கோதண்ட இராமையா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கேயார்
பிறப்புகோதண்ட இராமையா
1 சனவரி 1953 (1953-01-01) (அகவை 69)[1]
இந்திய ஒன்றியம், தமிழ்நாடு, சென்னை
மற்ற பெயர்கள்கே.ஆர்
பணிFilm director, producer, distributor, exhibitor, media personality
செயற்பாட்டுக்
காலம்
1975–தற்போது வரை
வாழ்க்கைத்
துணை
இந்திரா

கோதண்ட இராமையா (கே.ஆர் மற்றும் கேயார் என்றும் அழைக்கப்படுகிறார்) என்பவர் ஒரு இந்திய தமிழ் திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர் ஆவார். இவர் பல்வேறு திரையுலக அமைப்புகளில் பல முன்னணி பதவிகளில் இருந்துள்ளார். [2] [3]

தொழில்[தொகு]

கே.ஆர் 1972 இல் சென்னையில் உள்ள அடையார் திரைப்படக் கல்லூரியில் திரைப்பட செயலாக்கம் பிரிவில் படித்தார். 1975 இல் பட்டம் பெற்றதும், தூர்தர்ஷன் கேந்திரத்தில் தொழில்நுட்ப வல்லுநராக பணியாற்றினார். கே.ஆர் தனது முதல் திரைப்படமாக மலையாள திரைப்படமான சிசிரதில் ஓரு வசந்தம் என்ற படத்தை இயக்கி தயாரித்தார். வெளியீட்டிற்கு முன்னர், இந்த படம் பல விநியோக சிக்கல்களை எதிர்கொண்டது, இறுதியில் 1980 இல் சுகுணா ஸ்கிரீனால் வெளியிடப்பட்டது. படம் வணிக ரீதியாக தோல்வியுற்ற போதிலும், சென்னை நகரம், வடாற்காடு, தென்னாற்காடு, செங்கல்பட்டு, பாண்டிச்சேரி, திருப்பதி உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கி தமிழ்நாடு முழுவதும் திரைப்பட விநியோகம், வெளியீட்டுக்குச் செல்ல இது இவருக்கு ஊக்கத்தை அளித்தது. இந்த அனுபவத்தைக் கொண்டு இவர் தில்லு முல்லு, தாய் வீடு, வைதேகி காத்திருந்தாள், சிந்து பைரவி, புன்னகை மன்னன், சின்னபூவே மெல்லபேசு, மைக்கேல் மதன காமராஜன், பூவிழி வாசலிலே, குரு சிஷ்யன், மாப்பிள்ளை, ராஜாதி ராஜா, மைடியர் குட்டிச்சாத்தான் 3 டி போன்ற வெற்றிப் படங்களை விநியோகித்தார்:. [4]

1991 முதல், கே.ஆர் தொடர்ச்சியாக நடுத்தர செலவில் தயாரிக்கபட் படங்களை இயக்கி தயாரித்துள்ளார். தமிழில் ஈரமான ரோஜாவே திரைப்படத்தை புதுமுகங்களைக் கொண்டு இவர் இயக்க அது மிகப்பெரிய அளவில் வணிக ரீதியான வெற்றியைப் பெற்றது. நடிகர்கள் விஜயகாந்த், ராம்கி, குஷ்பூ, ஊர்வசி ஆகியோரைக் கொண்டு பல சந்தர்ப்பங்களில் இவர் குறிப்பிடத்தக்க படங்களை உருவாக்கினார். இவர் மொத்தத்தம் பதினான்கு திரைப்படங்களை இயக்கியுள்ளார். 2005 ஆம் ஆண்டில் வெளியான இவரது டான்சர் திரைப்படத்தின் கதாநாயகன் மிகவும் குறிப்பிடத்தக்கவராவார். அப்படத்தில் நடித்த குட்டி ஒரு திறமையான நடனக் கலைஞர், திறமையான கலைஞரான அவர் தேசிய விருது, மூன்று மாநில விருதுகள், கனேடிய மதிப்புமிக்க திரைப்பட விழாவில் ஒரு விருதையும் வென்றார்.[சான்று தேவை] இந்த படம் லண்டன் ஊனமுற்றோர் கலை மன்றத்தில் ஒரு சிறப்புத் திரையிடலில் திரையிடப்பட்டது.[சான்று தேவை]

திரைப்படத் தயாரிப்பில் இவரது ஈடுபாட்டால் பல்வேறு இந்திய மொழிகளில் நாற்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களைத் தயாரித்துள்ளார். இவர் திரைப்பட விநியோகத்தில் ஈடுபட்டிருந்தபோது, இருபத்தி எட்டு திரையரங்குகளை தமிழ்நாட்டு நகரங்கள், பாண்டிச்சேரி, திருப்பதி போன்ற பகுதிகளில் குத்தகைக்கு எடுத்திருந்தார். 1984 முதல் 1993 வரை சென்னையில் சத்யம் சினிமாஸ் திரையரங்கையும் நடத்தினார்.

இந்தியாவின் முதல் 3டி திரைப்படமான மை டியர் குட்டிச்சாத்தான் படத்தை தமிழ், தெலுங்கிலும், கமலகாசன் நடித்த உரையாடல் இல்லாத படமான சேசும்படம் , தமிழில் முதல் 70 மிமீ திரைப்படமான ரஜினிகாந்த் நடித்த மாவீரன், விலங்குகளை முக்கிய பாத்தரமாக, அவை பேசக்கூடியதான குறிப்பிடத்தக்க படமனா எங்களையும் வாழ விடுங்கள் ; முதல் முறையாக அனாக்ளிஃப் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஸ்பை கிட்ஸ் 3டி; [5] நான்கு மொழிகளில் 3 டி யில் வெளியான முதல் படமான ஜெய் வேதாளம். போன்றவை தமிழ் திரைப்படத் துறையில் இவர் பதித்த சில சுவடுகள் ஆகும்:

2013 ஆம் ஆண்டில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது இவர், படத்தின் பெயர்களை பதிவு செய்தல், நொடித்துபோன திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு நிதியுதவி அளித்தல், தாமதத்துக்கு உள்ளான படங்களை வெளியிட உதவுவது உள்ளிட்ட பிரச்சினைகளில் பணியாற்றியுள்ளார். [6] பிற முயற்சிகளாக, படத்தின் விளம்பரச் செலவை ஒழுங்குபடுத்துதல், குறைத்தல் மற்றும் நடிகர்கள் தங்கள் படங்களின் அனைத்து விளம்பர செயல்பாடுகளிலும் கலந்துகொள்ள வேண்டும் போன்றவை ஆகும்.

கே.ஆர் 2003 இல் தமிழில் இதுதான் சினிமா என்ற புத்தகத்தையும் எழுதினார். அதில் திரைப்படத் துறையின் நுணுக்கங்களை விவரித்தும், அதன் எதிர்காலத்தை இன்றய காலகட்டத்தின் பார்வையில் பார்த்து எழுதினார். 1980 களின் முற்பகுதியில் இருந்து இவர் திரைப்படத் துறை மீது அதிகாரம் செலுத்துபவராகவும், தொழில்துறை நுண்ணறிவுகளையும், அடுத்த காலகட்டத்தில் முன்னோக்கி செல்லும் வழியையும் தருகிறார்.[சான்று தேவை]

கே.ஆர் ராடான் மீடியாவொர்க்சில் துணைத் தலைவராக பணியாற்றினார்.

உறுப்பினர் மற்றும் கௌரவ பதவிகள்[தொகு]

பதவி அமைப்பு குறிப்புகள்
தலைவர் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் 2013 முதல் 2014 வரை
தலைவர் தென்னிந்தியத் திரைப்பட வர்த்தக சபை 2000 முதல் 2001 வரை
நடுவர் குழு உறுப்பினர் தேசிய திரைப்பட விருதுகள் 2001
துணைத் தலைவர் தென்னிந்தியத் திரைப்பட வர்த்தக சபை 1985 முதல் 2000 வரை பல சந்தர்ப்பங்கள்
உறுப்பினர் தென்னிந்தியத் திரைப்பட வர்த்தக சபை 1985 முதல், சர்ச்சைக் குழு, தலைப்பு பதிவு, விளம்பரம் அனுமதி, சொத்து மேம்பாட்டுக் குழு, திரைப்பட நூற்றாண்டு அமைப்பின் மேலாண்மைக் குழு
தலைவர் தேசிய விருது தேர்வுக் குழு "ஆரோக்கியமான பொழுதுபோக்கு" க்கு
தலைவர் தேசிய விருது தேர்வுக் குழு "சிறந்த வெளிநாட்டு திரைப்பட விருது" என்ற பிரிவில் "ஆஸ்கார் விருது" க்கு
பொதுச்செயலர் தென்னிந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி இயக்குநர்கள் சங்கம்
நிறுவனர் தலைவர் தமிழ் திரைப்பட வர்தக சபை 1987 முதல் 1991 வரை
நிறுவனர், நிரந்தர அறங்காவலர் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களின் நல அறக்கட்டளை 1994 இல் நிறுவப்பட்டது
முன்னாள் தலைவர் சென்னை நகரம், செங்கற்பட்டு மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் நலச் சங்கம் 1985 முதல் 1988 வரை

இந்திய ஒன்றிய தகவல், ஒளிபரப்புத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுக்கு. முக்கிய பிரச்சினைகள் குறித்து ஆலோசனை வழங்குவதற்காக நாடு முழுவதிலுமிருந்து பல பிரமுகர்களை உள்ளடக்கிய எட்டு பேர் கொண்ட ஆலோசனைக் குழுவின் உறுப்பினர்களில் ஒருவராக 2001 இல் கேயார் (இந்திய திரைத்துறை திரையுலகம் தொடர்பாக) இருந்தார்.

தமிழகத் திரைப்படத்துறையின் நிலை குறித்து ஒரு வெள்ளை அறிக்கை சமர்ப்பிக்க 1989 ஆம் ஆண்டில் தமிழக அரசால் நியமிக்கப்பட்ட ஐந்து பேர் கொண்ட குழுவிலும் இவர் உறுப்பினராக பணியாற்றினார்.

திரைப்படவியல்[தொகு]

இயக்குநராக[தொகு]

ஆண்டு படம் குறிப்புகள்
1980 ஷிஷிரதில் ஓரு வசந்தம் மலையாள படம்; தயாரிப்பாளரும்
1991 ஈரமான ரோஜாவே தயாரிப்பாளரும்
1994 வனஜா கிரிஜா
1995 மாயா பஜார்
1996 இரட்டை ரோஜா தெலுங்கு படமான சுபா லக்னத்தின் மறுஆக்கம்
எனக்கொரு மகன் பிறப்பான் மலையாள படமான ஆதாதே கன்மனியின் மறுஆக்கம்
அலெக்சாண்டர்
1997 தாலி புதுசு தெலுங்கு பட தாலியின் மறுஆக்கம்
1998 கவலை படாதே சகோதரா மலையாள திரைப்படத்தின் கல்யாஞ்சி ஆனந்த்ஜியின் மறுஆக்கம்
தர்மா இந்தி திரைப்படமான ஜிடியின் மறுஆக்கம்
கும்பகோணம் கோபாலு கன்னட படமான கௌரி கணேஷாவின் மறுஆக்கம்
1999 சுயம்வரம்
2000 காதல் ரோஜாவே இந்தி திரைப்படமான தில் ஹை கே மந்தா நஹின் மறுஆக்கம்
2005 டான்சர் தயாரிப்பாளரும்; சிறந்த எதிர்மறை நாயகன் மற்றும் சிறந்த தயாரிப்பாளருக்கான தமிழக அரசு திரைப்பட விருது

விநியோகத்தராக[தொகு]

ஆண்டு படம் பணி முதன்மை நடிகர்
தயாரிப்பாளர் விநியோகத்தர்
1981 தில்லு முல்லு ஆம் Starring இரசினிகாந்து
1981 ராம் லட்சுமண் ஆம் Starring கமல்ஹாசன்
1981 எங்க ஊரு கண்ணகி ஆம் Starring சரிதா
1982 நெஞ்சில் ஒரு இராகம் ஆம் Starring சரிதா தியாகராஜன்
1982 ரங்கா ஆம் Starring இரசினிகாந்து
1982 ராணித்தேனீ ஆம் Starring கமல்ஹாசன் விருந்தினர் தோற்றத்தில்
1982 பயணங்கள் முடிவதில்லை ஆம் Starring மோகன்
1982 தேவியின் திருவிளையாடல் ஆம் Starring தியாகராஜன் & கே. ஆர். விஜயா
1982 பொய் சாட்சி ஆம் Starring பாக்யராஜ்
1982 நான் குடித்துக் கொண்டே இருப்பேன் ஆம் Starring கே. ஆர். விஜயா, தேங்காய் சீனிவாசன்
1983 தலையணை மந்திரம் ஆம் Starring Sulakshna & பாண்டியன்
1983 சஷ்டி விரதம் ஆம் Starring சிவகுமார்
1983 தாய் வீடு ஆம் Starring இரசினிகாந்து
1984 வைதேகி காத்திருந்தாள் ஆம் Starring விசயகாந்து, ரேவதி
1984 வாழ்க்கை ஆம் Starring சிவாஜி கணேசன் & அம்பிகா
1984 மை டியர் குட்டிச்சாத்தான் 3டி ஆம் இந்தியாவின் முதல் 3டி படம்
1984 நல்ல நாள் ஆம் Starring விசயகாந்து, தியாகராஜன்
1984 தம்பிக்கு எந்த ஊரு ஆம் Starring இரசினிகாந்து & மாதவி
1984 அன்புள்ள ரஜினிகாந்த் ஆம் Starring இரசினிகாந்து
1984 குவா குவா வாத்துகள் ஆம் Starring சிவகுமார்
1985 பாடும் வானம்பாடி ஆம்
1985 மர்ட் (இந்தி படம்) ஆம் தென்னிந்திய விநியோக உரிமை, தமிழ் மறுஆக்க உரிமை
1985 பாடும் பறவைகள் ஆம் அவசேனா படத்தின் தமிழ் மோழியாக்கம்
1985 ஜப்பானில் கல்யாண ராமன் ஆம் Starring கமல்ஹாசன்
1985 அடுத்தாத்து ஆல்பார்ட் ஆம் Starring பிரபு
1985 பூவே பூச்சூடவா ஆம் Starring எஸ். வி. சேகர், பத்மினி, ந்தியா
1985 அவன் ஆம் Starring அர்ஜுன்
1985 அந்தஸ்து ஆம் Starring முரளி
1985 படிக்காத பண்ணையார் ஆம் Starring சிவாஜி கணேசன்
1985 நானே ராஜா நானே மந்திரி ஆம் Starring விசயகாந்து
1985 சிந்து பைரவி ஆம் Starring சிவகுமார், சுஹாசினி
1985 ஜெய் வேதாளம் 3டி ஆம் ஆம் ஜெய் வேதாளம் படத்தின் தமிழ் மொழியாக்கம்
1985 குங்குமச்சிமிழ் ஆம் Starring மோகன்
1985 பூ ஒன்று புயலானது ஆம் பிரதிகட்டனா படத்தின் தமிழ் மொழியாக்கம்
1986 விக்ரம் ஆம் Starring கமல்ஹாசன்
1986 புன்னகை மன்னன் ஆம் Starring கமல்ஹாசன்
1986 மைதிலி என்னை காதலி ஆம் Starring டி. ராஜேந்தர்
1986 மாவீரன் ஆம் முதல் 70எம்.எம் தமிழ் திரைப்படம்
1987 சின்னபூவே மெல்லபேசு ஆம் Starring பிரபு & ராம்கி
1987 வேலைக்காரன் ஆம் Starring இரசினிகாந்து
1987 மனதில் உறுதி வேண்டும் ஆம் Starring சுஹாசினி
1987 திருமதி ஒரு வெகுமதி ஆம் Starring விசு
1987 எங்க ஊரு பாட்டுக்காரன் ஆம் Starring ராமராஜன்
1987 பேசும் படம் ஆம் Starring கமல்ஹாசன்
1988 என் ஜீவன் பாடுது ஆம் Starring கார்த்திக் & சரண்யா
1988 இல்லம் ஆம் Starring சிவகுமார் & அமலா
1988 மணமகளே வா ஆம் Starring பிரபு, ரதா
1988 பறவைகள் பலவிதம் style="background: #90ff90; color: black; vertical-align: middle; text-align: center; " class="table-yes"|ஆம் ஆம் Starring ராம்கி & நிரோஷா
1989 சோலை குயில் ஆம் Starring கார்த்திக், ராகிணி
1989 மாப்பிள்ளை ஆம் Starring இரசினிகாந்து
1992 ராசுக்குட்டி ஆம் Starring பாக்யராஜ்
1990 மைக்கேல் மதன காமராஜன் ஆம் Starring கமல்ஹாசன்
1990 பெண்கள் வீட்டின் கண்கள் ஆம் Starring விசு
1991 குணா ஆம் Starring கமல்ஹாசன்
1991 தந்துவிட்டேன் என்னை ஆம் Starring விக்ரம்
1992 ஆவாரம் பூ ஆம் ஆம் Starring வினீத்
1992 சின்னமருமகள் ஆம் ஆம் Starring சிவாஜி கணேசன்
1994 வீரா ஆம் Starring இரசினிகாந்து
2007 பரட்டை என்கிற அழகுசுந்தரம் ஆம்
2015 ஆம் குலோபல் யுனைட்டடு மீடியா மூலமாக
2015 யாகாவாராயினும் நா காக்க ஆம் குலோபல் யுனைட்டடு மீடியா மூலமாக
2015 பாகுபலி ஆம் குலோபல் யுனைட்டடு மீடியா மூலமாக (தமிழ்/ மலையாளம்/ தெலுங்கு)
2015 லார்ட் லிவிங்ஸ்டன் 7000 கண்டி ஆம் குலோபல் யுனைட்டடு மீடியா மூலமாக
2015 தூங்காவனம் ஆம் குலோபல் யுனைட்டடு மீடியா மூலமாக
2016 த ஜங்கில் புக் ஆம் குலோபல் யுனைட்டடு மீடியா மூலமாக
2016 கம்மட்டிபடம் ஆம் குலோபல் யுனைட்டடு மீடியா மூலமாக
2016 தேவி ஆம் குலோபல் யுனைட்டடு மீடியா மூலமாக
2017 பாகுபலி 2 ஆம் குலோபல் யுனைட்டடு மீடியா மூலமாக
2017 செர்லக் டாம்ஸ் ஆம் குலோபல் யுனைட்டடு மீடியா மூலமாக
2017 மெர்சல் ஆம் குலோபல் யுனைட்டடு மீடியா மூலமாக
2018 கே.சி.எஃப் அத்தியாயம் ஒன்று ஆம் கே.ஆர் இன்ஃபோட்டின்மெண்ட்
2019 யாத்ரா ஆம் கே.ஆர் இன்ஃபோட்டின்மெண்ட்
2020 ஆயிரம் பொற்காசுகள் ஆம் கே.ஆர் இன்ஃபோட்டின்மெண்ட்

நடிகராக[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. "டைரக்டர், தயாரிப்பாளர், தியேட்டர் அதிபர், விநியோகஸ்தர் 4 துறைகளில் சாதனை படைத்த 'கேயார்'எதிர் நீச்சல் போட்டு வெற்றி பெற்றார்". Cinema.maalaimalar.com. 10 February 2014 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Want to restore the honour and respect of TFPC: Kothandaramiah". The Times of India. 13 September 2013. 8 February 2014 அன்று மூலம் பரணிடப்பட்டது. 10 February 2014 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Clean sweep for KR group in TFPC elections!". Sify.com. 8 September 2013. 10 September 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. 10 February 2014 அன்று பார்க்கப்பட்டது.
  4. "சோதனைகளை வென்று 'மை டியர் குட்டிச்சாத்தான்' மகத்தான வெற்றி!". Cinema.maalaimalar.com. 10 February 2014 அன்று பார்க்கப்பட்டது.
  5. "Spy Kids with a difference". The Hindu. 2004-03-16. 16 March 2014 அன்று பார்க்கப்பட்டது.
  6. Tamilcinema24.com (1 January 1970). "Result of Tamil Nadu Producer council election – Result of Tamil Nadu Producer Council Election – Kr- Keyar- Thanu- Viay Team- Suriya Team". Tamilcinema24.com. 8 பிப்ரவரி 2014 அன்று மூலம் பரணிடப்பட்டது. 10 February 2014 அன்று பார்க்கப்பட்டது.
  7. https://www.youtube.com/watch?v=iiifQ1hLpms

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோதண்ட_இராமையா&oldid=3552099" இருந்து மீள்விக்கப்பட்டது