இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தல், 1992

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தல், 1997

← 1987 ஜூலை 24, 1992 1997 →
  Shankar Dayal Sharma 36.jpg No image.svg
வேட்பாளர் சங்கர் தயாள் சர்மா ஜி. ஜி. சுவெல்
கட்சி காங்கிரசு சுயேட்சை
சொந்த மாநிலம் மத்தியப் பிரதேசம் மேகாலயா

தேர்வு வாக்குகள்
6,75,864 3,46,485

முந்தைய குடியரசுத் தலைவர்

ரா. வெங்கட்ராமன்
காங்கிரசு

குடியரசுத் தலைவர் -தெரிவு

சங்கர் தயாள் சர்மா
காங்கிரசு

இந்தியக் குடியரசின் பத்தாவது குடியரசுத் தலைவர் தேர்தல் 1992 ல் நடைபெற்றது. சங்கர் தயாள் சர்மா வெற்றிபெற்று குடியரசுத் தலைவரானார்.

பின்புலம்[தொகு]

ஜூலை 24, 1992ல் இந்தியாவின் பத்தாவது குடியரசுத் தலைவர் தேர்தல் நடத்தப்பட்டது. 1987-92 காலகட்டத்தில் குடியரசுத் தலைவராக இருந்த ரா. வெங்கட்ராமன் மீண்டும் போட்டியிடவில்லை. துணைக் குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மா ஆளும் இந்திய தேசிய காங்கிரசுக் கட்சியின் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். அவருக்கு சிபிஎம், அரியானா விகாஸ் பரிசத் போன்ற கட்சிகளும் ஆதரவளித்தன. அவருக்கு எதிராக பாரதிய ஜனதா கட்சி, ஜனதா தளம்/தேசிய முன்னணி ஆகிய கட்சிகள் இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த பழங்குடியினரான ஜி. ஜி. சுவெல்லை வேட்பாளாராக்கின. இவர்களைத் தவிர வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி, காக்கா ஜோகீந்தர் சிங் ஆகியோரும் சுயேட்சை வேட்பாளர்களாகப் போட்டியிட்டனர். சங்கர் தயாள் சர்மா 65 % வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

முடிவுகள்[தொகு]

ஆதாரம்:[1][2]

வேட்பாளர் பெற்ற வாக்குகள்
சங்கர் தயாள் சர்மா 6,75,864
ஜி. ஜி. சுவெல் 3,46,485
ராம் ஜெத்மலானி 2,704
காக்கா ஜொகீந்தர் சிங் 1,135
மொத்தம் 1,026,188

மேற்கோள்கள்[தொகு]