இந்தியக் குடியரசின்பதினோராவது குடியரசுத் தலைவர் தேர்தல் 1997 ல் நடைபெற்றது.
கே. ஆர். நாராயணன் 956,290 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட டி. என் சேசன் 50,631 வாக்குகள் பெற்றார். நாராயணன் இந்தியாவின் தலித் சமூகத்தைச் முதல் குடியரசுத் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜூலை 17, 1997ல் பதினோராவது குடியரசுத் தலைவர் தேர்தல் நடத்தப்பட்டது. 1992-97ல் குடியரசுத் தலைவராக இருந்த சங்கர் தயாள் சர்மா மீண்டும் போட்டியிடவில்லை. மாறாக துணைக்குடியரசுத் தலைவர் கே. ஆர். நாராயணன் இந்திய தேசிய காங்கிரசு, ஐக்கிய முன்னணி ஆகியவற்றின் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பாரதிய ஜனதா கட்சியும் அவருக்கு ஆதரவளித்தது. அவருக்கு எதிராக முன்னாள் முதன்மைத் தேர்தல் ஆணையர்டி. என். சேஷன் போட்டியிட்டார். அவருக்கு சிவ சேனா கட்சி மட்டும் ஆதரவளித்தது. நாராயணன் எளிதில் வெற்றி பெற்று குடியரசுத் தலைவர் ஆனார்.