ஹார்ப்பர் லீ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹார்ப்பர் லீ

2007 நவம்பர் 5 இல் லீ
பிறப்பு நெல் ஹார்ப்பர் லீ
ஏப்ரல் 28, 1926(1926-04-28)
மோன்ரோவில், அலபாமா
இறப்பு பெப்ரவரி 19, 2016(2016-02-19) (அகவை 89)
மன்றோவில், அலபாமா, ஐ.அ.
தொழில் புதின எழுத்தாளர்
நாடு அமெரிக்கர்
கருப்பொருட்கள் இலக்கியம்
இயக்கம் தெற்கத்திய கோதிக்
கையொப்பம் Harper Lee signature.svg

நெல் ஹார்ப்பர் லீ (Nelle Harper Lee, ஏப்ரல் 28, 1926 - பெப்ரவரி 19, 2016) அமெரிக்கப் புதின எழுத்தாளர்.. 1960இல் புலிட்சர் பரிசு பெற்ற இவரது குறுங்கதை டு கில் எ மாக்கிங் பேர்ட் மூலம் பரவலாக அறியப்பட்டவர். சிறு வயதில் தனது சொந்த ஊரான மோன்ரோவில், அலபாமாவில் நேரில் கண்டறிந்த இனப்பிரச்சினைகளை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்ட இது ஒன்றே இவர் பதிப்பித்த ஆக்கமாகும். இருந்தபோதும் இதனால் இவருக்கு 2007ஆம் ஆண்டின் குடியரசுத் தலைவரின் விடுதலைப் பதக்கம் (Presidential Medal of Freedom) கிடைத்தது.[1] மேலும் லீ பல கௌரவ பட்டங்கள் பெற்றிருந்தாலும் எப்போதுமே மேடைப்பேச்சு கொடுத்ததில்லை.

லீயின் பிற முதன்மையான பங்களிப்பு தனது அண்மித்த தோழர் ட்ரூமேன் கபோட்டின் இன் கோல்ட் பிளட் நூலிற்கான ஆய்வில் துணை புரிந்ததாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. President Bush Honors Medal of Freedom Recipients The White House Press Release from November 5, 2007

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹார்ப்பர்_லீ&oldid=2714999" இருந்து மீள்விக்கப்பட்டது