவும் ஐரோப்பிய துருக்கி எனவும் அறியப்படுகின்றது. துருக்கியின் நிலப்பரப்பில் 3% உள்ள இப்பகுதியில் துருக்கியின் 14% மக்கள்தொகை உள்ளது.[1] துருக்கியின் மற்ற பகுதிகள் புவியியல்படி தென்மேற்கு ஆசியாவிலுள்ள அனத்தோலியாவில் உள்ளன. கிழக்கு திரேசு கடல் வணிகப் போக்குவரத்து மிக்கப் பகுதியில் உள்ளதால் வரலாற்றுச் சிறப்பு மிக்கதாக விளங்குகின்றது. இப்பகுதியில் உள்ள இரு குறுகலான நீரிணைகள் நடுநிலக்கடலையும் கருங்கடலையும் இணைக்கின்றன. இதனால் உருசியா, உக்ரைன், உருமேனியா, பல்காரியா, சியார்சியா நாட்டுக் கடற்படைகளுக்கு அணுக்கம் வழங்குவதால் போர்நிலை முதன்மையும் பெறுகின்றது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Zdanowski, Jerzy (2014). Middle Eastern Societies in the 20th Century. Cambridge Scholars Publishing. பக். 11. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1443869591. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிழக்கு_திரேசு&oldid=2555991" இலிருந்து மீள்விக்கப்பட்டது