தி அமேசிங் இசுபைடர்-மேன் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(தி அமேசிங் ஸ்பைடர் - மேன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தி அமேசிங் இசுபைடர்-மேன்
இயக்கம்மார்க் வெப்
தயாரிப்பு
திரைக்கதை
இசைஜேம்சு கோர்னர்
நடிப்பு
ஒளிப்பதிவுஜான் ஸ்வார்ட்ஸ்மேன்
படத்தொகுப்பு
 • ஆலன் எட்வர்ட் பெல்
 • பியட்ரோ ஸ்காலியா
கலையகம்
விநியோகம்சோனி பிக்சர்ஸ் இரிலீசிங்
வெளியீடுசூன் 30, 2012 (2012-06-30)(தோக்கியோ)
சூலை 3, 2012 (ஐக்கிய அமெரிக்கா)
ஓட்டம்136 நிமிடங்கள்[4]
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$200–230 மில்லியன்
மொத்த வருவாய்$757.9 மில்லியன்[5]

தி அமேசிங் இசுபைடர்-மேன் (The Amazing Spider-Man) என்பது 2012 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க நாட்டு மீநாயகன் திரைப்படம் ஆகும். இது இசுபைடர் மேன் என்ற மார்வல் வரைகதையில் தோன்றும் கதாபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு கொலம்பியா பிக்சர்ஸ் மற்றும் மார்வெல் மகிழ்கலை போன்ற தயாரிப்பு நிறுவனங்கள் தயாரிக்க சோனி பிக்சர்ஸ் இரிலீசிங் என்ற நிறுவனம் மூலம் விநியோகம் செய்யப்பட்டது.

இப்படமானது 2002 ஆம் ஆண்டு முதல் 2007 ஆம் ஆண்டு வெளியான இசுபைடர் மேன் திரைப்படங்களின் மறுதொடக்கம் ஆகும்.[6][7] இந்த படத்தை மார்க் வெப்[8] என்பவர் இயக்கியுள்ளார், ஜேம்ஸ் வாண்டர்பில்ட், ஆல்வின் சார்ஜென்ட் மற்றும் ஸ்டீவ் குலவ்ஸ் அகியோரின் திரைக்கதையில் ஆண்ட்ரூ கார்பீல்ட், எம்மா ஸ்டோன், ரைஸ் இஃபான்ஸ், டெனிஸ் லியரி, காம்ப்பெல் ஸ்காட், இர்பான் கான், மார்ட்டின் ஷீன் மற்றும் சாலி பீல்ட் ஆகியோர் நடித்துள்ளார்கள். இந்த படத்தில் பீட்டர் பார்க்கர் மரபணு மாற்றப்பட்ட சிலந்தியால் கடிக்கப்பட்ட பிறகு, அவர் புதிய சிலந்தி போன்ற சக்திகளைப் பெறுகிறார், மேலும் ஒரு மர்மமான ஊர்வன எதிரியின் சூழ்ச்சிகளிலிருந்து நகரத்தை காப்பாற்ற முயற்சிக்கிறார்.

இப்படம் வெளியிடுவதற்கு முன்பு சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தால் ஒரு விளம்பர வலைத்தளத்தை உருவாக்கி பல மாதிரிக்காட்சிகளை வெளியிட்டு வைரல் சந்தைப்படுத்தல் பிரச்சாரத்தைத் தொடங்கியது. அதை தொடர்ந்து 'டை-இன்ஸில் பீனாக்ஸ்' என்ற நிகழ்ப்பட ஆட்டத்தையும் வெளியிட்டது. இந்த படம் ஜூன் 30, 2012 அன்று தோக்கியோவில் திரையிடப்பட்டது, மேலும் இசுபைடர்-மேன் (2002) வெளியான பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, ஜூலை 3 அன்று ஐக்கிய அமெரிக்காவில் 2டி, 3டி மற்றும் ஐமாக்ஸ் 3டி வடிவங்களில் வெளியாகி வசூல் ரீதியாக வெற்றி அடைந்தது. இது உலகளவில் 757 மில்லியன் டாலர்களை வசூலித்து, 2012 ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த ஏழாவது படமாக அமைந்தது. இதன் தொடர்சியாக தொடர்ச்சியாக தி அமேசிங் இசுபைடர்-மேன் 2 என்ற படம் மே 2, 2014 அன்று வெளியானது.

கதை சுருக்கம்[தொகு]

இசுபைடர் மேனின் அம்மாவும், அப்பாவும் 'ஆஸ்கார்ப்' எனும் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை செய்கிறார்கள். அவர்கள் ஒரு விமான விபத்தில் இறக்க நேரிடுகிறது. அதனால் மாமா, அத்தையுடன் வசித்து வரும் அவர் பள்ளியில் படித்துக்கொண்டு இருக்கிறார்.

வீட்டை ஒரு நாள் சுத்தம் செய்யும்போது தனது தந்தை பயன்படுத்திய பையைப் பார்க்கிறார். அதை தனது அறைக்கு எடுத்து வந்து ஆராய்கிறார். ஒரு புகைப்படமும், ஆஸ்கார்ப் நிறுவனத்தின் முக்கிய கோப்புகளும் கிடைக்கின்றன. அது அவ்வளவும் தனது தந்தையின் கண்டுபிடிப்பு என தெரிய வருகிறது. புகைப்படத்தில் உள்ள தனது தந்தையின் நண்பர் டாக்டர் கர்ட் கான்னர்ஸ், தற்போது ஆஸ்கார்ப் நிறுவனத்தில் வேலை செய்வதை இண்டர்நெட் வழியாக அறிந்து அங்கு சென்றபோது ஒரு சிலந்தி கடித்து விடுகிறது. சிலந்தி கடித்ததால் சுவற்றில் ஏறும் சக்தியும், உடல் வலிமையும் கிடைக்கிறது.

டாக்டருடன் மெதுவாக நட்பை ஏற்படுத்தியபின் அவரது ஆரய்ச்சிக்குப் பயன்படும் ஃபார்முலாவை தன் தந்தையின் பையில் இருந்து எடுத்துத் தருகிறார். வெட்டுப்படும் பல்லியின் உடல் உறுப்பு மீண்டும் வளர்வதைப் போல, அந்த நிறுவனம் பிற உயிரினங்களின் உடல் உறுப்பையும் வளர வைக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கிறது. இதற்காக நாயகனும், டாக்டரும் எலியின் மீது அந்த ஃபார்முலாவைப் பயன்படுத்தி செய்கிறார்கள். அது வெற்றியும் அடைகிறது.

நிறுவனத்தின் வற்புறுத்தல் காரணமாக டாக்டர் தனது உடம்பில் செலுத்துகிறார். அவருக்கும் கை வளர்கிறது. ஆனால், அந்த மருந்து இவரை ராட்சஸப் பல்லியாக மாற்றுகிறது. அட்டகாசம் செய்கிறார். தன்னால்தான் இந்த பிரச்சினை உருவானது; அதைத் தானே சரி செய்ய வேண்டும் என்ற முனைப்புடன் பார்க்கர் செயல்படுகிறார். இதற்கு அவரது காதலியும் உதவுகிறாள். தன் முயற்சியில் பார்க்கர் வெற்றி அடைகிறார்.

நடிகர்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. "8 Things We Learned About 'The Amazing Spider-Man' from Our Exclusive Interview with Screenwriter Steve Kloves". Collider.com. ஆகஸ்ட் 15, 2011 அன்று மூலம் பரணிடப்பட்டது. November 28, 2011 அன்று பார்க்கப்பட்டது.
 2. "It's Official! Andrew Garfield to Play Spider-Man!". CraveOnline. July 1, 2010. May 8, 2012 அன்று மூலம் பரணிடப்பட்டது. July 1, 2010 அன்று பார்க்கப்பட்டது.
 3. Kroll, Justin; Stewart, Andrew (September 23, 2010). "Emma Stone tangled in Sony's web". Variety. https://www.variety.com/article/VR1118024559.html. 
 4. "The Amazing Spider-Man". British Board of Film Classification. August 8, 2012. August 10, 2012 அன்று பார்க்கப்பட்டது.
 5. "The Amazing Spider-Man (2012)". Box Office Mojo. July 16, 2012 அன்று பார்க்கப்பட்டது.
 6. "Alvin Sargent spit-shining 'Spider-Man' reboot". The Hollywood Reporter (Nielsen Company). May 14, 2010. http://www.heatvisionblog.com/2010/05/alvin-sargent-spitshining-spiderman-reboot-exclusive-.html. 
 7. Nikki Finke; Fleming, Mike (January 11, 2010). "Exclusive: 'Spider-Man 4' Scrapped; Sam Rami & Tobey Maguire & Cast Out; Franchise Reboot for 2012". https://www.deadline.com/2010/01/urgent-spider-man-4-scrapped-as-is-raimi-and-cast-out-franchise-reboot-planned/.  Includes separate full text of Columbia / Marvel Studios press release.
 8. McDaniel, Matt (April 16, 2012). "'The Amazing Spider-Man' director Marc Webb reveals how Andrew Garfield won the role". Yahoo! News. April 24, 2012 அன்று பார்க்கப்பட்டது.
 9. Goldberg, Matt (December 15, 2011). "Official Website for The Amazing Spider-Man Provides New Wallpapers and Character Bios". Collider.com. November 5, 2012 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. December 15, 2011 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]