மெர்வ் முற்றுகை (1221)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மெர்வ் முற்றுகை (Siege of Merv) என்பது 1221ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற ஒரு முற்றுகையாகும். குவாரசமிய பேரரசை மங்கோலியர்கள் வென்ற போது இது நடைபெற்றது. 1219இல் மங்கோலியப் பேரரசின் மன்னரான செங்கிஸ் கான், ஷா இரண்டாம் முகம்மதுவால் ஆட்சி செய்யப்பட்ட குவாரசமியப் பேரரசு மீது படையெடுத்தார். தன்னுடைய முக்கியமான நகரங்களை தனித்தனியாக தற்காத்துக்கொள்ள ஷா முடிவெடுத்திருந்தார். பல்வேறு கோட்டை காவல் படையினராக தன்னுடைய ராணுவத்தை நிலை நிறுத்த அவர் முடிவெடுத்திருந்தார். குவாரசமிய பேரரசின் இதயப்பகுதியான குராசானுக்குள் ஒரு பட்டணத்தில் இருந்து மாற்றொரு பட்டணமாக முற்றுகையிட்டு மங்கோலியர்கள் போரை நடத்தினர்.

விரிவான குவாரசமியப் பேரரசின் ஒரு பகுதியாக இருந்த குராசானின் கற்றல், வணிக மற்றும் கலாச்சாரத்தின் ஒரு முக்கியமான மையமாக மெர்வ் நகரமானது திகழ்ந்தது. வடக்கில் பேரரசின் முந்தைய ஏகாதிபத்திய தலைநகரான குர்கஞ்சை அழித்ததற்கு பிறகு செங்கிஸ் கானின் கடைசி மகன் டொலுயால் தலைமை தாங்கப்பட்ட 30,000 - 50,000 வீரர்களைக் கொண்டதாக மதிப்பிடப்பட்டுள்ள ஒரு மங்கோலிய படையானது காராகும் பாலைவனத்தைக் கடந்தது. பல அக்கால வரலாற்றாளர்களின் கூற்றுப்படி மெர்வின் தற்காப்பாளர்கள் மங்கோலியர்களிடம் 7 - 10 நாட்களுக்குள்ளாகவே சரணடைந்தனர்.

பேரரசின் முற்றுகையிடப்பட்ட பிற பட்டணங்களில் இருந்து தப்பித்து வந்த அகதிகள் உள்ளிட்ட மெர்வின் ஒட்டு மொத்த மக்களும் கொல்லப்பட்டனர் என வரலாற்று நூல்கள் குறிப்பிடுகின்றன. மங்கோலியர்கள் 7 இலட்சம் பேரைக் கொன்றனர் என்று குறிப்பிடப்படுகிறது.[1][2][3] அதே நேரத்தில், பாரசீக வரலாற்றாளரான சுவய்னி இந்த எண்ணிக்கையை 13 இலட்சம்[4] என்று குறிப்பிடுகிறார். உலக வரலாற்றில் ஒரு நகரம் மிகவும் குருதி தோய்ந்த முறையில் பிடிக்கப்பட்ட நிகழ்வுகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Goldstein, Joshua (2011). Winning the War on War The Decline of Armed Conflict Worldwide. Penguin Publishing Group. பக். 45–63. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781101549087. 
  2. Naimark, Norman (2017). Genocide A World History. Oxford University Press. பக். 21. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780199765263. "The city of Merv fell in February 1221 to Tolui, Genghis Khan's youngest son, who is said to have massacred 700,000 persons while sparing some eighty craftsmen." 
  3. Bonner, Jay (2017). Islamic Geometric Patterns Their Historical Development and Traditional Methods of Construction. Springer New York. பக். 115. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781441902177. 
  4. Alāʼ al-Dīn ʻAṭā Malik Juvaynī, History of the World Conqueror, J.A. Boyle, transl., pp.163-4 (Harvard Univ. Press. 1968).
"https://ta.wikipedia.org/w/index.php?title=மெர்வ்_முற்றுகை_(1221)&oldid=3774583" இலிருந்து மீள்விக்கப்பட்டது