ஜாலாவார் மாவட்டம்
சலாவார் மாவட்டம் (Jhalawar-ஜலாவார்) இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்துள்ள 33 மாவட்டங்களில் ஒரு மாவட்டமாகும். வரலாற்றுச் சிறப்புமிக்க ஜலவர் நகரம் இம்மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். இம்மாவட்டத்தில் உள்ள கோல்வி கிராமத்தில் பௌத்த கோல்வி குகைகள் உள்ளது.
எல்லைகள்
[தொகு]இம்மாவட்டத்தின் எல்லைகளாக வடமேற்கே கோட்டா மாவட்டமும், வடகிழக்கே பரான் மாவட்டமும், கிழக்கே குணா மாவட்டமும், தெற்கே ராஜ்கார் மர்றும் ஷாஜாபூர் மாவட்டமும் அமைந்துள்ளது.
வட்டங்கள் (தாலுகாக்கள்)
[தொகு]இம்மாவட்டம்,
- ஜலாவார்
- அக்லேரா
- பவானி
- மண்டி
- பிரவா
- கான்பூர்
- மனோகர் தானா
ஆகிய ஆறு தாலுகாக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
மக்கள் தொகை
[தொகு]2011 ஆம் ஆண்டின் மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி இம்மாவட்டத்தின் மொத்த மக்கட்தொகை 14,11,327 ஆகும்.[1]இது சுவிட்ஸர்லாந்து நாட்டின் மக்கட் தொகைக்குச் சமமாகும்.[2] மக்கள் அடர்த்தி சதுர கிலோமீட்டருக்கு 227 எனும் வீதத்தில் உள்ளது.[1]கல்வியறிவு 62.13% ஆகும்.[1]
பழங்குடியினர்
[தொகு]இம்மாவட்டத்தில் பல பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். அவர்களுள் மீனா மக்கள் மற்றும் பில் மக்கள் எனும் பழங்குடி இனத்தவர் பெரும்பான்மையினாராய் உள்ளனர்.
மாவட்டப் பிரிப்பு
[தொகு]இம்மாவட்டத்தின் சில வருவாய் வட்டங்களைக் கொண்டு 7 ஆகஸ்டு 2023 அன்று புதிய சாஞ்சோர் மாவட்டம் நிறுவப்பட்டது.[3]
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 "District Census 2011". Census2011.co.in. 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-09-30.
- ↑ US Directorate of Intelligence. "Country Comparison:Population". Archived from the original on 2011-09-27. பார்க்கப்பட்ட நாள் 2011-10-01.
- ↑ Rajasthan govt announces 17 new districts, 3 new divisions in state