மதுக்கூர்
மதுக்கூர் | |
— பேரூராட்சி — | |
ஆள்கூறு | 10°29′N 79°24′E / 10.48°N 79.4°E |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தஞ்சாவூர் |
வட்டம் | பட்டுக்கோட்டை |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | பி. பிரியங்கா, இ. ஆ. ப [3] |
தலைவர் | SNS M.Hவகிதா பேகம் ஹாஜா முகைதீன் |
மக்கள் தொகை • அடர்த்தி |
16,266 (2011[update]) • 3,253/km2 (8,425/sq mi) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு • உயரம் |
5 சதுர கிலோமீட்டர்கள் (1.9 sq mi) • 3 மீட்டர்கள் (9.8 அடி) |
இணையதளம் | www.townpanchayat.in/madukkur |
மதுக்கூர் (ஆங்கிலம்:Madukkur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் பட்டுக்கோட்டை வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
அமைவிடம்
[தொகு]மதுக்கூர் பேரூராட்சிக்கு கிழக்கே முத்துப்பேட்டை 18 கிமீ; மேற்கே பட்டுக்கோட்டை 12 கிமீ; வடக்கே மல்லிப்பட்டினம் 35 கிமீ; தெற்கே மன்னார்குடி 22 கிமீ ஒரத்தநாடு 25 கிமீ உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
[தொகு]5 சகிமீ பரப்பும், 15அ வார்டுகளும், 32 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி பட்டுக்கோட்டை (சட்டமன்றத் தொகுதி)க்கும், தஞ்சாவூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 4,007 வீடுகளும், 16,266 மக்கள்தொகையும் கொண்டது.[5] [6]
புவியியல்
[தொகு]இவ்வூரின் அமைவிடம் 10°29′N 79°24′E / 10.48°N 79.4°E ஆகும்.[7] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 3 மீட்டர் (9 அடி) உயரத்தில் இருக்கின்றது.
மதுக்கூரில் புகழ்பெற்றவர்கள்
[தொகு]- அத்தி கோ. இராமலிங்கம், பேச்சாளர், இலக்கியவாதி
- மரைக்காயர் - இவரது பெயர் முகமது யாக்கூப் மரைக்காயர். இலக்கியத்தில் உரையாடுவதில், அழகிய தமிழில் பேசுவதில் சிறந்தவர். மதுக்கூர் சுற்று வட்டாரம் முழுவதும் புகழ்பெற்றவர். இவரை 'மதுக்கூர் கம்பன்' என்று அழைத்து வந்தனர்.
- மதுக்கூர் மஜீத் - இவரது முழுப்பெயர் அப்துல் மஜீத். மதுக்கூர் சுற்று வட்டாரம் மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் தனது பழக்க வழக்கத்தால் பரிச்சயமானவர். இஸ்லாமிய பாடல்கள் சொந்தமாக தானே இயற்றி பாடி, பல மேடை கச்சேரிகள் செய்து வந்துள்ளார். சிங்கப்பூர் மலேசியாவிலும் கச்சேரிகள் செய்து வந்துள்ளார்.
- மதுக்கூர் கண்ணன் - அல்லிதந்த வானம் அன்னையல்லவா, சொல்லி தந்த பூமி தந்தையல்லவா..என்ற வரிகளை தமிழ் உலகிற்கு தந்தவர் தான் 'மதுக்கூர் கண்ணன்'. யார் திரைப்படத்தை இயக்கியதால்இவரை 'யார்கண்ணன்' என்றும் அழைக்கிறார்கள்.
- மதுக்கூர் இராமலிங்கம் - தமிழகம் முழுவதும் பல மேடைகளிலும் லியோனியுடன் சேர்ந்து பல பட்டிமன்றங்களில் பேசி இன்றும் இலக்கிய பணியில் வாழ்ந்து வருகிறார்.
வெளி இணைப்புகள்
[தொகு]ஆதாரங்கள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ மதுக்கூர் பேரூராட்சியின் இணையதளம்
- ↑ Madukkur Population Census 2011
- ↑ Madukkur Town Panchayat
- ↑ "Madukkur". Falling Rain Genomics, Inc. பார்க்கப்பட்ட நாள் ஜனவரி 30, 2007.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)