உள்ளடக்கத்துக்குச் செல்

பெரோஸ் கான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெரோஸ் கான்
2005 இல் பெரோஸ் கான்
பிறப்புசுல்பிகர் அலி ஷா கான்
(1939-09-25)25 செப்டம்பர் 1939
பெங்களூர், மைசூர் அரசு, பிரித்தானிய இந்தியா
(நவீன கருநாடகம், இந்தியா)
இறப்பு27 ஏப்ரல் 2009(2009-04-27) (அகவை 69)
பெங்களூர், கருநாடகம், இந்தியா
பணி
  • நடிகர்
  • திரைப்படத் தொகுப்பாளர்
  • தயாரிப்பாளர்
  • இயக்குநர்
செயற்பாட்டுக்
காலம்
1960–2007
வாழ்க்கைத்
துணை
சுந்தரி
(தி. 1965; ம.மு. 1985)
பிள்ளைகள்2 மகள்கள்
விருதுகள்பிலிம்பேர் வாழ்நாள் சாதனையாளர் விருது (2001)[1]

பெரோஸ் கான் (Feroz Khan) (பிறப்பு சுல்பிகர் அலி ஷா கான்) (25 செப்டம்பர் 1939-27 ஏப்ரல் 2009 )[2][3] ஓர் இந்தியத் திரைப்பட நடிகரும், திரைக்கதை ஆசிரியரும், தயாரிப்பாளரும் மற்றும் இயக்குநரும் ஆவார். இவர் 60 க்கும் மேற்பட்ட படங்களில் தோன்றி பாலிவுட்டின் பிரபலமான குறியீட்டின் ஒருவராக ஆனார்.[4][5] பெரோஸ் கான் அர்சூ (1965) சஃபர் (1970) உபாஸ்னா (1971) மேலா (1971) அப்ராத் (1972), கோட்டே சிக்காய் (1974) காலா சோனா (1975) தர்மாத்மா (1975), நாகின் (1976) குர்பானி (1980) கச்சே ஹீரே (1982) ஜான்பாஸ் (1986) தயவன் (1988), யால்கர் (1992), வெல்கம் (2007)[6][7] போன்ற வெற்றிகரமான இந்தித் திரைப்படங்களில் நடித்ததற்காக அறியப்படுகிறார்.

1970 ஆம் ஆண்டில் ஆத்மி அவுர் இன்சான் (1969) படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான பிலிம்பேர் விருதினை வென்றார். பின்னர் 2000 ஆம் ஆண்டில் பிலிம்பேர் வாழ்நாள் சாதனையாளர் விருதைப் பெற்றார்.[8] இவர் “கிழக்கின் [[கிளின்ட் ஈஸ்ட்வுட்]”] என்று அழைக்கப்படுகிறார்.[9]

இளமை வாழ்க்கை

[தொகு]

பெரோஸ் கான், செப்டம்பர் 25,1939 [10][11][12] அன்று இந்தியாவின் பெங்களூரில், கசுனியைச் சேர்ந்த ஆப்கானியரான சாதிக் அலி கான் மற்றும் ஈரானைச் சேர்ந்த பாரசீக வம்சாவளியைச் சேர்ந்த பாத்திமா ஆகியோருக்கு பிறந்தார்.[13][14][15] இவரது தாயின் குடும்பம் குதிரை வளர்ப்பில் ஈடுபட்டிருந்தது.[16]

பெரோஸ் கான், பெங்களூரில் தனது ஆரம்பக் கல்வியைப் பயின்றார். கிளர்ச்சியாளராக அறியப்பட்ட இவர் பள்ளிகளில் இருந்து வெளியேற்றப்பட்டார். தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற போதிலும், கல்லூரிக்குச் செல்லவில்லை. பின்னர் திரைப்படங்களில் பங்கேற்க மும்பை சென்றார்.[17]

தொழில் வாழ்க்கை

[தொகு]

1960 ஆம் ஆண்டில் தீதி என்ற படத்தில் இரண்டாவது கதாநாயகனாக அறிமுகமானார்.[18][19]

1960கள் மற்றும் 1970களின் முற்பகுதியில், இவர் பிற நடிகர்களுடன் குறைந்த செலவில் உருவாகும் படங்களில் தோன்றினார். 1962 ஆம் ஆண்டில், சிமி கரேவாலுக்கு இணையாக டார்சான் கோஸ் டு இந்தியா என்ற ஆங்கில மொழி திரைப்படத்தில் நடித்தார்.

1965 ஆம் ஆண்டில் பானி மஜூம்தாரின் ஊன்சே லாக் (1965) என்ற படத்தில் இவருக்கு முதல் பெரிய வெற்றி கிடைத்தது. இத்திரைப்படத்தில் இவர் ராஜ் குமார் மற்றும் அசோக் குமார் ஆகியோருடன் நடித்திருந்தார். இதைத் தொடர்ந்து சாம்சன், ஏக் சபெரா ஏக் லூட்டேரா மற்றும் சார் தர்வேஷ் போன்ற சிறிய செலவில் தயாரிக்கப்பட்ட வெற்றி படங்கள் வந்தன.[20] மீண்டும், அதே ஆண்டில், சாதனா நடித்த ஆர்ஜூ என்ற இசையை அடிப்படையாகக் கொண்ட படத்தில் தியாகம் செய்யும் காதலனாக நடித்தார். ஆத்மி அவுர் இன்சான் (1969) திரைப்படத்தின் மூலம் சிறந்த துணை நடிகருக்கான தனது முதல் பிலிம்பேர் விருதைப் பெற்றார். யால்கர் (1992) என்ற திரைப்படத்தை இயக்கி நடித்த பிறகு, இவர் 11 ஆண்டுகள் நடிப்பிலிருந்து நீண்ட இடைவெளி எடுத்துக் கொண்டார்.

2003 ஆம் ஆண்டில், ஜானாஷீன் படத்தைத் தயாரித்து இயக்கினார். இதில் இவரது மகன் பர்தீன் கானுடன் இணைந்து நடித்திருந்தார். இந்த படம் இவர் இயக்கிய கடைசி படமாகும்.

சொந்த வாழ்க்கை

[தொகு]

பெரோஸ் கான் 1965 இல் சுந்தரி என்பவரை மணந்தார். ஆனாலும் இவர்கள் 1985 இல் விவாகரத்து செய்தனர்.[21] சுந்தரி சிந்தி இந்து பின்னணியைச் சேர்ந்தவர் [22][23]

இவர்களுக்கு லைலா கான் மற்றும் பர்தீன் கான் என இரு மகள்கள் பிறந்தனர்.

இறப்பு

[தொகு]

நுரையீரல் புற்றுநோய் பாதிக்கப்பட்டிருந்த பெரோஸ் கான் 27 ஏப்ரல் 2009 அன்று இறந்தார். [24]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Bollywood's style icon Feroz Khan is dead தி எகனாமிக் டைம்ஸ், 27 April 2009
  2. "Remembering Feroz Khan on his 82nd birth anniversary"[1]
  3. Jaskiran Chopra (29 September 2018),"Feroz Khan: From a shy young hero to self-styled cowboy star", DailyO. Retrieved 17 March 2019.
  4. "Feroz Khan". The Daily Telegraph (London). 27 April 2009 இம் மூலத்தில் இருந்து 12 January 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://ghostarchive.org/archive/20220112/https://www.telegraph.co.uk/news/obituaries/culture-obituaries/film-obituaries/5232098/Feroz-Khan.html. "..one of Bollywood's biggest stars; with his swagger and tough-guy styling he was compared to American leading men like Clint Eastwood or Steve McQueen." 
  5. 'Feroz Khan was an Indian style icon' R G Vijayasarathy in Bengaluru, ரெடிப்.காம், 27 April 2009.
  6. "Feroz Khan Birth Anniversary: A Look at His 5 Superhit Films". 25 September 2020.
  7. "Blockbusters Of Twenty-Five Years (1973-1997)". 13 October 2023.
  8. Bollywood's style icon Feroz Khan is dead தி எகனாமிக் டைம்ஸ், 27 April 2009
  9. "Feroz Khan Death Anniversary: Remembering Bollywood's Clint Eastwood". news18.com. 27 April 2022.
  10. "Feroz Khan: A life in multi-colour". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 7 December 2003. Archived from the original on 19 December 2024.
  11. Vijayasarathy, R G (27 April 2009). "Feroz Khan: 1939-2009". ரெடிப்.காம்.
  12. "Feroz Khan laid to rest in Bangalore". Mangalorean.com. 29 ஏப்ரல் 2009. Archived from the original on 14 சூலை 2014.
  13. "Feroz Khan". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம். Retrieved 2012-11-02.
  14. Bharati, Dubey (April 28, 2009). "Feroz Khan". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா இம் மூலத்தில் இருந்து September 17, 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110917032117/http://articles.timesofindia.indiatimes.com/2009-04-28/mumbai/28055231_1_feroz-khan-fardeen-sanjay-khan. 
  15. "Feroz Khan, Bollywood Actor, Dies at 69". The New York Times. Agence France-Presse. April 29, 2009. https://www.nytimes.com/2009/04/29/arts/29khan.html. 
  16. "Feroz Khan: A life in multi-colour". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 7 December 2003. Archived from the original on 19 December 2024.
  17. "Feroz Khan: A life in multi-colour". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 7 December 2003. Archived from the original on 19 December 2024."Feroz Khan: A life in multi-colour". The Times of India. 7 December 2003. Archived from the original on 19 December 2024.
  18. "Feroz Khan - Bollywood's all time style icon". https://www.indiatoday.in/movies/story/feroz-khan-bollywoods-all-time-style-icon-45798-2009-04-27. 
  19. "We remember the late actor, Feroz Khan". 25 Sep 2019. https://www.filmfare.com/features/we-remember-the-late-actor-feroz-khan-36361-2.html. 
  20. "Review: Blast from the past: Oonche Log (1965)". தி இந்து (Chennai, India). 1 May 2009 இம் மூலத்தில் இருந்து 26 May 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090526212152/http://www.hindu.com/fr/2009/05/01/stories/2009050150420400.htm. 
  21. "Feroz Khan Birth anniversary: Lesser-known facts about the legendary actor". newsd.in. 24 September 2019.
  22. "fardeenfkhan". Instagram. 22 September 2023.
  23. "Fardeen Khan's birthday: 6 Facts about the actor that you must not have known". Radio Mirchi. 22 September 2023.
  24. "Feroze Khan believed in living life king size" (in en). Hindustan Times. hindustantimes.com. 27 April 2009. https://www.hindustantimes.com/entertainment/feroze-khan-believed-in-living-life-king-size/story-0N3Abv25llvmaZVMcKzzjI.html. 

வெளி இணைப்புகள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரோஸ்_கான்&oldid=4227245" இலிருந்து மீள்விக்கப்பட்டது