அரசி தியே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அரசி தியே
இராணி தியேவின் சிற்பம், பெர்லின் அருங்காட்சியகம்
பண்டைய எகிப்திய அரசி தியே
ஆட்சிக் காலம் கிமு 1390 – கிமு 1353
(37 ஆண்டுகள்)
வாழ்க்கைத் துணை மூன்றாம் அமென்கோதேப்
வாரிசு
அக்கெனதென்
தந்தை யுவா
மரபு எகிப்தின் பதினெட்டாம் வம்சம்
தாய் ஜுயூ
பிறப்பு கிமு 1398
அக்கீம், மேல் எகிப்து
இறப்பு கிமு 1338 (வயது 60 ஆண்டுகள்)
அடக்கம் தீபை நகரத்தில் கல்லறை எண் KV35
சமயம் பண்டைய எகிப்திய சமயம்
மூன்றாம் அமென்கோதேப் மற்றும் தியே திருமணத்தின் நினைவுச் சின்னம்

தியே (Tiye) (கிமு 1398 – கிமு 1338) பண்டைய எகிப்தின் புது எகிப்து இராச்சியத்தை ஆண்ட 18-ஆம் வம்ச பார்வோன்கள் மூன்றாம் அமென்கோதேப்பின் பட்டத்து அரசியும், அக்கெனதெனின் தாயும், துட்டன்காமனின் பாட்டியும் ஆவார்.[1] [2][3]II 1898-இல் தீபை நகரத்தில், இவரது மம்மியை மூன்றாம் அமென்கோதேப்பின் கல்லறை எண் 35-இல் கண்டெடுக்கப்பட்டது. பார்வோன் மூன்றாம் அமென்கோதேப் தனது 38/39வது ஆட்சிக் காலத்தின் போது (கிமு1353 /1350) இறப்பிற்கு பிறகு, 12 ஆண்டுகள் வரை அரசி தியே உயிர் வாழ்ந்தார். அமர்னா நிருபங்களில் அரசி தியே, மூன்றாம் அமென்கோதேப்பின் அன்புற்குரிய அரசி எனக்குறித்துள்ளது.

படக்காட்சிகள்[தொகு]

பண்டைய எகிப்திய ஆட்சியாளர்களின் மம்மி ஊர்வலம்[தொகு]

3 ஏப்ரல், 2021 அன்று எகிப்திய அருங்காட்சியகத்திலிருந்து எகிப்தின் பதினேழாம் வம்சம் முதல் எகிப்தின் இருபதாம் வம்சம் வரையிலான புகழ்பெற்ற 18 பார்வோன்கள் மற்றும் 4 அரசிகளின் மம்மிகளை எகிப்திய பண்பாட்டின் தேசிய அருங்காட்சியகத்தில் வைப்பதற்கு சிறப்புடன் ஊர்வலமாக எடுத்துச் செல்லும் போது, அரசி தியே மம்மியும் எடுத்துச் செல்லப்பட்டது. [4]

மேற்கோள்கள்[தொகு]

உசாத்துணை[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=அரசி_தியே&oldid=3130396" இருந்து மீள்விக்கப்பட்டது