மிருணாளினி சாராபாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மிருணாளினி சாராபாய்
Mrinalini Sarabhai
Mrinalini Sarabhai.jpg
மிருணாளினி சாராபாய்
பிறப்புமே 11, 1918(1918-05-11)
கேரளம், இந்தியா
இறப்புசனவரி 21, 2016(2016-01-21) (அகவை 97)
அகமதாபாத்
தேசியம்இந்தியர்
அறியப்படுவதுநடனக் கலைஞர்
வாழ்க்கைத்
துணை
விக்கிரம் சாராபாய்
உறவினர்கள்இலட்சுமி சாகல் (உடன்பிறந்தவர்)
Notes

மிருணாளினி சாராபாய் (Mrinalini Sarabhai, 11 மே 1918 - 21 சனவரி 2016 )[1] இந்தியாவின் பிரபலமான நடனக் கலைஞரும், பயிற்றுனரும் ஆவார். அகமதாபாத் நகரில் இவர் கலைக் கல்லூரி ஒன்றை ஆரம்பித்து நடத்தி வந்தார்.[2] பரத நாட்டியம், கதகளி ஆகிய நாட்டியக் கலைகளில் இவர் 18,000 இற்கும் அதிகமானோரைப் பயிற்றுவித்தார்.[3] பத்மசிறீ, பத்மபூசண் உட்படப் பல விருதுகளைப் பெற்றவர்.[4]

வாழ்க்கைச் சுருக்கம்[தொகு]

இளமையும் கல்வியும்[தொகு]

மிருணாளினி 1918 மே 11 அன்று கேரளத்தில்,[1] முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அம்மு சுவாமிநாதன் என்பவருக்குப் பிறந்தார். இளம் வயதில் இவர் சுவிட்சர்லாந்தில் வாழ்ந்தார். அங்கு டால்குரோசு பள்ளியில் மேற்கத்தைய நடனம் பயின்றார்.[5] இந்தியாவில் இரவீந்திரநாத் தாகூரின் வழிகாட்டலில் சாந்தி நிகேதனில் கல்வி பயின்ற மிருணாளினி சிறிது காலம் ஐக்கிய அமெரிக்காவில் அமெரிக்கன் நாடகக் கல்விக் கழகத்தில் இணைந்து பயிற்சி பெற்று இந்தியா திரும்பினார். இந்தியாவில் மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம் பரதநாட்டியமும் தகழி குஞ்சு குருப்பு என்பவரிடம் கதகளி நடனமும் பயின்றார்.

மறைவு[தொகு]

உடல்நலக் குறைவின் காரணமாக 21 சனவரி 2016 அன்று அகமதாபாத்தில் காலமானார்.[6]

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Debra Craine and Judith Mackrell (2010). The Oxford Dictionary of Dance. Oxford: University Press. பக். 396. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0199563446. 
  2. Indira Gandhi Memorial Trust (1993). Challenges of the twenty-first century: Conference 1991. Taylor & Francis. பக். 375. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:81-224-0488-X. http://books.google.com/books?id=JScXCLMIkHcC&pg=PA375&dq=%22Darpana+Academy+of+Performing+Arts%22+-inpublisher:icon&lr=&cd=12#v=onepage&q=%22Darpana%20Academy%20of%20Performing%20Arts%22%20-inpublisher%3Aicon&f=false. 
  3. "Tradition takes over". Indian Express. 26 December 1998. http://www.indianexpress.com/res/web/pIe/ie/daily/19981226/36051964.html. பார்த்த நாள்: 20 October 2010. 
  4. "Padma Awards". Ministry of Home Affairs, Government of India (2015). பார்த்த நாள் July 21, 2015.
  5. "First step, first love". Indian Express. 9 December 2002. Archived from the original on 22 April 2004. http://web.archive.org/web/20040422214450/http://www.hinduonnet.com/thehindu/mp/2002/12/09/stories/2002120900850300.htm. 
  6. "Mrinalini Sarabhai passes away at 97". The Hindu (சனவரி 22, 2016). பார்த்த நாள் சனவரி 22, 2016.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மிருணாளினி_சாராபாய்&oldid=2389249" இருந்து மீள்விக்கப்பட்டது