தாவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தாவ்
Ptah standing.svg
துணைசெக்மெட், பாசுட்
பெற்றோர்கள்யாருமில்லை (தான் தோன்றி)
குழந்தைகள்நெஃபெர்டெம், மாகேசு

தாவ் அல்லது பிதா (Ptah) பண்டைய எகிப்தின் சமயத்தில் கூறப்படும் படைப்புக் கடவுள் ஆவர்.[1] மெம்ஃபிசின் மும்மையில் இவர் செக்மெட்டின் துணையாகவும், நெஃப்ரெதமின் தந்தையாகவும் இருக்கிறார். இவர் தன் எண்ணம் மற்றும் சொல்லால் இந்த உலகை படைத்ததாக மெம்பிசு மக்கள் நம்புகின்றனர். இவர் பெரும்பாலும் பச்சை நிறத் தோல் மற்றும் தாடியுடன் மூன்று சின்னங்கள் பொருந்திய செங்கோலை கையில் ஏந்தியபடி காட்சியளிக்கிறார். மூன்று சின்னங்களில் வாசு செங்கோல் சின்னம் சக்தியையும் அங்க்கு சின்னம் வாழ்வையும் செத் தூண் சின்னம் நிலைத்தன்மையும் குறிக்கிறது.

பண்டைய எகிப்திய மொழியில் இகுதாவ் என்ற சொல்லுக்கு தாவ்வுடைய ஆவியின் வீடு என்று பொருள். இந்த சொல்லில் இருந்து எகிப்து என்ற பெயர் தோன்றியது.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Ptah, EGYPTIAN GOD
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாவ்&oldid=3144189" இருந்து மீள்விக்கப்பட்டது