ததியா இராச்சியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ததியா இராச்சியம்
दतिया रियासत
சுதேச சமஸ்தானம் பிரித்தானிய இந்தியா
1626–1950

Coat of arms of ததியா

சின்னம்

Location of ததியா
Location of ததியா
தி இம்பீரியல் கெசட்டியர் ஆப் இந்தியாவில் ததியா இராச்சியம்
வரலாறு
 •  நிறுவப்பட்டது 1626
 •  1948 சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தம் 1950
பரப்பு
 •  1901 5,500 km2 (2,124 sq mi)
Population
 •  1901 53,759 
மக்கள்தொகை அடர்த்தி Expression error: Unrecognized punctuation character ",". /km2  (Expression error: Unrecognized punctuation character ",". /sq mi)
தற்காலத்தில் அங்கம் ததியா மாவட்டம், மத்தியப் பிரதேசம், இந்தியா
ததியா அரண்மனை

ததியா இராச்சியம் (Datia State (இந்தி: दतिया राज्य) இந்திய விடுதலைக்கு முன்னர் பிரித்தானிய இந்தியாவின் கீழிருந்த 562 சுதேச சமஸ்தானங்களில் ஒன்றாகும். இது தற்கால மத்தியப் பிரதேச மாநிலத்தின் வடமேற்கில் உள்ள புந்தேல்கண்ட் பகுதியில் உள்ள ததியா மாவட்டப் பகுதிகளை கொண்டிருந்தது. 1911-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, ததியா இராச்சியம் 5,500 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 53,756 மக்கள் தொகையும் கொண்டிருந்தது. இந்த இராச்சியத்தில் புந்தேலி மொழி பேசப்பட்டது. இதன் ஆட்சியாளர்களுக்கு பிரித்தானிய இந்தியாவின் அரசு, 15 துப்பாக்கிக் குண்டுகள் முழுங்கி மரியாதை செய்தனர் .

வரலாறு[தொகு]

ததியா இராச்சிய மன்னர் சத்ருஜித் சிங், ஆட்சி காலம் 1762-1801

ஓர்ச்சா பகுதியை ஆண்ட இராஜபுத்திர குலத்தின் புந்தே வம்சத்தினரின் வழித்தோன்றல்கள் கிபி 1626-இல் ததியா இராச்சியத்தை நிறுவினர். மராத்தியப் பேரரசில் சிற்றரசாக இருந்த ததியா இராச்சியம், மூன்றாம் ஆங்கிலேய மராத்தியப் போருக்குப் பின்னர் 1818-ஆம் ஆண்டில், பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்கள் கொண்டுவந்த துணைப்படைத் திட்டத்தை ஏற்ற ததியா இராச்சியத்தினர், ஆண்டுதோறும் ஆங்கிலேயர்களுக்கு திறை செலுத்தி, புந்தேல்கண்ட் முகமையின் கீழ் சுதேச சமஸ்தானமாக ஆட்சி செய்தனர். [1] இது ஐக்கிய மாகாணத்தின் குவாலியர் முகமையின் செயல்பட்டது. ததியா இராச்சிய மன்னர்களுக்கு பிரித்தானிய இந்தியா அரசு, 15 துப்பாக்கிக் குண்டுகள் முழுங்கி மரியாதை செய்தனர்.

1947-இல் இந்திய விடுதலைக்குப் பின்னர், சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தப்படி ததியா இராச்சியம் 1948-ஆம் ஆண்டில் ஐக்கிய மாகாணத்துடன் இணக்கப்பட்டது. 1956-இல் மொழிவாரி மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் படி, ததியா இராச்சியம் மத்தியப் பிரதேச மாநிலத்தில் இணைக்கப்பட்டது.

ஆட்சியாளர்கள்[தொகு]

  • 1626 - 1656: இராவ் பகவான் சிங்
  • 1656 - 1683: இராவ் சுபா கரண் சிங்
  • 1683 - 1706: இராவ் தால்பால் சிங்
  • 1706 – 1733: இராவ் ராமச்சந்திர சிங்
  • 1733 – 1762: இராவ் இந்திரஜித் சிங்
  • 1762 – 1801: இராவ் சத்துருஜித் சிங்
  • 1801 – 1839: இராஜா பரிசத் சிங்
  • 1839 – 20 நவம்பர் 1857: இராஜா பிஜாய் சிங்
  • 1857 – 1865: இராஜா பவானி சிங்
  • 1865 – சூலை 1907: மகாராஜா பவானிசிங் ஜுதேவ் பகதூர்
  • 5 ஆகஸ்டு 1907 – 15 ஆகஸ்டு 1947: மகாராஜா கோவிந்த் சிங் ஜுதேவ் பகதூர்

இதனையும் காண்க[தொகு]

  1. Imperial Gazetteer of India
"https://ta.wikipedia.org/w/index.php?title=ததியா_இராச்சியம்&oldid=3374844" இலிருந்து மீள்விக்கப்பட்டது