பிரம்மம்காரி மடம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பிரம்மம்காரி மடம்
கண்டிமல்லயப்பள்ளி
ஆள்கூறுகள்: 14°50′29″N 78°52′49″E / 14.84139°N 78.88028°E / 14.84139; 78.88028ஆள்கூறுகள்: 14°50′29″N 78°52′49″E / 14.84139°N 78.88028°E / 14.84139; 78.88028
நாடுஇந்தியா
மாநிலம்ஆந்திரப் பிரதேசம்
மாவட்டம்கடப்பா
வருவாய் கோட்டம்ராஜம்பேட்டை
வட்டம்பிரம்மம்காரி மடம்
மொழிகள்
 • அலுவல்தெலுங்கு மொழி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்516503
தொலைபேசி இணைப்பு எண்+91–8569
இணையதளம்http://www.kalagnani.com

பிரம்மம்காரி மடம் (Brahmamgari Matham) கண்டிமல்லயப்பள்ளி என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தின் கடப்பா மாவட்டத்திலுள்ள ஒரு கிராமமாகும். இது ராஜம்பேட்டை வருவாய் கோட்டத்தின் கண்டிமல்லயப்பள்ளி என்ற ஊரில் அமைந்துள்ளது.[1] [2] இது ஒரு புனித யாத்திரை மையமாகும். இந்த கிராமம் சிறீ "பொத்துலூரு வீர பிரம்மேந்திர சுவாமி ஆசிரமம்" என்று அழைக்கப்படுகிறது. அவர் தனது சீடர்களுக்கு முன்பாக உயிருடன் சமாதி அடைந்தார். அவர் கணிப்புகளின் "காலக்ஞானம் என்ற புத்தகத்தின் ஆசிரியராகக் கருதப்படுகிறார். அவரது தீர்க்கதரிசன நூல்கள் "கோவிந்த வாக்கியங்கள்" என்றும் அழைக்கப்படுகின்றன.

நிலவியல்[தொகு]

கண்டிமல்லயப்பள்ளி கடப்பாவிலிருந்து 60 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இது சாலைகளுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. கடப்பாவிலிருந்து கண்டிமல்லயப்பள்ளிக்கு மைடுகுரு வழியாகச் செல்வது விரும்பத்தக்க பாதை. இது மைடுகூரிலிருந்து 25 கிமீ தொலைவில் உள்ளது. பிரம்மம்காரி மடத்திற்கு அருகிலுள்ள தொடருந்து நிலையம் கடப்பா ஆகும். அருகிலுள்ள விமான நிலையம் கடப்பா விமான நிலையம் ஆகும்.

பிரம்மம்சாகர் நீர்த்தேக்கம்[தொகு]

சிறீ பொத்துலூரு வீரபிரம்மேந்திர சுவாமி நீர்த்தேக்கத்திற்கு, பொத்துலுரு வீரபிரம்மேந்திர சுவாமியின் பெயர் சூட்டப்பட்டது. இது தெலுங்கு கங்கை நீர்ப்பாசனத் திட்டத்தின் ஒரு பகுதியாகும். இந்த நீர்த்தேக்கம் சுண்டுப்பள்ளி நீர்த்தேக்கம் என்றும் அழைக்கப்படுகிறது. மறைந்த ஆந்திர முதல்வர் என். டி. ராமராவ் இதன் அடிக்கல் நாட்டினார். இந்த நீர்த்தேக்கம் 17.73 டிஎம்சி அடி கொள்ளளவு கொண்டது. சுற்றியுள்ள மலைகளுடன், இந்த நீர்த்தேக்கம் ஒரு பிரபலமான சுற்றுலா தலமாக மாறியுள்ளது. அங்கு படகுகள் வாடகைக்கு கிடைக்கின்றன.[3]

பிரம்மம் சாகர்

சான்றுகள்[தொகு]

  1. "Revenue Divisions and Mandals". Official website of YSR Kadapa District. National Informatics Centre- Kadapa, Andhra Pradesh. 6 July 2015 அன்று மூலம் பரணிடப்பட்டது. 23 May 2015 அன்று பார்க்கப்பட்டது.
  2. "District Census Handbook - YSR" (PDF). Census of India. p. 18. 29 December 2015 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Sundupalli Reservoir D05214". 28 December 2016 அன்று மூலம் பரணிடப்பட்டது. 22 September 2015 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரம்மம்காரி_மடம்&oldid=3311407" இருந்து மீள்விக்கப்பட்டது