காந்தி, மை ஃபாதர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
காந்தி, மை ஃபாதர்
இயக்கம்ஃபெரோஸ் அப்பாஸ் கான்
தயாரிப்புஅனில் கபூர்
கதைஃபெரோஸ் அப்பாஸ் கான்
சந்துலால் தலால் (புத்தகம்)
நீலம்பென் பாரிக் (புத்தகம்)
இசைபியூஷ் கனோஜியா
நடிப்புதர்ஷன் ஜரிவாலா
அக்சய் கண்ணா
பூமிகா சாவ்லா
ஷிபலி ஷா
ஒளிப்பதிவுடேவிட் மெக்டொனால்ட்
படத்தொகுப்புஏ. ஸ்ரீகர் பிரசாத்
வெளியீடுஆகத்து 3, 2007 (2007-08-03)
ஓட்டம்136 நிமிடங்கள்.
மொழிஇந்தி, குசராத்தி, ஆங்கிலம்

காந்தி, மை ஃபாதர் (Gandhi, My Father) என்பது 2007 ஆண்டைய இந்திய வாழ்கை வரலாற்று நாடகத் திரைப்படமாகும். இப்படத்தை ஃபெரோஸ் அப்பாஸ் கான் ( நடிகர் பெரோஸ் கானுடன் குழப்பிக் கொள்ள வேண்டாம்) எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தை பாலிவுட் நடிகர் அனில் கபூர், தயாரித்துள்ளார். இப்படம் 2007 ஆகத்து 3 அன்று வெளியானது.[1]

இப்படமானது மகாத்மா காந்திக்கும் அவருடைய மூத்த மகன் ஹரிலால் காந்திக்கும் இடையிலான பிணக்குகள் நிறைந்த உறவை விவரித்துள்ளது.[1]

பின்னணி[தொகு]

சந்துலால் பாகுபாய் தலால் என்பவர் ஹரிலால் காந்தியின் வாழ்க்கை வரலாற்றை, ஹரிலால் காந்தி: என்ற பெயரில் எழுதிய நூலை அடிப்படையாக கொண்டு இப்படமானது எடுக்கப்பட்டுள்ளது.[2] கானின் நாடகமான, மகாத்மா விசஸ். காந்தி ,[3] என்ற நாடகத்தில் இருந்து இப்படம் மாறுபட்டது. குஜராத்தி எழுத்தாளரான திங்கர் ஜோஷி எழுதிய ஒரு புதினமும் இதேபோன்ற ஒரு கருவை கொண்டிருந்தது.[4] இப்படமானது தென்னாப்பிரிக்கா மற்றும் இந்தியாவின் மும்பை, அகமதாபாத் போன்ற நகரங்களிலும் படமாக்கப்பட்டது.[1]

கதை[தொகு]

இப்படத்தில் தந்தையான மோகன்தாஸ் காந்திக்கும் அவருடைய மூத்த மகனான ஹரிலால் காந்திக்கும் இடையிலான பிணக்குகள் நிறைந்த உறவு விவரிக்கப்பட்டுள்ளது. துவக்கத்தில் இந்த இருவருக்குமான கனவுகள் எதிர் எதிர் திசைகளில் இருந்தன. ஹரிலாலின் இலச்சியமானது வெளிநாடு சென்று தன் தந்தையைப்போல வழக்கறிஞராக கல்வி பெற விரும்புகிறார், ஆனால் காந்தியோ தன்மகன் ஹரிலால் இந்தியாவில் இருந்து தன் இலட்சியங்கள், கொள்கைகள் போன்றவற்றிற்காக போராடுவார் என நம்புகிறார். ஹரிலால் வெளிநாடு சென்று படிக்கும் வாய்ப்பை காந்தி வழங்காதது, ​​ ஹரிலலுக்கு ஒரு அடியாகிறது. இதனால் அவர் தனது தந்தையின் நோக்கத்தை கைவிட்டு, தன மனைவி குலாப் (பூமிகா சாவ்லா) மற்றும் குழந்தைகளுடன் தென் ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு வருகிறார்.

கல்வியில் பட்டயத்தை பெற வந்த அவர், அதில் தொடர்ச்சியாக தோல்வியடைகிறார். அது பண முடையை உண்டாக்குகிறது. பணத்தை சம்பாத்திக்க அவர் மேற்கொள்ளும் பல திட்டங்களும் தோல்வியடைந்து, குடும்பம் வறுமையில் விழுகிறது. இதனால் வேறுவழியின்றி குலாப் குழந்தைகளுடன் தன் பெற்றோரின் வீட்டிற்குத் திரும்பினார், அங்கு அவர் இறுதியில் காய்ச்சல் நோயினால் இறந்துவிடுகிறார். குடும்ப உறவுகளைத் துறந்த ஹரிலால் குடிகாரனாக மாறுகிறார். இஸ்லாம் சமயத்திற்கு மாறித் தன் பெயரை அப்துல்லா காந்தி என்று பெயரை மாற்றிக்கொள்கிறார். பின்னர் பலரின் வற்புறுத்தலால் மீண்டும் தாய் சமயமான இந்து சமயத்திற்கே திரும்பகிறார். இருவரும் இடையில் சமரசம் ஏற்படும் முன்னர் காந்தி படுகொலை செய்யப்படுகிறார். ஹரிலால் தனது தந்தையின் இறுதி ஊர்வலத்தை கிட்டத்தட்ட அன்னியராகவே பார்க்கிறார், அவரைச் சுற்றி உள்ளவர்களும் கிட்டத்தட்ட இவரைத் தெரியாதவர்களாகவே உள்ளனர்.   சிறிது காலத்திற்குப் பிறகு, தனிமையிலும், வறுமையிலும், தன் சொந்த அடையாளத்தைக் கண்டுபிடிக்க இயலாமலும் இறந்துபோகிறார்.[1]

நடிகர்கள்[தொகு]

விருதுகள்[தொகு]

2007 தேசிய திரைப்பட விருதுகள், இந்தியா[6][தொகு]

 • சிறப்பு ஜூரி விருது - ஃபெரோஸ் அப்பாஸ் கான் & அனில் கபூர்
 • சிறந்த திரைக்கதை - ஃபெரோஸ் அப்பாஸ் கான்
 • சிறந்த துணை நடிகர் - தர்ஷன் ஜரிவாலா

2008 ஜீ சினிமா விருதுகள்[7][தொகு]

 • விமர்சகர்கள் விருது (சிறந்த திரைப்படம்) - அனில் கபூர்
 • விமர்சகர்கள் விருது (சிறந்த நடிகை) - ஷிபலி ஷா

2007 ஆசிய பசிஃபிக் திரை விருதுகள்[8][தொகு]

 • சிறந்த திரைக்கதை - ஃபெரோஸ் அப்பாஸ் கான்

குறிப்புகள்[தொகு]

 1. 1.0 1.1 1.2 1.3 1.4 Gandhi, My Father, 2018-08-23 அன்று பார்க்கப்பட்டது
 2. [1]
 3. Rajeev Tharoor-rajeevt@pigtailpundits.com pigtailpundits@pigtailpundits.com. "A Distinguished Indian Theatre Director of highly acclaimed plays". Feroz Khan. மூல முகவரியிலிருந்து 6 February 2012 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2012-08-04.
 4. "The Mahatma and his son". The Hindu (Chennai, India). 22 July 2007. http://www.hindu.com/mag/2007/07/22/stories/2007072250130200.htm. 
 5. "Gandhi My Father Cast & Director - Yahoo! Movies". Movies.yahoo.com (2011-04-20). பார்த்த நாள் 2012-08-04.
 6. "55th National Film Awards announced". NDTV.com. https://www.ndtv.com/india-news/55th-national-film-awards-announced-401045. 
 7. "Zee Cine Awards 2008 winners announced" (in en). Zee News. 2008-04-23. http://zeenews.india.com/home/zee-cine-awards-2008-winners-announced_438321.html. 
 8. "Asia Pacific Screen Awards Winners Announced - Asia Pacific Screen Awards" (in en-US). Asia Pacific Screen Awards. 2007-11-13. https://www.asiapacificscreenawards.com/news-events/asia-pacific-screen-awards-winners-announced. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=காந்தி,_மை_ஃபாதர்&oldid=2704306" இருந்து மீள்விக்கப்பட்டது