ஆதித்தன் (நடிகர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஈ. எல். ஆதித்தன் (About this soundஓலிப்பு ) (இறப்பு: 12 நவம்பர் 2015) தென்னிந்தியத் தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

ஆதித்தனின் இயற்பெயர் மலைப்பெருமாள். இவர் தமிழ்நாடு, காரைக்கால் மாவட்டம், திருமலைராயன்பட்டினத்தைச் சேர்ந்தவர். இவர் கொழும்பு புனித பெனடிக்ட் கல்லூரியில் கல்வி பயின்றவர். பள்ளியில் படிக்கும் போது நாடகங்களில் நடித்து பல பரிசுகளைப் பெற்றிருக்கிறார். இவருக்கு சந்திரா, பத்மா என இரண்டு மனைவிகளும், 5 மகன்களும், 4 மகள்களும் உள்ளவர்.[1]

ஆதித்தன் 1965 ஆம் ஆண்டில் விளக்கேற்றியவள் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார். தாய்வீட்டு சீதனம் (1975), தாயும் மகளும், தனிப்பிறவி உட்பட பல படங்களில் வில்லன் வேடங்களில் நடித்தார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆதித்தன்_(நடிகர்)&oldid=2539010" இருந்து மீள்விக்கப்பட்டது