கிறிஸ்டினா ஃபெர்னாண்டஸ் தெ கிர்ச்னர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிறிஸ்டினா ஃபெர்னாண்டஸ் தெ கிர்னர்
அர்ச்சென்டினாவின் குடியரசுத் தலைவர்
பதவியில்
10 திசம்பர் 2007 – 9 திசம்பர் 2015
துணை குடியரசுத் தலைவர் ஜூலியோ கோபோசு
அமாடோ பௌடோ (தேர்வு)
முன்னவர் நெசுடர் கிர்ச்னர்
பின்வந்தவர் மொரிசியோ மாக்ரி
அர்ச்சென்டினாவின் முதல் சீமாட்டி
பதவியில்
மே 25, 2003 – திசம்பர் 10, 2007
குடியரசுத் தலைவர் நெசுடர் கிர்ச்னர்
முன்னவர் இல்டா தெ துகால்டே
பின்வந்தவர் நெசுடர் கிர்ச்னர்(முதல் சீமாட்டி
புவனெஸ் ஐரிஸ் மாநில செனடர்
பதவியில்
திசம்பர் 10, 2005 – நவம்பர் 28, 2007
சான்டா குருஸ் மாநில செனடர்
பதவியில்
திசம்பர் 10, 2001 – திசம்பர் 9, 2005
பதவியில்
திசம்பர் 10, 1995 – திசம்பர் 3, 1997
சான்டா குருஸ் மாநில துணைவர்
பதவியில்
திசம்பர் 10, 1997 – திசம்பர் 9, 2001
தனிநபர் தகவல்
பிறப்பு 19 பெப்ரவரி 1953 (1953-02-19) (அகவை 70)
லா பிளாடா, அர்ச்சென்டினா[1]
அரசியல் கட்சி வெற்றிக்கான அணி (Front for Victory)
ஜஸ்டிசியலிஸ்ட் கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) நெசுடர் கிர்ச்னர் (1975–2010)
பிள்ளைகள் மாக்சிமோ, பிளோரென்சியா
படித்த கல்வி நிறுவனங்கள் லா பிளாடா தேசிய பல்கலைக்கழகம்
தொழில் வழக்கறிஞர்
சமயம் உரோமன் கத்தோலிக்கம்
கையொப்பம்
இணையம் அலுவல்முறை இணையதளம்

கிறிஸ்டினா எலிசபெத் ஃபெர்னாண்டஸ் தெ கிர்ச்னர் (Cristina Elisabet Fernández de Kirchner, எசுப்பானிய ஒலிப்பு: [kɾisˈtina eˈlisaβet ferˈnandes ðe ˈkiɾʃneɾ][2]; பிறப்பு பெப்ரவரி 19, 1953), பொதுவாக கிறிஸ்டினா ஃபெர்னாண்டஸ் அல்லது கிறிஸ்டினா கிர்ச்னர் (அல்லது எளிமையாக கிறிஸ்டினா) எனவும் அறியப்படுபவர்,[3] அர்ச்சென்டினாவை ச் சேர்ந்த அரசியல்வாதியும் 2007 முதல் 2015 வரை அர்சென்டினாவின் குடியரசுத்தலைவராக பதவி வகித்தவரும் ஆவார். இவர் மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் நெசுடர் கிர்ச்னரின் மனைவி ஆவார். அர்ச்சென்டினாவின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் குடியரசுத் தலைவராகவும் (1974-76 ஆண்டுகளில் பதவியேற்ற இசபெல் மார்ட்டினெசு தெ பெரோனை அடுத்து) அனைத்து வகைகளிலும் இரண்டாவது பெண் குடியரசுத்தலைவராகவும் பொறுப்பேற்ற பெருமை கொண்டவர். ஜஸ்டிசியலிஸ்ட் கட்சியின் சார்பில் அர்ச்சென்டினாவின் துணைவர் மன்றத்திலும் (Argentine Chamber of Deputies) மூன்று முறை மாநில செனடராகவும் இருந்துள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Presidency of the Argentine Nation. "The President Biography" (in Spanish). http://www.casarosada.gov.ar/index.php?option=com_content&task=view&id=1450&Itemid=117. பார்த்த நாள்: 2009-04-03. 
  2. இதுவே பெரும்பான்மையர் பலுக்கும் முறையாக இருப்பினும் இதற்கு ஆதாரமில்லை; நெசுடர் கிர்ச்னரே எசுப்பானிய ஒலிப்பு: [ˈkirner]எனக் குறிப்பிடுவதுண்டு.
  3. She is also variously known as CFK, Cristina K, Kristina, Reina Cristina (Queen Cristina), Señora K / Sra. K (Mrs. K) or simply Cristina.

வெளியிணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Cristina Fernández de Kirchner
என்பதின் ஊடகங்கள் உள்ளன.