உள்ளடக்கத்துக்குச் செல்

திரிபுரா சட்டமன்றத் தேர்தல், 2018

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2018 திரிபுரா சட்டமன்றத் தேர்தல்

← 2013 18 பிப்ரவரி 2018 2023 →

திரிபுரா சட்டப்பேரவையில் 60 இடங்கள்
அதிகபட்சமாக 31 தொகுதிகள் தேவைப்படுகிறது
வாக்களித்தோர்91.38% (2.19)
  Majority party Minority party Third party
 
தலைவர் பிப்லப் குமார் தேவ் மாணிக் சர்க்கார் நரேந்திர சந்திர தேப்வர்மா
கட்சி பா.ஜ.க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தி.பூ.ம.மு.
கூட்டணி தே.ஜ.கூ இடதுசாரி கூட்டணி தே.ஜ.கூ
தலைவரான
ஆண்டு
2016 1998 2009
தலைவர்
போட்டியிட்ட
தொகுதி
பனமாலிப்பூர் தன்பூர் தக்கார்ஜலா
முந்தைய
தேர்தல்
0 49 0
வென்ற
தொகுதிகள்
36[1][2] 16[1][2] 8[1][2]
மாற்றம் 36 33 8
மொத்த வாக்குகள் 1,025,673 1,043,640 173,603
விழுக்காடு 43.59% 44.35% 7.5%
மாற்றம் 41.5% 5.51% 7.38%


முந்தைய முதலமைச்சர்

மாணிக் சர்க்கார்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி

முதலமைச்சர் -தெரிவு

பிப்லப் குமார் தேவ்
பா.ஜ.க

திரிபுரா சட்டமன்றத் தேர்தல், 2018 (Tripura Legislative Assembly election, 2018) 18 பிப்ரவரி 2018 அன்று மொத்தமுள்ள 60 சட்டமன்றத் தொகுதிகளில், 59 தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெற்றது. சாரிலம் தொகுதியில் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) வேட்பாளர் 12 மார்ச் 2018 இறந்த காரணத்தினால் அத்தொகுதியின் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.[3] வாக்கு எண்ணிக்கை 3 மார்ச் 2018 அன்று துவங்கியது.

இத்தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி அறுதிப் பெரும்பான்மையான தொகுதிகளில் வென்று, திரிபுரா மாநிலத்தில் முதன்முறையாக அரசு அமைக்க உள்ளது.[4]

பின்னணி[தொகு]

திரிபுரா மாநிலச் சட்டப் பேரவையின் பதவிக் காலம் 6 மார்ச் 2018ல் முடிவடைகிறது.[5]மாணிக் சர்க்கார் தலைமையிலான திரிபுரா இடதுசாரி முன்னணி அரசு, திரிபுரா மாநிலத்தை 1998 முதல் ஆட்சி செய்கிறது.

தேர்தல் அட்டவணை[தொகு]

இந்தியத் தேர்தல் ஆணையம், திரிபுரா மாநிலச் சட்டப் பேரவைத் தேர்தல் 18 பிப்ரவரி 2018 அன்றும், வாக்கு எண்ணிக்கை 3 மார்ச் 2018 அன்றும் நடைபெறும் என அறிவித்தது.[6]

நிகழ்வு நாள் கிழமை
வேட்பு மனு தாக்கல் துவக்கம் 24 சனவரி 2018 புதன் கிழமை
வேட்பு மனு தாக்கல் இறுதி நாள் 31 சனவரி 2018 புதன் கிழமை
வேட்பு மனுக்கள் பரிசீலனை 1 பிப்ரவரி 2018 வியாழக்கிழமை
வேட்பு திரும்பப் பெறுவதற்கான இறுதி நாள் 3 பிப்ரவரி 2018 சனிக்கிழமை
தேர்தல் நாள் 18 பிப்ரவரி 2018 ஞாயிற்றுக்கிழமை
வாக்கு எண்ணிக்கை 3 மார்ச் 2018 சனிக் கிழமை
தேர்தல் பணி முடிக்க வேண்டிய நாள் 5 மார்ச் 2018 திங்கட்கிழமை

வாக்குப் பதிவில் மாற்றங்கள்[தொகு]

திரிபுரா தேர்தலில் முதன்முறையாக, வாக்காளர்கள் தாங்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிந்து கொள்ளும் வகையில், மின் வாக்களிப்பு இயந்திரத்தில்,[7] வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனை கருவி அறிமுகப்படுத்தப்பட்டது. [8]

18 பிப்ரவரி 2018 அன்று ஒரே கட்டமாக நடைபெற்றத் தேர்தலில், 89.8% வாக்குகள் பதிவானது.[9]

போட்டியிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைகள்[தொகு]

திரிபுரா சட்டமன்றத்தின் 60 தொகுதிகளுக்கு 297 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

அரசியல் கட்சி சின்னம் கூட்டணி போட்டியிட்ட தொகுதிகள்
மார்க்சிஸ்ட் திரிபுரா இடது முன்னணி 57
இந்தியப் பொதுவுடைமைக் கட்சி திரிபுரா இடது முன்னணி 1
புரட்சிகர சோஷலிசக் கட்சி (RSP) திரிபுரா இடது முன்னணி 1
அனைத்திந்திய பார்வார்டு பிளாக்கு திரிபுரா இடது முன்னணி 1
இந்திய தேசிய காங்கிரசு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 59
பாரதிய ஜனதா கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணி 51
திரிபுரா பூர்வகுடி மக்கள் முன்னணி (IPFT) தேசிய ஜனநாயகக் கூட்டணி 9
சுயேட்சைகள் 27
திரிபுரா பூர்வகுடிமக்கள் தேசியக் கட்சி (INPT) 15
திரிபுரா மக்கள் கட்சி 7
அம்ரா பெங்காளி 23
அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு 24
இந்திய ஐக்கிய சோசலிச மையம் (பொதுவுடமை) 5
திரிபுராலாந்து மாநிலக் கட்சி 9
இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) 5
வடகிழக்கு இந்திய வளர்ச்சிக் கட்சி 1
பிரகதிசீல் அமாரா பங்காலி சமாஜ் 1
திரிபுரா பூர்வகுடிகள் முன்னணி (சுயேட்சை) 1
மொத்தம் 297

தேர்தல் முடிவுகள்[தொகு]

பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அறுதிப் பெரும்பான்மையான தொகுதிகளில் வென்று திரிபுரா மாநிலத்தின் அடுத்த முதலமைச்சராக பிப்லப் குமார் தேவ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[10][10][11][12]

அரசியல் கட்சிகளும் கூட்டணிகளும் பெற்ற வாக்குகள் இடங்கள்
வாக்குகள் % ±pp வெற்றி +/−
பாரதிய ஜனதா கட்சி 9,85,937 43.0 35 35
மார்க்சிஸ்ட் 9,75,680 42.6 16 33
திரிபுரா பூர்வ குடிமக்கள் முன்னணி (IPFT) 1,73,603 7.6 8 8
இந்திய தேசிய காங்கிரசு 40,796 1.8 0 10
மொத்தம் 100.00 59

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 1.2 "Tripura Assembly election results". statisticstimes.com.
 2. 2.0 2.1 2.2 "Tripura General Legislative Election 2018". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 16 December 2021.
 3. "Tripura Assembly Election 2018 LIVE: 78.56% Turnout Till 9 PM, Left Front's 25-Year-Long Run Faces BJP Challenge". NDTV. பார்க்கப்பட்ட நாள் 18 February 2018.
 4. http://tamil.thehindu.com/india/article22920148.ece தி இந்து (மார்ச்சு 3, 2018)
 5. "Upcoming Elections in India". பார்க்கப்பட்ட நாள் 2017-03-13.
 6. "Legislative Assembly Elections 2018: Election Commission announces poll dates for Meghalaya, Tripura and Nagaland - Republic World" (in en-US). Republic World இம் மூலத்தில் இருந்து 2018-01-18 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180118182027/http://www.republicworld.com/s/19647/legislative-assembly-elections-2018-election-commission-announces-poll-dates-for-meghalaya-tripura-and-nagaland. 
 7. Electronic Voting machine
 8. "VVPAT training in Tripura". Archived from the original on 2017-11-07. பார்க்கப்பட்ட நாள் 2018-03-03.
 9. "त्रिपु विधानसभा चुनाव में 89.8 प्रतिशत मतदान". NDTV. 19 February 2018. https://khabar.ndtv.com/news/assembly-polls-2018/tripura-election-2018-live-updates-polling-begins-for-59-out-of-the-total-60-seats-1814028. பார்த்த நாள்: 20 February 2018. 
 10. 10.0 10.1 http://www.elections.in/tripura/
 11. Tripura election results: BJP-IPFT combine leads in 40 seats in 60-member state Assembly
 12. திரிபுரா: கம்யூனிஸ்ட் கோட்டையை கைப்பற்றுகிறது பாஜக

வெளி இணைப்புகள்[தொகு]