முதல் சீமாட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
செப்டம்பர் 22, 2008 அன்று நியூயார்க் நகரத்தின் மெட்ரோபாலிடன் கலை அருங்காட்சியகத்தில் 36 நாடுகளின் முதல் சீமாட்டிகள் கூடியபோது

முதல் சீமாட்டி (First Lady[1]) அல்லது முதல் சீமான் (First Gentleman) என தேர்ந்தெடுக்கப்பட்ட குடியரசுத் தலைவரின் மனைவி அல்லது கணவர் இவ்வாறு சில நாடுகளில் குறிப்பிடப்படுகின்றனர். நாட்டின் ஆளுமையில் எந்தவொரு பங்கும் ஆற்றாவிடினும் மரியாதைப் பட்டியலில் முன்னுரிமை பெறுவதுடன் அரச விருந்துகளில் விருந்தளிப்பவராக பொறுப்பேற்கிறார்.

பொதுவாக ஒரு நாட்டின் பிரதமரின் வாழ்க்கைத்துணையை இவ்வாறு குறிப்பிடுவதில்லை. வழமையாக அவர்களை பிரதமரின் துணைவி(வர்) என்றே குறிப்பிடுவர்.[2][3]

ஐக்கிய அமெரிக்காவில் இதன் பயன்பாடு முதலில் துவங்கியதாக கூறப்படுகிறது. 1849ஆம் ஆண்டில் அப்போதைய அமெரிக்கக் குடியரசுத் தலைவர் சக்காரி டைலர் தனது மனைவி டால்லி மாடிசன் மறைவின்போது தமது இரங்கற்பாவில் அவரை முதல் சீமாட்டி எனக் குறிப்பிட்டிருந்தார்.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "First Lady". dictionary.com. பார்த்த நாள் 2007-07-19. "2. எந்தவொரு நாட்டின் ஆட்சித்தலைவரின் மனைவி"
  2. "Being the prime minister's wife" retrieved 11 May 2011 "BBC"
  3. "The prime minister's wife" retrieved 11 May 2011 "BBC"
  4. "Dolley Madison". National First Ladies Library. பார்த்த நாள் 2007-04-29.
  • Burns, Lisa M. Burns. First Ladies and the Fourth Estate: Press Framing of Presidential Wives (2008). 205 pp. ISBN 78-0-87580-391-3, in U.S.
  • Sellers, Maud (April 1894). "The City of York in the Sixteenth Century". The English Historical Review 9 (34): 275–304. doi:10.1093/ehr/IX.XXXIV.275. 
  • Russell, A. (1889). Journal of the American Geographical Society of New York. 21. பக். 494–515. 

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=முதல்_சீமாட்டி&oldid=2769782" இருந்து மீள்விக்கப்பட்டது