திரிபுரா தேர்தல்கள்
திரிபுரா தேர்தல்கள் (Elections in Tripura) என்பது திரிபுரா மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் குறித்த தகவல்கள் ஆகும். திரிபுராவில் 1952 முதல் தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது.
1951-52 முதல் இந்தியப் பொதுத் தேர்தலில், திரிபுராவில் உள்ள வாக்காளர்கள் மக்களவைக்கு இரண்டு உறுப்பினர்களை நேரடியாகத் தேர்ந்தெடுத்தனர். சட்டப்பேரவைக்குத் தேர்தல் மூலம் 30 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்தனர்.[1]
1957 மற்றும் 1962 தேர்தல்களில், திரிபுராவில் உள்ள வாக்காளர்கள் 30 உறுப்பினர்கள் சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுத்தனர் (இரண்டு உறுப்பினர்கள் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளனர்).[2] 1963-ல் மாநில சபை கலைக்கப்பட்டது. நடப்பு உறுப்பினர்கள் புதிதாக உருவாக்கப்பட்ட சட்டமன்றத்திற்கு மாற்றப்பட்டனர்.[3] சட்டமன்றத்திற்கு முதல் தேர்தல் [2] மார்ச் 1972-ல், திரிபுரா மாநில தகுதியினைப் பெற்றதன் விளைவாக, 60 உறுப்பினர்களாக விரிவடைந்தது.[3]
மக்களவைத் தேர்தல்
[தொகு]திரிபுரா மக்களவைத் தேர்தல் முடிவுகள் பின்வருமாறு:[4]
ஆண்டு | மக்களவைத் தேர்தல் | திரிபுரா மேற்கு | திரிபுரா கிழக்கு | ||
---|---|---|---|---|---|
1952 | 1வது மக்களவை | இந்திய கம்யூனிஸ்ட் கட்சி | இந்திய கம்யூனிஸ்ட் கட்சி | ||
1957 | 2வது மக்களவை | இந்திய தேசிய காங்கிரஸ் | இந்திய கம்யூனிஸ்ட் கட்சி | ||
1962 | 3வது மக்களவை | இந்திய கம்யூனிஸ்ட் கட்சி | இந்திய கம்யூனிஸ்ட் கட்சி | ||
1967 | 4வது மக்களவை | இந்திய தேசிய காங்கிரஸ் | இந்திய தேசிய காங்கிரஸ் | ||
1971 | 5வது மக்களவை | இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) | இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) | ||
1977 | 6வது மக்களவை | பாரதிய லோக் தளம் | இந்திய தேசிய காங்கிரஸ் | ||
1980 | 7வது மக்களவை | இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) | இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) | ||
1984 | 8வது மக்களவை | இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) | இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) | ||
1989 | 9வது மக்களவை | இந்திய தேசிய காங்கிரஸ் | இந்திய தேசிய காங்கிரஸ் | ||
1991 | 10வது மக்களவை | இந்திய தேசிய காங்கிரஸ் | இந்திய தேசிய காங்கிரஸ் | ||
1996 | 11வது மக்களவை | இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) | இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) | ||
1998 | 12வது மக்களவை | இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) | இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) | ||
1999 | 13வது மக்களவை | இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) | இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) | ||
2004 | 14வது மக்களவை | இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) | இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) | ||
2009 | 15வது மக்களவை | இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) | இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) | ||
2014 | 16வது மக்களவை | இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) | இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) | ||
2019 | 17வது மக்களவை | பாரதிய ஜனதா கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
சட்டமன்றத் தேர்தல்கள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Bhattacharyya, Harihar (2018). Radical Politics and Governance in India's North East: The Case of Tripura (in ஆங்கிலம்). Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-317-21116-7.
- ↑ 2.0 2.1 Encyclopaedia of North-East India: Tripura.
- ↑ 3.0 3.1 "Brief History of the Tripura Legislative Assembly". பார்க்கப்பட்ட நாள் 2020-04-05.
- ↑ "Members of Lok Sabha elected from Tripura". பார்க்கப்பட்ட நாள் 5 April 2020.