பாண்டியன் (நடிகர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பாண்டியன்
பாண்டியன்
பாண்டியன்
பிறப்பு5 ஜனவரி 1959
மதுரை, இந்தியா
இறப்பு10 ஜனவரி 2008 (அகவை 49)
மதுரை, இந்தியா
தேசியம்இந்தியன்
பணிநடிகர், அரசியல்வாதி
செயற்பாட்டுக்
காலம்
1983-2008
வாழ்க்கைத்
துணை
லதா
பிள்ளைகள்ரகு

பாண்டியன் (Pandiyan; 5 சனவரி 1959 – 10 சனவரி 2008), தமிழ்த் திரைப்பட நடிகராவார். பாரதிராஜா இயக்கத்தில் வெளியான மண்வாசனை படம் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானவர்.[1]

மண்வாசனையைத் தொடர்ந்து ஏராளமான தமிழ் படங்களில் நடித்து புகழ் பெற்றார். இவற்றில் புதுமைப்பெண், ஆண்பாவம், நாடோடித் தென்றல், கிழக்குச் சீமையிலே போன்ற படங்கள் இவருக்கு பெயர் பெற்று தந்தன.

நாளடைவில் பட வாய்ப்புகள் குறைந்ததைத் தொடர்ந்து இவர் சின்னத்திரை தொடர்களிலும் நடித்துவந்தார். 2001 ஆம் ஆண்டு முதல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலும் சேர்ந்து அக்கட்சிக்காகக் கூட்டங்களில் பேசி வந்தார்.

மறைவு[தொகு]

நோய் வாய்ப்பட்டிருந்த பாண்டியன் ஜனவரி 10, 2008 அன்று மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலை 10 மணியளவில் தனது 48வது வயதில் காலமானார். இவருக்கு லதா என்ற மனைவியும், ரகு என்கிற 15 வயது மகனும் உள்ளனர்.[2]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாண்டியன்_(நடிகர்)&oldid=3367731" இருந்து மீள்விக்கப்பட்டது