வேட்டைக்காரர்கள் கற்பலகை
செய்பொருள் | கனிமப் படுகைப் பாறை |
---|---|
அளவு | c. 66 cm x 26 cm |
உருவாக்கம் | கிமு 3100 |
தற்போதைய இடம் | பிரித்தானிய அருங்காட்சியகம் மற்றும் இலூவா அருங்காட்சியகம் |
அடையாளம் | British Museum, EA 20790, EA 20792, Louvre E 11254 |
வேட்டைக்காரர்கள் கற்பலகை அல்லது சிங்க வேட்டை கற்பலகை (Hunters Palette or Lion Hunt Palette) வரலாற்றுக் காலத்திற்கு முந்தைய எகிப்தில் ஏறத்தாழ கிமு 3100ல் நிலவிய மூன்றாம் நக்காடா பண்பாட்டுக் காலத்தில் அழகுமிக்க சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட மெல்லிய கல் தட்டு ஆகும். இத்தட்டுகளின் உடைந்த பாகங்கள் பிரித்தானிய அருங்காட்சியகம் மற்றும் இலூவா அருங்காட்சியகங்களில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
உள்ளடக்கம்[தொகு]
வேட்டைக்காரர்கள் கற்பலகையில் சிங்க வேட்டை மற்றும் பிற விலங்குகளான பறவைகள் பாலைவன முயல்கள், வனப்புமிக்க சிறுமான்களை மனிதர்கள் வேட்டையாடுதலை காட்சிப்படுத்தியுள்ளனர். வில் & அம்புகள் ஏந்திய 20 வேட்டைக்காரர்கள், எறிகம்புகளுடன், தீக்கல் கக்திகள் மற்றும் ஈட்டிகளுடன் காணப்படுகின்றனர். மேலும் கற்பலகையில் சித்திர எழுத்துகளில் எருதின் முன்பக்கம் போன்ற அமைப்புகள் காணப்படுகிறது.
விளக்கம்[தொகு]
-
வேட்டைகாரர்களின் ஆயுதங்கள், இலூவா அருங்காட்சியகம்
-
சிங்க உடலில் பாய்ந்த ஈட்டிகள், இலூவா அருங்காட்சியகம்
-
வேட்டைக்காரர்கள்
-
வேட்டைக்காரர்களின் வரைபடம்
-
வேட்டைக்காரர்களின் வரைபடம்
-
வேட்டைக்காரர்களின் வரைபடம்
-
வேட்டைக்காரர்களின் வரைபடம்
இதனையும் காண்க[தொகு]
- வரலாற்றுக்கு முந்தைய எகிப்து
- நக்காடா பண்பாடு
- நார்மெர் கற்பலகை
- போர்க்கள கற்பலகை
- பண்டைய எகிப்தின் தொல்பொருட்கள்