இர்பான் கான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இர்பான் கான்
Irfan Khan

பத்மசிறீ
2015 இல் கான்
பிறப்புசகாப்சாத் இர்பான் அலி கான்[1]
(1967-01-07)7 சனவரி 1967
செய்ப்பூர், ராஜஸ்தான், இந்தியா
இறப்பு29 ஏப்ரல் 2020(2020-04-29) (அகவை 53)
மும்பை, மகாராட்டிரம், இந்தியா
இறப்பிற்கான
காரணம்
பெருங்குடல் தொற்று
படித்த கல்வி நிறுவனங்கள்நாடகத் தேசியப் பள்ளி
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1985–2020
வாழ்க்கைத்
துணை
சுதப்பா சிக்தர் (தி. 1995)
பிள்ளைகள்2

இர்பான் அலி கான் (Irfan Ali Khan, 7 சனவரி 1967 – 29 ஏப்ரல் 2020)[2] இந்தியத் திரைப்பட, நாடக நடிகர் ஆவார். இவர் குறிப்பாக இந்தி பாலிவுட் திரைப்படங்களில் அதிகமாக நடித்துள்ளார். அத்துடன் ஆங்கிலேய, அமெரிக்கத் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இந்தியத் திரைப்படத்துறையில் ஒரு சிறந்த நடிகராக அறியப்படும் இவர்,[3][4] 30 ஆண்டுகள் திரைத்துறையில் பணியாற்றியுள்ளார். தேசிய திரைப்பட விருது, ஆசியத் திரைப்பட விருது, நான்கு பிலிம்பேர் விருதுகள் உட்படப் பல விருதுகளை வென்றுள்ளார். 2011 இல் இவருக்குப் பத்மசிறீ விருது வழங்கப்பட்டது.[5]

2018 இல் இர்பான் கான் மூளைத்தண்டு வட நரம்புக் கட்டியால் பாதிக்கப்பட்டார்.[6][7] 2020 ஏப்ரல் 29 இல் தனது 53 வது அகவையில் பெருங்குடல் தொற்றினால் காலமானார்.[2]

ஆரம்பகால வாழ்க்கையும் பின்னணியும்[தொகு]

கான், இந்தியாவில் உள்ள ஜெய்ப்பூரில் ஒரு இஸ்லாமிய நவாப் குடும்பத்தில் பிறந்தார், கானின் தாயாரான சாய்தா பேகம், டோன்க் ஹக்கிம் குடும்பத்தில் இருந்து வந்தவராவார், கானின் காலம் சென்ற தந்தையான யாசின் கான், டோன்க் மாவட்டத்திற்கு அருகிலுள்ள கஜூரியா கிராமத்தின் ஜகிர்தார் ஆவார்.[8][9] 1984 இல் புது டெல்லியின் தேசிய நாடகப் பள்ளியில் (NSD) படிப்பதற்கு அவருக்கு உதவித் தொகை கிடைத்த போது, அவரது M.A. பல்கலைக்கழகப் பட்டத்திற்காக கான் படித்துக்கொண்டிருந்தார்.[10]

தொழில் வாழ்க்கை[தொகு]

1987 இல் பட்டம் பெற்ற பிறகு, கான் மும்பைக்கு குடி பெயர்ந்தார், அங்கு 'சாணக்கியா','சாரா ஜஹான் ஹமாரா' 'பான்கி ஆப்னே பாட்' மற்றும் 'சந்திரகாந்தா' (தூர்தர்ஷன்), 'ஸ்டார் பெஸ்ட்செல்லர்ஸ்' (ஸ்டார் ப்ளஸ்), ஸ்பார்ஸ் மற்றும் பல ஏராளமான தொலைக்காட்சித் தொடர்களில் கான் நடித்தார், அவர் (ஸ்டார் ப்ளஸ்ஸில் ஒளிபரப்பப்பட்ட) தர் என்றழைக்கப்பட்ட தொடரில் முக்கிய வில்லனாக பங்கேற்றார், இதில் கே கே மேனனுடன் இணைந்து மனநோயுடைய தொடர் கொலைகாரன் பாத்திரத்தில் அவர் நடித்தார். அலி சர்தார் ஜஃப்ரி தயாரித்த காக்கஷன் தொடரில், பிரபலமாக அரசியல் புரட்சியில் ஈடுபடும் உருது கவிஞர் மற்றும் இந்தியாவின் மார்க்ஸிஸ்ட் அரசியல் கொள்கையாளர் மக்தூம் மொகைதீனின் பாத்திரத்திலும் கான் நடித்தார்.

அவர் ஸ்டார் பெஸ்ட்செல்லர்ஸின் (ஸ்டார்-ப்ளஸில் ஒளிபரப்பப்பட்டது) சில எபிசோடுகளிலும் நடித்தார். இந்த எபிசோடுகளில் ஒன்றில், அவர் பார்ச்சூன் கடைக்காரராக பாத்திரம் ஏற்று நடித்தார், இதில் அவரது நில உரிமையாளரின் மனைவி கானை தவறாக நடக்க தூண்ட முயற்சிப்பதாக தவறாக நினைத்துக்கொள்கிறார் மற்றும் அவரது சொந்த மனைவி (டிலஸ்கா சோப்ரா) அவரை ஏமாற்றுவதாக மாறுகிறது. மற்றொரு எபிசோடில், ஒரு அலுவலகக்கணக்கர் பாத்திரத்தில் அவர் நடித்தார், இதில் அவர் தனது பெண் தொழில்முதல்வரால் அவமதிக்கப்படுகிறார், இதனால் அந்தப் பெண் தொழில்முதல்வரைப் பைத்தியமாக்குவதன் மூலம் அவரைப் பழி வாங்குகிறார். மேலும் அவர், பான்வர் (SET இந்தியாவில் ஒளிபரப்பப்பட்டது) என்ற தொடரின் இரண்டு எபிசோடுகளில் நடித்தார். அதில் ஒரு எபிசோடில், ஒரு முரடன் பாத்திரத்தில் அவர் நடித்தார், பின்பு ஏதோ ஒரு வழியில் தானாகவே ஒரு வழக்கறிஞராய் அறிமுகப்படுத்திக் கொள்வதன் மூலமாய் நீதிமன்றத்திற்கு வருகிறார்.

சலாம் பாம்பே யில் (1988) கானை கேமியோ பாத்திரத்தில் நடிப்பதற்கு மீரா நாயர் அழைக்கும் வரை, அரங்கு மற்றும் தொலைக்காட்சியில் கான் நிலையற்று சென்று கொண்டிருந்தார், ஆனால் அவரது பாத்திரமானது இறுதித் திரைப்படத்தில் நீக்கப்பட்டது.

1990களில், ஏக் டாக்டர் கி மவுட் மற்றும் சச் எ லாங் ஜர்னி (1998) போன்ற விமர்சன ரீதியாகப் பாராட்டுக்களைப் பெற்ற திரைப்படங்களில் அவர் நடித்தார், மேலும் கவனத்திற்கு வராத பல்வேறு பிற திரைப்படங்களிலும் நடித்தார்.

பல வெற்றியடையாத திரைப்படங்களுக்குப் பிறகு, லண்டனைச் சார்ந்த இயக்குனரான ஆசிஃப் கபாடியா த வாரியர் என்ற வரலாற்றுத் திரைப்படத்தில் முன்னணிப் பாத்திரத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு வழங்கிய போது நிகழ்வுகளில் மாற்றம் ஏற்பட்டது, இத்திரைப்படமானது இமாச்சலப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் என்று உள்நாடுகளில் படம்பிடிக்கப்பட்டு 11 வாரங்களில் நிறைவுசெய்யப்பட்டது. 2001 இல், சர்வதேசத் திரைப்பட விழாக்களில் த வாரியர் திரையிடப்பட்டு, உலகளவில் அறிந்த முகமாக இர்ஃபான் கான் பெயர் பெற்றார்.

2003 இல், இந்தியாவில் பிறந்த எழுத்தாளர்-இயக்குனரான அஸ்வின் குமாரின் குறும்படம், ரோடு டூ லடாக்கில் கான் நடித்தார். சர்வதேச திரைப்படவிழாக்களில் அரிதான திறனாய்வுகளைப்[11] பெற்ற அத்திரைப்படத்திற்குப் பிறகு, முழுநீளப் படமாகத் தயாரிக்கப்படும் அதே திரைப்படத்தில் இர்ஃபான் கான் மீண்டும் நடிக்கிறார்.[12] அதே ஆண்டில், ஷேக்ஸ்பியரின் மேக்பத் தில் தழுவலைக் கொண்ட திரைப்படமான மக்பூலில் தலைப்புப் பாத்திரத்தில் நடித்தார், இத்திரைப்படம் விமர்சனரீதியாகப் பாராட்டப்பட்டது.

அவரது முதல் பாலிவுட் முக்கிய முன்னணிப் பாத்திரமானது, 2005 இன் ரோக் திரைப்படம் மூலமாக அமைந்தது. அதற்குப்பின் பல்வேறு திரைப்படங்களில், முக்கியப் பாத்திரத்திலோ அல்லது வில்லனாக துணைப் பாத்திரத்திலோ நடித்தார். 2004 இல், ஹாசில் திரைப்படத்தில் அவரது பாத்திரத்திற்காக பிலிம்ஃபேர் சிறந்த வில்லன் விருதைப் வென்றார்.

2007 இல், அவருக்கு பிலிம்ஃபேரின் சிறந்த துணை நடிகர் விருதைப் பெற்றுத் தந்த மெட்ரோ திரைப்படத்திலும், வெளிநாடுகளில் வெற்றியடைந்த த நேம்சேக் என்ற திரைப்படத்திலும் நடித்தார், இத்திரைப்படங்கள் பாக்ஸ் ஆபிஸில் வெற்றியடைந்தன. சர்வதேசத் திரைப்படங்களான எ மைட்டி ஹார்ட் மற்றும் த டார்ஜிலிங் லிமிட்டடு போன்றவற்றில் அவர் நடித்ததைத் தொடர்ந்து நெருக்கமாய் இத்திரைப்படங்களில் நடித்தார்.

அவர் பாலிவுட்டின் ஒரு வெற்றிகரமான நடிகராக மாறியபிறகும் கூட, தொலைகாட்சியுடன் அவரது தொடர்பை துண்டித்துக் கொள்ளவில்லை. அவர், (ஸ்டார் ஒன்னில் ஒளிபரப்பப்பட்ட) 'மனோ யா நா மனோ' நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருந்தார். மேலும் அவர், "கியா கஹென்" என்றழைக்கப்பட்ட ஒரு மற்றொரு நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கினார், மூட நம்பிக்கை மற்றும் அதிகப்படியான புலனறிவு மற்றும் பலவற்றைக் கொண்டு மனோ யா நா மனோவைப் போன்றே ஒத்த பண்புகளுடன் இந்த நிகழ்ச்சி இருந்தது.

2008 இல், ஆர்ட்ஸ் அலையன்ஸின் தயாரிப்பான ஐடி - ஐடெண்டி ஆப் த சோலின் விரிவுரையாளராகப் பங்கேற்றார். உலகளாவிய இந்த நிகழ்ச்சியில் அவரது செயல்பாடு காரணமாக, வெஸ்ட் பேங்கில் நடந்த நிகழ்ச்சியான அந்தத் திட்டத்தை ஆயிரக்கணக்கானோர் பார்த்தனர். மேலும், 2008 திரைப்படமான ஸ்லம்டாக் மில்லியனரில் காவல்துறை ஆய்வாளராக நடித்தார், இதற்காக மோசன் பிச்சரில் நடிகராக மிகச்சிறப்பாக நடித்ததற்கான ஸ்க்ரீன் ஆக்டர்ஸ் கில்ட் விருதைப் பெற்றார்.

அண்மையில், அவர் ஆசிட் பேக்டரி என்ற திரைப்படத்தில் நடித்தார். இர்ஃபானைப் பொறுத்தவரை, அவரது தொழில்வாழ்க்கையில் தொடர்ந்து, மென்மேலும் அதிரடித் திரைப்படங்களை நடிக்க விரும்புகிறார்.[13]

சர்வதேச அங்கீகாரம்[தொகு]

மீரா நாயர் இயக்கிய ஆங்கிலத் திரைப்படமான த நேம்சேக் கின் மூலம் அவருக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்தது, இத்திரைப்படத்தில் USA இல் குடியுரிமை பெறாத பெங்காலி பேராசிரியராக முன்னணிப் பாத்திரத்தில் சித்தரிக்கப்பட்டார். இத்திரைப்படமானது, ஒவ்வொரு முக்கியமான US செய்திப் பத்திரிகைகளிலும் விமர்சனரீதியாகப் பாராட்டப்பட்டது. இத்திரைப்படத்திற்குப் பின்னர், வெளிநாடுகளில் ஒரு அங்கீகரிக்கப்பட்ட நடிகராகக் கான் பெயர் பெற்றார். [சான்று தேவை]

சொந்த வாழ்க்கை[தொகு]

கான், எழுத்தாளரான சுடபா சிக்தரை திருமணம் செய்து கொண்டார், இவர் ஒரு NSD பட்டதாரியும் ஆவார், இவர்களுக்கு பாபில் மற்றும் ஐயன் என்ற இரு குழந்தைகள் உள்ளனர்.

இவருக்கு, இம்ரான் கான் மற்றும் சல்மான் கான் என்ற இரண்டு சகோதரர்கள் உள்ளனர், மேலும் ரக்சனா பேகம் என்ற ஒரு சகோதரி உள்ளார். அவர்கள், ஜெய்பூரில் அவர்களது சொந்தத் தொழிலைக் கவனித்து வருகின்றனர், இம்ரான் தகவல் தொழில்நுட்பத் துறையிலும், சல்மான் ஒரு நகைக்கடையும் வைத்திருக்கிறார்.

விருதுகள் மற்றும் பரிந்துரைகள்[தொகு]

 • 2003: பிலிம்ஃபேர் சிறந்த வில்லன் விருது - ஹாசில்
 • 2007: பிலிம்ஃபேர் சிறந்த துணைநடிகர் விருது - லைஃப் இன் எ மெட்ரோ
 • 2007: இண்டிபெண்டன்ட் ஸ்ப்ரிட் விருது: சிறந்த துணைப் பாத்திரம் - த நேம்சேக் : பரிந்துரை
 • 2008: மோசன் பிச்சரில் நடிகராக மிகச்சிறப்பாக நடித்ததற்கு ஸ்க்ரீன் ஆக்டர்ஸ் கில்ட் விருது - ஸ்லம்டாக் மில்லியனர்
 • 2008: IIFA விருது: IIFA சிறந்த துணை நடிகர் - லைஃப் இன் எ மெட்ரோ
 • 2012: சிறந்த நடிகருக்கான தேசிய விருது - பான் சிங் டோமர்

திரைப்பட விவரங்கள்[தொகு]

திரைப்படப் பெயர் ஆண்டு பாத்திரம் இதரக் குறிப்புகள்
சலாம் பாம்பே 1988 கடிதம் எழுதுபவர்
கம்லா கி மவுட் 1989 அஜித்
திரிஷ்டி 1990 ராகுல்
சாணக்யா (TV தொடர்) 1990 "சேனாதிபதி" பாத்ரஷால்
ஏக் டாக்டர் கி மவுட் 1991
பனேகி ஆப்னி பாட் (TV தொடர்) 1994 (ஜூ TV)
த வாரியர் 2001 லஃப்காடியா - வாரியர்
காத் 2000 மாமு
கசூர் 2001 அரசு வழக்கறிஞர்
குணா 2002 காவல்துறை ஆய்வாளர்
ஹாசில் 2003 ரன்விஜய் சிங் வெற்றி , பிலிம்ஃபேர் சிறந்த வில்லன் விருது, இதில் ரன்விஜயாக அவரது நடிப்பும், வசன வெளிப்பாடுகளும் அவரது ரசிகர்கள் பலரால் பின்பற்றப்பட்டது.
ஃபுட்பாத் 2003 ஷேக்
மக்பூல் 2003 மக்பூல்
ஷேடோஸ் ஆப் டைம் 2004 யானி மிஷ்ரா பெங்காலி/ஜெர்மன் திரைப்படம்
ஆன்: மென் அட் வொர்க் 2004 யூசுஃப் பதான்
சராஸ் 2004 ரன்பீர் சிங் ரத்தோர்
சாக்லேட் : டீப் டார்க் சீக்ரெட்ஸ் 2005 பீபீ
ராக் 2005 ஆய்வாளர் உதய் ரத்தோர்
செஹ்ரா 2005 சந்த்ரனாத் திவான்
7½ பியர் 2005 மனோஜ்
யன் ஹோத்தா டூ கியா ஹோத்தா 2006 சலிம் ராஜபாலி
த கில்லர் 2006 விக்ரம்/ரூப்சந்த் ஸ்வரூப்சந்த் சொலான்கி
டெட்லைன் : சிர்ஃ 24 கண்டே 2006 கிரிஷ் வைத்யா
சைனிகுடு 2006 பப்பு யாதவ்
எ மைட்டி ஹார்ட் 2007 கேப்டன் 2007 கென்னஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது
லைஃப் இன் எ மெட்ரோ 2007 மோன்டி வெற்றி , பிலிம்ஃபேர் சிறந்த துணை நடிகர் விருது.
த நேம்சேக் 2007 அசோக் கங்கூலி
தி டார்ஜீலிங் லிமிட்டட் 2007 த பாதர்
அப்னா ஆஸ்மன் 2007 ரவிகுமார்
ஆஜா நாச்லே 2007 பரூக், நஜ்மாவின் கணவர்
பார்டிசியன் 2007 அவ்தார்
ரோடு டூ லடாக் 2008
சன்டே 2008 குமார்
கிரேஸி 4 2008 டாக்டர் முகர்ஜி
மும்பை மேரி ஜான் 2008 தாமஸ்
ஸ்லம்டாக் மில்லியனர் 2008 காவல்துறை ஆய்வாளர் வெற்றி , மோசன் பிச்சரில் நடிகராக மிகச்சிறப்பாக நடித்ததற்காக ஸ்க்ரீன் ஆக்டர்ஸ் கில்ட் விருது
சம்கூ 2008 மிஸ்டர் கபூர்
தில் கபடி 2008 சமிட்
சன்டே 2008 குமார்
ஆசிட் பேக்டரி 2009 கைசர்
பில்லு 2009 பில்லு/விலாஸ் பர்தேசி
நியூயார்க் 2009 ரோஷன் (FBI அதிகாரி)
நியூயார்க், ஐ லவ் யூ 2009 மன்ஷுக்பை
பான் சிங் டோமர் 2009 TBA
ரைட் யா ராங் 2009 TBA
போபால் மூவி 2010 TBA
வேலண்டைன்'ஸ் டே (திரைப்படம்) 2010

இறப்பு[தொகு]

மார்ச் 2018 இல், இர்ஃபான் கானுக்கு நியூரோஎண்டோகிரைன் கட்டி இருப்பது கண்டறியப்பட்டது, இது உடலின் பல்வேறு பகுதிகளை குறிவைக்கும் புற்றுநோயின் அரிதான வடிவமாகும். அவர் ஏப்ரல் 28, 2020 அன்று மும்பையின், கோகிலாபென் திருப்பாய் அம்பானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், அங்கு அவர் பெருங்குடல் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி மறுநாள், அதாவது ஏப்ரல் 29, 2020 அன்று தனது 53 ஆவது வயதில் காலமானார்.

குறிப்புதவிகள்[தொகு]

 1. "Irrfan Khan, Indian Actor in 'Life of Pi', Dies of Cancer Aged 54". The New York Times. 29 April 2020. https://www.nytimes.com/reuters/2020/04/29/arts/29reuters-india-obituary-irrfankhan.html. பார்த்த நாள்: 29 April 2020. 
 2. 2.0 2.1 "Irrfan Khan, actor extraordinaire and India's face in the West, dies at 53" (in en). ஹிந்துஸ்தான் டைம்ஸ். 29 April 2020. https://www.hindustantimes.com/bollywood/irrfan-khan-dies-at-53/story-Hd8s2xZ6uNeqDjgV0sl7zI.html. பார்த்த நாள்: 29 April 2020. 
 3. Anderson, Ariston (10 December 2014). "'Jurassic World' Actor Irfan Khan on Upcoming Film: "It Will Be Like a Scary Adventure"". The Hollywood Reporter. Archived from the original on 8 October 2015. பார்க்கப்பட்ட நாள் 28 October 2015.
 4. Iqbal, Nosheen (25 July 2013). "Irrfan Khan: 'I object to the term Bollywood'". the Guardian இம் மூலத்தில் இருந்து 9 October 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20151009211929/http://www.theguardian.com/film/2013/jul/25/irrfan-khan-bollywood-d-day. பார்த்த நாள்: 28 October 2015. 
 5. "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original (PDF) on 15 October 2015. பார்க்கப்பட்ட நாள் 21 July 2015. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
 6. France, Lisa Respers. "'Life of Pi' star Irrfan Khan reveals he has a rare tumor". CNN இம் மூலத்தில் இருந்து 16 March 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180316162432/https://edition.cnn.com/2018/03/16/entertainment/irrfan-khan-tumor/index.html. 
 7. "Life of Pi actor has rare tumour" (in en-GB). BBC News. 2018-03-16 இம் மூலத்தில் இருந்து 13 June 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180613093743/https://www.bbc.com/news/world-asia-india-43426481. 
 8. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-02-21. பார்க்கப்பட்ட நாள் 2010-08-03. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
 9. http://www.irrfan.com/rev_one_india_interview.html
 10. ஐ லவ் இந்தியாவில் இர்ஃபான் கான்
 11. "ரோடு டூ லடாக் குறும்படம்". Archived from the original on 2003-04-12. பார்க்கப்பட்ட நாள் 2010-03-22.
 12. இர்ஃபான் கான் ஹாலிவுட்டிற்குச் செல்கிறார்,ரெட்டிஃப் மூவிஸ்
 13. "I want to do more and more of action films".

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இர்பான்_கான்&oldid=3543926" இலிருந்து மீள்விக்கப்பட்டது