உள்ளடக்கத்துக்குச் செல்

சித்திர எழுத்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிரேக்கோ என்ற வழமையான எகிப்திய சித்திர எழுத்துகள் - இது ரோமானிய காலத்திய, சிற்பம்.
கீற்றுகள்: விரியன் பாம்பு, ஆந்தை, 'வெதுப்பி', மடிந்த துணி

சித்திர எழுத்து (Hieroglyph) என்பது, பண்டைய எகிப்தியர்கள் தங்களின் கோயில்களிலும், வெற்றித் தூண்களிலும், மற்றும் பிற நினைவுச் சின்னங்களிலும் வெட்டியதும், செதுக்கியதும, மற்றும் வரைந்ததுமான எழுத்துக்களாகும்.[1]

உருவ எழுத்துக்கள்

[தொகு]

எகிப்தியர்கள் முதலில் சூரியன், மலர், மற்றும் கண் போன்ற பொருட்களைக் குறிப்பதற்கு அவற்றின் உருவங்களையே சித்திரங்களாக எழுதிவந்தனர். பின்னர், இந்த முறை மிகுந்த கடினமாகவும், நெடுங்காலம் பிடிப்பதாகவும், ஏராளமான உருவங்களையும் பயன்படுத்த வேண்டிதாகவுமிருந்ததால் 'உருவ எழுத்தைத்' (Pictograph) தவிர்த்தனர்.[1]

கருத்தெழுத்துக்கள்

[தொகு]

'கருத்தெழுத்தைப்' (Ideograph) பயன்படுத்தத் தொடங்கினார்கள். அம்புகள் பாய்வதுபோல் வரைந்து போர் என்பதை குறித்தனர், மேலும் கண் எழுதி அதன் கீழ் செங்கோல் எழுதினால் அது ஒரு அரசன் என்பதை குறிக்கும். அதன் பின்னர் சொற்களையும், சொல்லின் பகுதிகளையும் குறிப்பதற்கான படிமங்களை பயன்படுத்தினார்கள். கல் என்று படிப்பதைக் குறிக்கும் சொல்லை எழுதுவதற்கு அதே ஒலியையுடைய கல் (பாறையின் ஒருபகுதி) என்ற பொருளின் உருவத்தை எழுதுவது போன்ற இந்த முறை, மற்றும் இந்த உருவங்கள் 'சொல் அடையாளங்கள்' (Word-Signs) எனப்படும்.[1]

நெடுங்கணக்கு

[தொகு]

அதன்பிறகு வந்த காலங்களில், நெடுங்கணக்கு (Alphabet) முறைபோன்ற ஒன்றை உருவாக்கினார்கள். பொதுவாக மற்ற மக்கள் அனைவரும் நெடுங்கணக்கு முறையை உருவாக்கியப் பின் உருவ எழுத்தையும், கருத்தெழுத்தையும், மற்றும் சொல்லெழுத்தையும் பயன்படுத்துவதில்லை, ஆனால் எகிப்தியர்கள் 24 ஒலிகளுடைய நெடுங்கணக்கை உருவாக்கியப் பின்பும், அதற்கு முந்தைய முறைகளையும், சுமார் கி. மு 3000 முதல், கி. பி 6ஆம் நூற்றாண்டு வரையிலும் கையாண்டுள்ளார்கள்.[1]

ஆதியில், எகிப்தியர்கள் தங்கள் சித்திர எழுத்துக்களைக் கல்லாலான நினைவுச் சின்னங்களில் பொறிப்பதற்கே பயன்படுத்தி வந்தனர். உளியையும், சுத்தியலையும் கொண்டே வெட்டப்பட்ட இச்சித்திர எழுத்துக்கள், சின்னங்களை அழகுபடுத்தவும் உதவின.[1]

சான்றாதாரங்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 "சித்திர எழுத்து". www.tamilvu.org (தமிழ்). 2016. பார்க்கப்பட்ட நாள் 2016-10-06.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சித்திர_எழுத்து&oldid=3621012" இலிருந்து மீள்விக்கப்பட்டது