லியோனீது பிரெசுனேவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லியோனீது பிரெசுனேவ்
Leonid Brezhnev
Леонид Брежнев
சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலர்
பதவியில்
14 அக்டோபர் 1964 – 10 நவம்பர் 1982
முன்னவர் நிக்கிட்டா குருசேவ்
பின்வந்தவர் யூரி அந்திரோப்பொவ்
சோவியத் உயர்பீடத் தலைவர்
பதவியில்
16 சூன் 1977 – 10 நவம்பர் 1982
முன்னவர் நிக்கொலாய் பொத்கோர்னி
பின்வந்தவர் யூரி அந்திரோப்பொவ்
பதவியில்
7 மே 1960 – 15 சூலை 1964
முன்னவர் கிளிமென்ட் வரசீலொவ்
பின்வந்தவர் அனஸ்தாசு மிக்கோயான்
சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சியின் இரண்டாவது செயலாளர்
பதவியில்
21 சூன் 1963 – 14 அக்டோபர் 1964
முன்னவர் பிரோல் கொசுலோவ்
பின்வந்தவர் நிக்கொலாய் பொத்கோர்னி
கசக்கஸ்தான் பொதுவுடமைக் கட்சியின் முதலாவது செயலாளர்
பதவியில்
8 மே 1955 – 6 மார்ச் 1956
முன்னவர் பந்திலெய்மொன் பனமரியென்கோ
பின்வந்தவர் இவான் யாக்கோவ்லெவ்
மல்தோவா பொதுவுடமைக் கட்சியின் முதலாவது செயலாளர்
பதவியில்
3 நவம்பர் 1950 – 16 ஏப்ரல் 1952
முன்னவர் நிக்கொலாய் கோவல்
பின்வந்தவர் திமீத்ரி கிளாத்கி
22-வது, 23-வது, 24-வது, 25-வது, 26-வது சோவியத் உயர்பீடங்களின் முழுமையான உறுப்பினர்
பதவியில்
31 அக்டோபர் 1961 – 10 நவம்பர் 1982
19-வது, 20-வது, 21-வது சோவியத் உயர்பீடங்களின் பரிந்துரைக்கப்பட்ட உறுப்பினர்
பதவியில்
16 அக்டோபர் 1952 – 29 சூன் 1957
தனிநபர் தகவல்
பிறப்பு லியோனீது இலீச் பிரெசுனேவ்
திசம்பர் 19, 1906(1906-12-19)
காமியான்சுகி, எக்கத்தரீவொன்சிலாவ், உருசியப் பேரரசு
இறப்பு 10 நவம்பர் 1982(1982-11-10) (அகவை 75)
சரீச்சியெ, மாஸ்கோ, உருசியா, சோவியத் ஒன்றியம்
இறப்பிற்கான
காரணம்
மாரடைப்பு
அடக்க இடம் கிரெம்லின், மாஸ்கோ
குடியுரிமை உருசியப் பேரரசுசோவியத் ஒன்றியம்
தேசியம் உக்ரைனியர்
அரசியல் கட்சி சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) விக்தோரியா பிரெசுனேவா
பிள்ளைகள் கலீனா,
யூரி
இருப்பிடம் சாரேச்சியே, மாஸ்கோ
தொழில் உலோகவியல் பொறியியலாளர், அரச அதிகாரி
விருதுகள் சோவியத் ஒன்றியத்தின் வெற்றி வீரர்
கையொப்பம்
படைத்துறைப் பணி
பற்றிணைவு சோவியத் ஒன்றியம்
கிளை செஞ்சேனை
சோவியத் இராணுவம்
பணி ஆண்டுகள் 1941–1982
தர வரிசை சோவியத் படைத்தலைவர்
(1976–1982)
படைத்துறைப் பணி சோவியத் படைத்துறை
சமர்கள்/போர்கள் இரண்டாம் உலகப் போர்

லியோனீது இலீச் பிரெசுனேவ் (Leonid Ilyich Brezhnev[1] உருசியம்: Леони́д Ильи́ч Бре́жнев; உக்ரைனியன்: Леоні́д Іллі́ч Бре́жнєв, டிசம்பர் 19 [யூ.நா. டிசம்பர் 6, 1906] 1906 – 10 நவம்பர் 1982)[2] சோவியத்-உக்ரைனிய அரசியல்வாதி ஆவார். இவர் சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சியின் மத்திய குழுவின் பொதுச் செயலாளராக 1964 முதல் 1982 இல் இறக்கும் வரை பதவியில் இருந்து சோவியத் ஒன்றியத்தின் தலைமைப் பதவியை வகித்தவர்.

வாழ்க்கைச் சுருக்கம்[தொகு]

சோவியத் உக்ரைனில் பிறந்தவர். குழந்தைப் பருவம் முதலே உள்நாட்டுப் போர், ரஷ்யப் புரட்சி, முதல் உலகப் போர் என்று மோதல்களைப் பார்த்தும் கேள்விப்பட்டும் வளர்ந்தவர். 15 வயதில் பள்ளிப் படிப்பை நிறுத்திவிட்டு வேலைக்குப் போனார். பகுதி நேரமாகப் பயின்று பட்டம் பெற்றார். சிறு சிறு அரசுப் பதவிகளை வகித்தார். சோவியத் தலைவர் ஸ்டாலினின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார். கம்யூனிச கட்சியில் இணைந்தார்.

  • கட்சியின் தீவிர உறுப்பினராகப் பணியாற்றினார். ‘அனைத்தும் அனைவருக்கும் சொந்தம்’ என்ற கொள்கையில் உறுதியாக இருந்தார். விவசாயிகள் தங்களிடம் உள்ள உபரி தானியங்களை அரசிடம் விற்குமாறு ஸ்டாலின் அப்போது உத்தரவிட்டார். இந்த உத்தரவுக்கு விவசாயிகளை அடிபணியச் செய்தவர்களில் பிரஷ்னேவ் ஒருவர்.
  • இரண்டாம் உலகப்போர் தொடங்கியபோது, தன் பிராந்தியத்தில் கட்சியின் முக்கிய தலைவர் ஆனார். ஸ்டாலினின் ‘ரஷ்ய மயமாக்கல்’கொள்கையைப் பரப்ப அமைக்கப்பட்ட சோவியத் செம்படைப் பிரிவில் பணியாற்றினார்.
  • உழைப்பும் அர்ப்பணிப்பு உணர்வும் குறுகிய காலத்திலேயே இவருக்கு பதவி உயர்வுகள், கூடுதல் பொறுப்புகளை பெற்றுத் தந்தன. விரைவில் மேஜர் ஜெனரல் ஆனார். 1946-ல் ராணுவத்தில் இருந்து விலகி கட்சிப் பொறுப்பை ஏற்றார். 1950-ல் நிகிடா குருஷேவ் இவரை மால்டேவியன் கம்யூனிச கட்சியின் முதல் பொதுச் செயலாளராக நியமித்தார்.
  • 2 ஆண்டுகள் கழித்து மாஸ்கோ சென்று வலிமைமிக்க செயலகமான கம்யூனிச கட்சியின் மத்திய குழுவில் ஸ்டாலின் தலைமையில் பணிபுரிந்தார். விசுவாசமான தொண்டராக இருந்து அவரது நம்பிக்கையைப் பெற்றார். 1953-ல் ஸ்டாலின் மறைவுக்குப் பிறகு இவரது அரசியல் வாழ்வு சிறிது காலம் சரிவைக் கண்டது. ஆட்சியைக் கைப்பற்றிய குருஷேவ் இவரை ராணுவம் மற்றும் கடற்படை இயக்கத்தின் தலைமைப் பதவியில் நியமித்தார்.
  • 1955-ல் கஜகஸ்தானின் கம்யூனிச கட்சியின் முதல் பொதுச் செயலாளர் ஆனார். குருஷேவின் அரசியல் செயல்பாடுகளுக்கு பக்கபலமாக இருந்தார். 1959-ல் மத்திய குழுவின் 2-வது செயலாளராக பதவி உயர்வு பெற்றார்.
  • 1960-ல் சுப்ரீம் சோவியத்தின் அதிபர் ஆனார். அப்பதவியில் 1964 வரை செயல்பட்டார். 1977-ல் மீண்டும் இப்பதவிக்கு வந்தவர் 1982-ல் இறக்கும் வரை நீடித்தார். இவரது ஆட்சிக் காலத்தில் ரஷ்யா பல போர்களைக் கண்டது.
  • உலகம் முழுவதும் சோவியத் யூனியன் தாக்கம் கணிசமாக அதிகரித்தது. ஒரு தலைவராக எந்த நடவடிக்கையும் எடுப்பதற்கு முன்பு தன் சகாக்களை கலந்தாலோசிப்பதில் கவனமாக இருந்தவர்.
  • சோவியத் யூனியனின் வலுவான தலைவராக 18 ஆண்டுகள் செயல்பட்டவர். ஸ்டாலினுக்கு அடுத்தபடியாக அதிக காலம் பதவி வகித்த இவர் 76-வது வயதில் மறைந்தார்.

[3]

வெளி இணைப்புகள்[தொகு]

  1. "Brezhnev". Random House Webster's Unabridged Dictionary.
  2. Profile of Leonid Brezhnev
  3. சிவலிங்கம், ராஜலட்சுமி (19 டிசம்பர் 2014). "லியோனிட் பிரெஷ்னேவ் 10". தி இந்து தமிழ் இம் மூலத்தில் இருந்து 19 டிசம்பர் 2014 அன்று. பரணிடப்பட்டது.. http://tamil.thehindu.com/opinion/blogs. பார்த்த நாள்: 19 டிசம்பர் 2014. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=லியோனீது_பிரெசுனேவ்&oldid=2968491" இருந்து மீள்விக்கப்பட்டது