நவம்பர் 12
Appearance
<< | நவம்பர் 2024 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | |||||
3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 |
10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 |
17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 |
24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 |
MMXXIV |
நவம்பர் 12 (November 12) கிரிகோரியன் ஆண்டின் 316 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 317 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 49 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
- 764 – திபெத்தியப் படைகள் சீனாவின் டாங் மக்களின் தலைநகரான சங்கான் நகரை 15 நாட்கள் கைப்பற்றி வைத்திருந்தன.
- 1028 – பின்னாளைய பைசாந்தியப் பேரரசி சோயி பேரரசர் மூன்றாம் ரொமானொசின் மனைவியாக முடிசூடினார்.
- 1555 – திருத்தந்தைகளுக்கு எதிராக 1529 முதல் கொண்டுவரப்பட்ட சட்டங்கள் அனைத்தும் திரும்பப் பெறப்பட்டு கத்தோலிக்க திருச்சபையை இங்கிலாந்தில் மீண்டும் கொண்டுவரும் சட்டத்தை மகாராணி முதலாம் மேரி கொண்டு வந்தார்.
- 1793 – பாரிசு நகரின் முதலாவது முதல்வர் சான் பெய்லி கழுத்து துண்டிக்கப்பட்டு மரணதண்டனைக்குள்ளாக்கப்பட்டார்.
- 1893 – அன்றைய பிரித்தானிய இந்தியாவுக்கும் (தற்போதைய பாக்கித்தான்) ஆப்கானித்தானுக்கும் இடையேயான துராந்து எல்லைக்கோடு கீறப்படுவதற்கான உடன்பாடு எட்டப்பட்டது.
- 1905 – நோர்வே மக்கள் பொது வாக்கெடுப்பு மூலம் குடியாட்சியை விட மன்னராட்சியே சிறந்தது எனத் தெரிவித்தனர்.
- 1918 – ஆஸ்திரியா குடியரசாகியது.
- 1927 – மகாத்மா காந்தி இலங்கைக்கான தனது முதலாவதும் கடைசியுமான பயணத்தை மேற்கொண்டார்.
- 1927 – லியோன் திரொட்ஸ்கி சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். ஜோசப் ஸ்டாலின் சோவியத்தின் முழு அதிகாரத்தையும் கைப்பற்றினார்.
- 1928 – வெசுட்ரிசு என்ற பயணிகள் கப்பல் வர்ஜீனியாவில் மூழ்கியதில் பெண்கள், குழந்தைகள் உட்பட 110 பேர் உயிரிழந்தனர்.
- 1940 – இரண்டாம் உலகப் போர்: காபோன் சண்டை முடிவுக்கு வந்தது. பிரெஞ்சுப் படைகள் காபோன், லிப்ரவில் நகரைக் கைப்பற்றின.
- 1941 – இரண்டாம் உலகப் போர்: செவஸ்தபோல் நகரில் சோவியத் போர்க் கப்பல் "செர்வோனா உக்ரயீனா" மூழ்கடிக்கப்பட்டது.
- 1944 – இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியாவின் வான்படை செருமனியின் திர்பித்சு போர்க்கப்பலை நோர்வே அருகில் குண்டுகள் வீசி மூழ்கடித்தது.
- 1948 – டோக்கியோவில் பன்னாட்டு போர்க் குற்றவாளிகளின் நீதிமன்றம் ஒன்று ஏழு சப்பானிய இராணுவ அதிகாரிகளுக்கு 2ம் உலகப் போரில் இழைத்த குற்றங்களுக்காக மரண தண்டனை விதித்தது.
- 1956 – மொரோக்கோ, சூடான், தூனிசியா ஆகியன ஐநாவில் இணைந்தன.
- 1956 – சூயெசு நெருக்கடி: இசுரேலிய படைகள் காசாக்கரையில் ராஃபா என்ற இடத்தில் 111 பாலத்தீன அகதிகளைச் சுட்டுக் கொன்றனர்.
- 1969 – வியட்நாம் போர்: மை லாய் படுகொலைகள் தொடர்பான உண்மைகளை ஊடகவியலாளர் சீமோர் எர்சு வெளியிட்டார்.
- 1970 – போலா சூறாவளி கிழக்குப் பாக்கித்தானைத் (இன்றைய வங்காளதேசம்) தாக்கியதில் 500.000 பேர் வரை இறந்தனர்.
- 1975 – கொமொரோசு ஐநாவில் இணைந்தது.
- 1980 – நாசாவின் விண்கப்பல் வொயேஜர் 1 சனிக் கோளுக்கு மிக அருகில் சென்று அதன் வளையங்களின் படங்களை பூமிக்கு அனுப்பியது.
- 1981 – கொலம்பியா விண்ணோடம் தனது இரண்டாவது விண்வெளிப் பயணத்தை இரண்டு வீரர்களுடன் ஆரம்பித்தது.
- 1982 – லியோனீது பிரெசுனேவ் இறந்ததை அடுத்து, சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரராக யூரி அந்திரோப்பொவ் தெரிவு செய்யப்பட்டார்.
- 1982 – போலந்தின் சொலிடாரிட்டி தொழிற்சங்கத் தலைவர் லேக் வலேசா பதினொரு மாத சிறைத்தண்டனைக்குப் பின்பு விடுதலையானார்.
- 1989 – தென்னிலங்கையின் உலப்பனையில் தனது தோட்ட வீட்டில் மறைந்திருந்த மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் றோகண விஜேவீர கைதாகி மறுநாள் கொல்லப்பட்டார்.
- 1990 – இளவரசர் அக்கிகித்தோ சப்பானின் 125-வது பேரரசராக முடிசூடினார்.
- 1990 – இணைய வலை பற்றிய தனது முதலாவது திட்டத்தை டிம் பேர்னேர்ஸ்-லீ அறிவித்தார்.
- 1991 – கிழக்குத் திமோர், டிலியில் இடம்பெற்ற மாணவர் போராட்டம் இந்தோனீசிய இராணுவத்தினரால் முறியடிக்கப்பட்டது. நூற்றுக்கணக்கான மாணவர்கள் உயிரிழந்தனர்.
- 1994 – இலங்கையின் 5வது அரசுத் தலைவராக சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவு செய்யப்பட்டார்.
- 1995 – குரோவாசிய விடுதலைப் போரை அமைதியாக முடிவுக்குக் கொண்டுவர எர்தூத் உடன்பாடு எட்டப்பட்டது.
- 1996 – சவூதி அரேபியாவின் போயிங் விமானமும் கசக்கசுத்தானின் இலியூசின் விமானமும் புது டில்லிக்கு அருகில் நடுவானில் மோதிக் கொண்டதில் 349 பேர் உயிரிழந்தனர்.
- 1999 – துருக்கியின் வடமேற்கே இடம்பெற்ற 7.2 அளவு நிலநடுக்கத்தில் 845 பேர் உயிரிழந்தனர்.
- 2001 – நியூயோர்க் நகரில் டொமினிக்கன் குடியரசு நோக்கிச் சென்ற அமெரிக்க விமானம் புறப்பட்ட சில வினாடிகளில் விபத்துக்குள்ளாகியதில் விமானத்தில் சென்ற 260 பேரும் தரையில் இருந்த 5 பேரும் கொல்லப்பட்டனர்.
- 2001 – ஆப்கானித்தானில் வடக்குக் கூட்டணி படைகள் முன்னேறியதை அடுத்து, காபூல் நகரை விட்டு தலிபான் படைகள் முற்றாக விலகினர்.
- 2006 – முன்னாள் சோவியத் குடியரசான தெற்கு ஒசேத்தியா ஜோர்ஜியாவிடம் இருந்து பிரிந்து செல்ல வாக்கெடுப்பை நடத்தியது.
- 2011 – ஈரானில் ஏவுகணைத் தளம் ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 17 பேர் உயிரிழந்தனர்.
- 2014 – ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் ரொசெட்டா விண்கலத்தில் இருந்து இறக்கப்பட்ட பிலே விண்கலம் 67பி/சுரியூமொவ்-கெராசிமென்கோ வால்வெள்ளியில் தரையிறங்கியது.
- 2015 – பெய்ரூத் நகரில் இடம்பெற்ற இரண்டு தற்கொலைத் தாக்குதல்களில் 43 பேர் கொல்லப்பட்டனர், 200 பேர் காயமடைந்தனர்.
- 2017 – ஈரானில் ஈராக் எல்லைப் பகுதியில் கெர்மான்சா மாகாணத்தில் இடம்பெற்ற 7.3 அளவு நிலநடுக்கத்தில் 500 இற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். 8,100 பேர் காயமடைந்தனர்.
பிறப்புகள்
- 1817 – பகாவுல்லா, பகாய் சமயத்தைத் தோற்றுவித்த பாரசீகர் (இ. 1892)
- 1819 – மானியர் வில்லியம்ஸ், பிரித்தானிய மொழியியலாளர் (இ. 1899)
- 1840 – ஆகுஸ்ட் ரொடான், பிரான்சிய சிற்பி (இ. 1917)
- 1842 – சான் வில்லியம் ஸ்ட்ரட், நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய இயற்பியலாளர் (இ. 1919)
- 1866 – சுன் இ சியன், சீனக் குடியரசின் 1வது அரசுத்தலைவர் (இ. 1925)
- 1879 – சே. ப. இராமசுவாமி, இந்திய வழக்கறிஞர், அரசியல்வாதி (இ. 1966)
- 1896 – சலீம் அலி, இந்திய இயற்கையியலாளர் (இ. 1987)
- 1918 – சிறீபதி சந்திரசேகர், இந்திய கல்வியாளர், அரசியல்வாதி (இ. 2001)
- 1920 – வல்லிக்கண்ணன், தமிழக எழுத்தாளர் (இ. 2006)
- 1926 – எம். எஸ். செல்லச்சாமி, இலங்கை அரசியல்வாதி (இ. 2020)
- 1934 – சார்லஸ் மேன்சன், அமெரிக்க மதக்குழுத் தலைவர் (இ. 2017)
- 1940 – அம்ஜத் கான், இந்திய நடிகர், இயக்குநர் (இ. 1992)
- 1947 – ரெஜினால்ட் குரே, இலங்கை அரசியல்வாதி, வடமாகாணத்தின் 5-வது ஆளுநர் (இ. 2023)
- 1948 – அசன் ரவ்கானி, ஈரானின் 7வது அரசுத்தலைவர்
- 1962 – சதரூபா சன்யால், இந்திய நடிகை
- 1971 – சென் குவாங்செங், சீன-அமெரிக்க செயற்பாட்டாளர்
- 1982 – ஆன் ஹாத்தவே, அமெரிக்க நடிகை
- 1985 – சனம் ஷெட்டி, தென்னிந்தியத் திரைப்பட நடிகை
இறப்புகள்
- 1623 – யோசபாத்து, இலித்துவேனியப் பேராயர் (பி. 1582)
- 1916 – பெர்சிவால் உலோவெல், அமெரிக்க வானியலாளர், கணிதவியலாளர் (பி. 1855)
- 1946 – மதன் மோகன் மாளவியா, இந்திய அரசியல்வாதி (பி. 1861)
- 1969 – லு சாஃவ்சி, சீனக் குடியரசின் 2வது அரசுத்தலைவர் (பி. 1898)
- 1994 – வில்மா ருடோல்ஃப், அமெரிக்க தடகள விளையாட்டு வீரர் (பி. 1940)
- 1997 – கண. முத்தையா, தமிழக விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர், பதிப்பாளர் (பி. 1913)
- 2001 – சத்குரு சிவாய சுப்ரமணியசுவாமி, அமெரிக்க இந்துத் துறவி (பி. 1927)
- 2005 – மது தண்டவதே, இந்திய இடதுசாரி அரசியல்வாதி (பி. 1924)
- 2015 – ஈ. எல். ஆதித்தன், தென்னிந்தியத் தமிழ்த் திரைப்பட நடிகர்
சிறப்பு நாள்
வெளி இணைப்புகள்
- "இன்றைய நாளில்". பிபிசி.
- "நவம்பர் 12 வரலாற்று நிகழ்வுகள்". OnThisDay.com.
- நியூயார்க் டைம்சு: இன்றைய நாளில்