ஆத்தூம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆத்தூம்
ஆத்தூம், உலகை அழிக்கும் கடவுள்
துணைஇயுசாசெத்
குழந்தைகள்சூ மற்றும் டெப்நெத்

ஆத்தூம் (Atum) உலகை அழிக்க வல்ல பண்டைய எகிப்தியக் கடவுள் ஆவார்.[1][2] இவரது மனைவி இயுசாசெத் மற்றும் குழந்தைகள் சூ மற்றும் டெப்நெத் ஆவர். ஆத்தூம் கடவுள் இரட்டை மணிமுடி அணிந்துள்ளார். ஆத்தும் கடவுள் மாலை சூரியனுடன் நெருங்கிய தொடர்புடையது. ஆதிகால கடவுளாகவும், மாலை சூரியனாகவும், சாத்தான் மற்றும் பாதாள உலக தொடர்புகளைக் கொண்டுள்ளது.[3] எகிப்தின் துவக்க வம்ச காலத்திலும், பழைய எகிப்து இராச்சிய காலத்தில் ஆத்தும் கடவுளின் வழிபாடு பரவியது. எகிப்தின் மத்தியகால இராச்சியம் மற்றும் புதிய எகிப்திய இராச்சிய காலத்திலும் ஆத்தும் கடவுள் தொடர்ந்து வழிபடப்பட்டார். பிந்தைய கால எகிப்து இராச்சியத்தில் ஆத்தும் கடவுளின் வழிபாடு படிப்படியாக மறையத் தொடங்கியது.

தோற்றம்[தொகு]

உலகப் படைப்புக் கடவுள் பிதா எனில் உலகை அழிக்கும் கடவுள் ஆத்தூம் ஆவர். பிரமிடு உரைகளில் ஆத்தூம் கடவுள் பற்றிய பல குறிப்புகள் உள்ளது. இக்குறிப்புகளில் ஆத்தூம் கடவுள் பார்வோனைப் படைப்பவராகவும், தந்தையாகவும் சித்தரிக்கப்படுகிறார். ஆத்தூம் கடவுள் எவ்வாறு உருவானது என்பதற்கு பல எழுத்துக்கள் உள்ளது. ஹீலியோபாலிட்டன் பார்வையின் படி, ஆத்தூம் கடவுள் முதலில் தனது முட்டையில் ஆதிகால நீரில் இருந்து, ஆதிகால வெள்ளத்தின் போது பிறந்தான் என்றும் அவனுக்குப் பிறகு உருவாக்கப்பட்ட எல்லாவற்றிற்கும் ஆதாரமாக மாறினான். மெம்பிஸ் நகர பூசாரிகள், படைப்புக் கடவுளான தாவ், ஆத்தூம் கடவுளை மிகவும் அறிவார்ந்த முறையில் உருவாக்கினார் என்று நம்பினர்.[4] ஹெல்லியோபோலிஸ் நகரத்தில் ஆத்தூம் கடவுளுக்கான கோயில் இருந்தது.

பங்கு[தொகு]

எகிப்தின் இருபதாம் வம்ச காலத்தில் (கிமு. 1184-1153) இரா, ஆத்தோர் மற்றும் ஆத்தூம் (வலது) கடவுள்கள் பாபிரஸ் காகிதத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளனர்

.

பழைய இராச்சியத்தில், இறந்த பார்வோனின் ஆன்மாவை, கடவுள் ஆத்தூம் பிரமிடிலிருந்து விண்மீன்கள் நிறைந்த வானத்திற்கு தூக்கிச் செல்வதாக எகிப்தியர்கள் நம்பினர். சவப்பெட்டி உரைகளில், கடவுள் ஆத்தூம், கடவுள் ஒசிரிசுடன் நெருக்கமாக அறியப்படுகிறார். எகிப்தின் இருபதாம் வம்ச காலத்தில் (கிமு. 1184-1153) இரா, ஆத்தோர் மற்றும் ஆத்தோர் கடவுள்கள் சித்தரிக்கப்பட்டுள்ளனர்.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆத்தூம்&oldid=3767495" இருந்து மீள்விக்கப்பட்டது