உள்ளடக்கத்துக்குச் செல்

கிராமபோன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எடிசனின் சிலிண்டர் போனோகிராஃப், 1899
தோமஸ் எடிசன் தனது முதலாவது போனோகிராஃபுடன்
போனாட்டோகிராஃப்

போனோகிராஃப் (phonograph), அல்லது கிராமபோன் (gramophone) என்பது 1877 இல் ஒலியைப் பதிவு செய்யவும் கேட்கவும் தொமஸ் அல்வா எடிசன் கண்டுபிடித்த ஒரு கருவியாகும்.[1][2][3][4]

வரலாறு

[தொகு]

போனாட்டோகிராஃப்

[தொகு]
கிராமபோன் வட்டு

ஒலியை முதன் முதலில் பதிவு செய்யும் கருவியை (phonautograph) பிரெஞ்சுக்காரரான லியோன் ஸ்கொட் கண்டுபிடித்து மார்ச் 25, 1857 இல் காப்புரிமம் பெற்றார். இது ஒலியை ஒரு பார்க்கக்கூடிய ஊடகமாகப் பதிவு செய்யக்கூடியதாக இருந்தது. ஆனாலும் பதிவு செய்த ஒலியை மீண்டும் ஒலிக்கச் செய்ய முடியாமல் இருந்தது.

போனோகிராஃப்

[தொகு]

பிரெஞ்சு அறிவியலாளர் சார்ல்ஸ் குரொஸ் (Charles Cros) என்பவர் ஏப்ரல் 18, 1877 இல் போனோகிராஃப் பற்றிய தனது விளக்கங்களைத் தந்தார். இதனைப் பின்னர் டிசம்பர், 1877 இல் பொது மக்களின் பார்வைக்குத் தந்தார். ஆனாலும் அதற்கு அவரால் செயன்முறை விளக்கம் தரமுடியவில்லை. அதே நேரம் தோமஸ் எடிசன் தனியாக ஆய்வு செய்து இதற்கு வேலை செய்யக்கூடிய கருவியைக் கண்டுபிடித்தார்.

முதலாவது போனோகிராஃப்

[தொகு]

நவம்பர் 21, 1877 இல் தோமஸ் அல்வா எடிசன் ஒலியைப் பதிவு செய்து அதனை மீளவும் ஒலிக்கச் செய்யும் தனது போனோகிராஃப் என்ற கருவி பற்றிய கண்டுபிடிப்பை அறிவித்தார். அதனை முதற் தடவையாக நவம்பர் 29 இல் காட்சிப் படுத்தினார். இது பின்னர் பெப்ரவரி 19, 1878 இல் அவரால் காப்புரிமம் (US Patent 200,521) பெறப்பட்டது.

எடிசனின் முதலாவது போனோகிராஃப்பில் ஒலி வெள்ளீயத் தகடு ஒன்றிலேயே பதிவு செய்யப்பட்டது. வெள்ளீயத் தகடு குழாய் ஒன்றின் மேல் சுற்றப்பட்டுப் அதன் மேல் பதிவு செய்யப்பட்டது.

கிராமபோன்

[தொகு]

எமிலி பேர்லினர் (Emile Berliner) என்பவர் 1887 இல் கிராமபோனுக்கான காப்புரிமத்தைப் பெற்றார். அதன்பின் இக்கருவியில் பல மாற்றங்களைச் செய்து திருத்தியமைக்கபட்டது. புத்தாக்கம் செய்யப்பட்ட இக்கருவியை 'கிராம போன்’ என அழைக்கலானார்.

உசாத்துணை

[தொகு]
  1. "The Incredible Talking Machine". Time Inc.. June 23, 2010 இம் மூலத்தில் இருந்து ஆகஸ்ட் 17, 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130817090940/http://www.time.com/time/specials/packages/article/0,28804,1999143_1999210_1999211,00.html. 
  2. "Tinfoil Phonograph". Rutgers University. Archived from the original on 2011-05-13. பார்க்கப்பட்ட நாள் 2016-11-21.
  3. "The History of the Edison Cylinder Phonograph". Library of Congress.
  4. "The Biography of Thomas Edison". Gerald Beals.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிராமபோன்&oldid=3711447" இலிருந்து மீள்விக்கப்பட்டது