உள்ளடக்கத்துக்குச் செல்

மீனா மக்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மீனா இனக்குழு
மொத்த மக்கள்தொகை
5 மில்லியன்[1] (2011)
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
 இந்தியா50,00,000[2]
ராஜஸ்தான்,43,45,528[2]
மத்தியப் பிரதேசம் (சிரோஞ்சு),[2]
மொழி(கள்)
இந்தி, மேவாரி, மார்வாரி, துந்தாரி, கரவுத்தி, மேவாத்தி, வக்தி, மால்வி, கார்வாலி, பிலி[3]
சமயங்கள்
மீனா இனச் சமயம்
தொடர்புள்ள இனக்குழுக்கள்
 • பில் மக்கள்  • பில் மீனா  • பரிகார்  • மெயோ

மீனா மக்கள் (Meena) வட இந்தியாவின் சம்பல் பிரதேசத்தில் வாழும் ஒடுக்கப்பட்ட மக்கள் ஆவார்.

வரலாறு

[தொகு]

முன்னர் இராஜஸ்தான் மாநிலத்தின் சம்பல் பிரதேசத்தை ஆண்ட மீனா மக்களை, இராசபுத்திரர்கள் வென்றனர். மீனா மக்களிடமிருந்து பூந்தி இராச்சியத்தை 1342-இல் இராஜபுத்திர இராவ் தேவா என்பவர் கைப்பற்றினர். பின்னர் மீனா மக்கள் ஆண்ட ஜாலவர், கரௌலி மற்றும் ஜலோர் பகுதிகளை இராஜபுத்திரர்கள் வலுக்கட்டாயமாக பறித்தனர்.[4]

பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்களின் ஆவணங்களில் மீனா மக்களை கொடூரமானவர்கள், குற்ற வரலாறு கொண்டவர்கள் மற்றும் சமூக விரோத இனக்குழுவினர் எனக்குறித்துள்ளது.[5]எனவே பிரித்தானிய அரசினர் மீனா மக்களை குற்றப் பரம்பரைச் சட்டத்தில் கொண்டு வந்து கண்காணித்தனர்.

பிரித்தானிய ஆட்சியில் மீனா மக்கள்

[தொகு]
வேட்டையாடும் மீனா இளைஞர்

பிரித்தானியர்கள் நிர்வாக வசதிக்காக பல்வேறு இன மக்களை வகைப்படுத்தி பிரித்து வைத்தனர். [6] அதில் குற்றம் செய்வதைக் குலத்தொழிலாக கொண்டுள்ள இன மக்களை 1871-இல் சீர்மரபினர் பட்டியலில் சேர்த்தும், குற்றப் பரம்பரைச் சட்டத்தில் வைத்தும் கண்காணித்தனர்.[7] 1952-இல் குற்றப் பரம்பரைச் சட்டம் நீக்கப்பட்டதால், மீனா மக்களின் வாழ்க்கைத் தரம் சிறிதளவு உயர்ந்தது. [8]

அண்மைய வரலாறு

[தொகு]

இராஜஸ்தான் மாநிலத்தில் மீனா இன மக்களை இந்து பட்டியல் வகுப்பில் வைத்துள்ளனர்.[9] ஆனால் மத்தியப் பிரதேசத்தின் விதிஷா மாவட்டத்தின் சிரோஞ்ச் வருவாய் வட்டத்தில் வாழும் மீனா இன மக்களை மட்டும் இந்து பட்டியல் வகுப்பில் சேர்த்துள்ளனர். பிற மாவட்டங்களில் வாழும் மீனா மக்களை இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) பட்டியலில் சேர்த்துள்ளனர்.[10]இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பில் சேர்க்கப்பட்ட மீனா மக்களை பட்டியல் வகுப்பில் சேர்க்க இந்திய அரசு பரிசீலித்து வருகிறது.[11]

உத்தரப் பிரதேசத்தில் வாழும் மீனா மக்கள் பட்டியல் வகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளனர்.[12][13]

இராஜஸ்தானில் குஜ்ஜர் இன மக்களை பட்டியல் வகுப்பில் சேர்க்கக் கோரி போராடி வருகின்றனர். குஜ்ஜர்களை தலித் பட்டியலில் சேர்த்தால் தங்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என மீனா மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.[14]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Will the tribals get their separate religion code, Jharkhand's proposal is now with the Modi government". https://www.bbc.com/hindi/india-54975388. 
  2. 2.0 2.1 2.2 "A-11 Individual Scheduled Tribe Primary Census Abstract Data and its Appendix". Census of India 2011. தலைமைப் பதிவாளர் மற்றும் இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையர். பார்க்கப்பட்ட நாள் 2022-02-18.
  3. The assignment of an ISO code myi for the Meena language was spurious (Hammarström (2015) Ethnologue 16/17/18th editions: a comprehensive review: online appendices). The code was retired in 2019.
  4. Rann Singh Mann, K. Mann (1989). Tribal Cultures and Change. Mittal Publications. p. 17.
  5. Kapur, Nandini Sinha (2007). "The Minas: Seeking a Place in History". In Bel, Bernard (ed.). The Social and the Symbolic. Sage. pp. 129–131. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780761934462.
  6. Naithani, Sadhana (2006). In quest of Indian folktales: Pandit Ram Gharib Chaube and William Crooke. Indiana University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-253-34544-8. பார்க்கப்பட்ட நாள் 2013-04-15.
  7. Kapur, Nandini Sinha (2007). "The Minas: Seeking a Place in History". In Bel, Bernard (ed.). The Social and the Symbolic. Sage. p. 131. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-76193-446-2.
  8. Brown, Mark (2004). "Crime, Liberalism and Empire: Governing the Mina Tribe of Northern India". Social and Legal Studies 13 (2): 191–218. doi:10.1177/0964663904042551. 
  9. Sezgin, Yüksel (2011). Human Rights and Legal Pluralism. LIT Verlag Münster. p. 41. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-64399-905-4. பார்க்கப்பட்ட நாள் 2014-10-08.
  10. Patel, Mahendra Lal (1997). Awareness in Weaker Section: Perspective Development and Prospects. M.D. Publications Pvt. Ltd. p. 35. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8-17533-029-0. பார்க்கப்பட்ட நாள் 2014-10-08.
  11. Thakor, Jagdish; Adityanath, Yogi; Das, Khagen; Lal, Kirodi (19 August 2012). "Castes under proposal for inclusion in SC/ST Category". GCONNECT.IN. பார்க்கப்பட்ட நாள் 2015-06-19.
  12. District Headquarters Collectorate Compound, Budaun (UP) (20 நவம்பர் 2013). "Issuing ST certificate to Meena" (PDF). National Informatics Center. pp. Letter from Pramukh Sachiv, Govt. of U.P. Archived from the original (PDF) on 27 சனவரி 2016. பார்க்கப்பட்ட நாள் 17 சனவரி 2016.
  13. District Headquarters Collectorate Compound, Budaun (UP). "मीणा / मीना जाति के लोगों को बदायूँ जिले में नियमानुसार जाति प्रमाण-पत्र जारी किये जाने सम्बन्धी पत्र". National Informatics Center. pp. Meenas in Budaun. Archived from the original on 12 சனவரி 2016. பார்க்கப்பட்ட நாள் 17 சனவரி 2016.
  14. Satyanarayana (2010). Ethics: Theory and Practice. Pearson Education India. p. 96. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8-13172-947-2.


மேலும் படிக்க

[தொகு]
  • Adak, Dipak Kumar. Demography and health profile of the tribals: a study of M.P. Anmol Publications.
  • Brown, Mark (2003). "Ethnology and Colonial Administration in Nineteenth-Century British India: The Question of Native Crime and Criminality". The British Journal for the History of Science 36 (2): 201–219. doi:10.1017/s0007087403005004. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மீனா_மக்கள்&oldid=4060394" இலிருந்து மீள்விக்கப்பட்டது