காபோன் சண்டை
காபோன் சண்டை | |||||||
---|---|---|---|---|---|---|---|
நடுநிலக்கடல், மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க களத்தின் பகுதி | |||||||
|
|||||||
பிரிவினர் | |||||||
ஐக்கிய இராச்சியம் சுதந்திர பிரான்ஸ் | விஷி பிரான்சு | ||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
சார்லஸ் டி கோல் பியர் கோனிக் | மார்செல் டேட்டு | ||||||
இழப்புகள் | |||||||
தெரியவில்லை | 1 சிறு கப்பல், 1 நீர்மூழ்கிக் கப்பல் |
காபோன் சண்டை (Battle of Gabon) என்பது இரண்டாம் உலகப் போரின் போது நேச நாட்டுப் படைகள் விஷி பிரான்சின் கட்டுப்பாட்டில் இருந்த காபோன் உள்ளிட்ட பிரெஞ்சு நடுநிலக்கோடு பகுதிகளைக் கைப்பற்ற நடத்திய போர் நிகழ்வுகளைக் குறிக்கிறது. லிபர்வில் சண்டை என்றும் அழைக்கப்படும் இச்சண்டை நவம்பர் 8-12, 1940 காலகட்டத்தில் நடைபெற்றது
ஜூன் 1940 இல் பிரான்சு சண்டையில் தோல்வியடைந்த பிரான்சு நாசி ஜெர்மனியிடம் சரணடைந்தது. பிரெஞ்சு அரசியல்வாதிகளில் ஒரு பகுதியினர் நாசி ஜெர்மனியுடன் ஒத்துழைத்து அதன் ஆதரவுடன் விஷி அரசை உருவாக்கினர். இதனை ஏற்றுக் கொள்ளாத மற்றொரு பிரிவினர் சார்லஸ் டி கோல் தலைமையில் நாடுகடந்த விடுதலை பிரான்சு அரசை உருவாக்கினர். ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவிலிருந்த பிரெஞ்சு காலனிகள் அனைத்தும் இவ்விரு தரப்புகளுள் ஏதேனும் ஒன்றுக்கு ஆதரவு தெரிவித்தன. விஷி அரசின் கட்டுப்பாட்டிலிருந்த லிபியாவைத் தாக்க நேச நாட்டுப்படைகள் திட்டமிட்டன. இதற்காக பிரெஞ்சு நடுநிலக்கோடு பகுதிகளின் மீது படையெடுத்தன. அக்டோபர் 1940 இல் இப்படையெடுப்புக்கான ஆயத்தங்கள் டி கோல் தலைமையில் தொடங்கின.
நவம்பர் 8 ஆம் தேதி நேச நாட்டுத் தாக்குதல் தொடங்கியது. கடல்வழியாகத் தரையிறங்கிய விடுதலை பிரான்சுப் படைகள் விரைவில் முன்னேறி கபோன் தலைநகர் லிபர்வில்லைக் கைப்பற்றின. நவம்பர் 12ம் தேதி பிரெஞ்சு நடுநிலக்கோடு பகுதிகளிலிருந்த விஷிப் படைகள் சரணடைந்தன. கபோன் மற்றும் பிற பிரெஞ்சு நடுநிலக்கோடு பகுதிகள் டி கோலின் படைகளின் கட்டுப்பாட்டில் வந்தன.