தைப்பிங் ஏரித் தோட்டம்
தைப்பிங் ஏரித் தோட்டம் Taiping Lake Gardens | |
---|---|
வகை | பொதுத் தோட்டம் |
அமைவிடம் | மலேசியா, பேராக், தைப்பிங் |
ஆள்கூறு | 4°51′14″N 100°44′0″E / 4.85389°N 100.73333°E |
உருவாக்கம் | 1880 |
இயக்குபவர் | தைப்பிங் நகர மன்றம் |
இணையதளம் | http://www.mptaiping.gov.my/ |
தைப்பிங் ஏரித் தோட்டம் (ஆங்கிலம்: Taiping Lake Gardens; மலாய்: Taman Tasik Taiping;) என்பது பிரித்தானியர் ஆட்சியின் போது மலேசியாவில் உருவாக்கப்பட்ட முதல் பொதுத் தோட்டமாகும். இந்தத் தோட்டமானது மெக்சுவல் மலை அருகே அமைந்துள்ளது. 1880-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இந்த ஏரித் தோட்டம், மலேசியாவிலேயே மிகப் பழமையான ஏரித் தோட்டங்களில் ஒன்றாகக் கருதப் படுகிறது.[1]
இந்த ஏரித் தோட்டம், தைப்பிங் நகர மையத்திற்கும் தைப்பிங் விலங்கு சரணாலயத்துக்கும் (Taiping Zoo) அருகில் அமைந்துள்ளது.
இந்த இடம் பினாங்கு விமானத் தளத்தில் இருந்து 90 நிமிட பயண நேரத்தில் அமைந்திருக்கிறது. தைப்பிங் தோட்டப் பகுதி, வாரத்தில் 2 நாட்கள் மழை கொட்டும் பகுதியாகும். இந்தப் பகுதி எங்கும் ஏரிகளும் புல்வெளிகளும் நிறைந்து காணப்படுகின்றன.[2]
வரலாறு
[தொகு]தைப்பிங் ஏரித் தோட்டம் 1880-ஆம் ஆண்டில் ஒரு பொதுத் தோட்டமாக நிறுவப் படுவதற்கு முன்பு முதலில் அது ஒரு சுரங்கத் தளமாக இருந்தது. கர்னல் ராபர்ட் சாண்டிலேண்ட்ஸ் பிரோட் வாக்கர் (Colonel Robert Sandilands Frowd Walker) என்பவரின் சிந்தனையில் உருவானதுதான் தைப்பிங் ஏரித் தோட்டம்.[3]
கர்னல் ராபர்ட் பிரோட் வாக்கர், 1880-ஆம் ஆண்டுகளில் பேராக் மாநிலத்தில் ஆயுதமேந்திய காவல் துறையினருக்குத் தலைவராக இருந்தவர் (Perak Armed Police). பேராக் ஈயச் சுரங்கங்களில் நடைபெற்று வந்த சீனர் கோஷ்டி பூசல்களை அடக்குவதில் வெற்றி கண்டவர்.[4][5]
பொழுதுபோக்கு பூங்கா
[தொகு]கைவிடப்பட்ட ஓர் ஈயச் சுரங்கத்தின் நிலம், சுங் கெங் கியூ (Chung Keng Quee) என்பவரால், பொது மக்களின் பயன்பாட்டிற்கான ஒரு பொழுதுபோக்கு பூங்காவாக வழங்கப்பட்டது.
1884-ஆம் ஆண்டில் தைப்பிங் ஏரித் தோட்டத்தில் புல், பூ மரங்கள் நடப்பட்டன; தோட்டத்தின் ஒரு பகுதியில் மாடுகளைத் தவிர்ப்பதற்காக வேலிகள் அமைக்கப்பட்டன.[6] இந்தப் பூங்கா திறக்கப் பட்டதில் இருந்து இன்று வரையில் நன்கு பராமரிக்கப்பட்டு வருகிறது.
ஏரிகளும் குளங்களும்
[தொகு]- அலமண்டா குளம் (Alamanda Pond)
- தீவுக் குளம் (Island Pond)
- ஜங்கிள் ஏரி (Jungle Lake)
- அப்லோங் குளம் (Oblong Pond)
- பெவிலியன் குளம் (Pavilion Pond)
- தெற்கு ஏரி (South Lake)
- அன்னப் பறவை ஏரி (Swan Lake)
- மேற்கு ஏரி (West Lake)
சுற்றுலா இடங்கள்
[தொகு]- ஏரிகளும் குளங்களும் - தைப்பிங் ஏரித் தோட்டம் முழுவதும் சுமார் 10 செயற்கை ஏரிகள் மற்றும் குளங்கள் உள்ளன.
- மேக்ஸ்வெல் மலை (Bukit Larut) - ஒரு மலை வாசத்தலம். இது 1000 மீட்டர் உயரத்தில் உள்ளது. காட்டில், மலையேற்றத்தில் ஈடுபடுபவர்கள், முகாமிடுவதற்கு ஏற்ற இடம். நான்கு சக்கர ஊர்திகளைக் கொண்டும் அணுகக் கூடியது.
மலைப் பகுதியில் விடுதி வசதிகள் உள்ளன. முன்பதிவு வசதி இல்லை பார்வையாளர்கள் முன்னதாகவே (காலை 8 மணிக்கு) சென்று நுழைவுச் சீட்டு வாங்க வேண்டும். பார்வையாளர்கள் மேலே செல்ல விரும்பும் நேரத்தையும் கீழே இறங்கும் நேரத்தையும் குறிப்பிடவேண்டும்.
ஒரு நபர் சுற்றிவர கட்டணச் செலவு ரிங்கிட் RM 4.00 (US $ 1.40) ஆகும். சராசரியாக நடந்து செல்ல 3 - 4 மணிநேரம் ஆகும்; ஜீப் பயணத்தில் 25 நிமிடங்கள் ஆகும்.
- துலிப் தோட்டம் (Tulip garden) - மெக்சுவல் மலையில் அமைந்துள்ள இது மலேசியாவில் நிறுவப்பட்ட முதல் துலிப் பண்ணை ஆகும்.
துலிப் பண்ணையில் நுழைவுக் கட்டணமானது பருவ காலம் அல்லாத காலத்தில் ரிங்கிட் RM 1. (அமெரிக்க டாலர் $ 0.35) மற்றும் பருவகாலத்தில் RM2 (US $ 0.70) ஆகும்.
- தைப்பிங் விலங்கு காட்சியகம் (Taiping Zoo) மற்றும் தைப்பிங் இரவு சவாரி (Night Safari Taiping) - மலேசியாவில் நிறுவப்பட்ட முதல் உயிரியல் பூங்கா.
- பகல் உயிரியல் பூங்கா (Day zoo): பெரியவர்கள் RM12, குழந்தைகள் (3–12 வயது) RM8 (US$2.80); பள்ளி குழுக்களுக்கும், மூத்த குடிமக்களுக்கும் (வயது 55+) மற்றும் சுற்றுலா குழுவினர் (20 பேருக்கு மேல்); கட்டணச் சலுகை அளிக்கப் படுகிறது. திறப்பு 08:30-18:00, உணவு நேரம் கலை 10 மணி மற்றும் மதியம்
- இரவு சவாரி: பெரியவர்கள் RM20, குழந்தைகள் (3–12 வயது) RM10 (US$3.50); மூத்த குடிமக்களுக்கும் (60+) மற்றும் சுற்றுலா குழுவினர் (20+) போன்றோருக்கு கட்டணச் சலுகை உண்டு; திறப்பு 20:00-23:00 (சனிக்கிழமைகளிலும், பொது விடுமுறை நாட்களுக்கு முன்தினமும் நள்ளிரவு மூடப்படுகிறது)
காட்சியகம்
[தொகு]தைப்பிங் ஏரித் தோட்டத்தின் அழகிய இயற்கைக் காட்சிகள்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Taiping Lake Gardens was the first public recreation park to be established in Malaysia and today it remains one of the most beautiful spots in the country". Malaysia Traveller. பார்க்கப்பட்ட நாள் 10 May 2022.
- ↑ "பினாங்கு விமானத் தளத்தில் இருந்து 90 நிமிட பயண நேரத்தில் அமைந்திருக்கிறது 'தைப்பிங்' கார்டன். வாரத்தில் 2 நாட்கள் மழை கொட்டும்,". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 10 May 2022.
- ↑ "The many firsts of Taiping town". Taiping – The historically rich town in Perak, Malaysia. www.malaysiacentral.com. Archived from the original on 3 டிசம்பர் 2010. பார்க்கப்பட்ட நாள் 3 March 2011.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "About Papan". Papan, Perak. asiaexplorers.com. பார்க்கப்பட்ட நாள் 5 March 2011.
- ↑ Khoo, Salma Nasution; Lubis, Abdur-Razzaq (2005). Kinta Valley: pioneering Malaysia's modern development. Areca Books. pp. 25 & 163. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 983-42113-0-9.
- ↑ A Design Guide of Public Parks in Malaysia by Jamil Abu Bakar, Published by Penerbit UTM, 2002; பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-983-52-0274-2; pp. 87-92
வெளி இணைப்புகள்
[தொகு]- Tourism Malaysia - Taiping Lake Gardens பரணிடப்பட்டது 2014-05-22 at the வந்தவழி இயந்திரம்
- The Star Newspaper பரணிடப்பட்டது 2007-02-24 at the வந்தவழி இயந்திரம்
- Pictures of Taiping Lake Gardens பரணிடப்பட்டது 2008-05-12 at the வந்தவழி இயந்திரம்