உள்ளடக்கத்துக்குச் செல்

அகதா ஆல் அலாங்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அகதா ஆல் அலாங்
வகை
உருவாக்கம்ஜாக் ஷாஃபர்
மூலம்
அகதா ஹார்க்னஸ்
படைத்தவர்
இயக்கம்ஜாக் ஷாஃபர்
நடிப்பு
  • காத்ரின் ஹான்
  • ஜோ லோக்
  • கிங்ஸ்லி பென்-அடிர்
  • சஷீர் ஜமாதா
  • அலி அஹ்ன்
  • மரியா டிசியா
  • பால் அடெல்ஸ்டீன்
  • மைல்ஸ் குட்டிரெஸ்-ரிலே
  • ஓக்வோய் ஓக்போக்வாசிலி
  • டெப்ரா ஜோ ரூப்
  • பட்டி லுபோன்
  • ஆப்ரி பிளாசா
பின்னணி இசைகிறிஸ்டோப் பெக்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
தயாரிப்பு
நிருவாக தயாரிப்பு
படப்பிடிப்பு தளங்கள்
ஒளிப்பதிவு
  • காலேப் ஹேமன்
  • ஜான் செமா
  • ஈசியா டோண்டே லீ
தயாரிப்பு நிறுவனங்கள்மார்வெல் தொலைக்காட்சி
ஒளிபரப்பு
அலைவரிசைடிஸ்னி+
Chronology
தொடர்புடைய தொடர்கள்

அகதா ஆல் அலாங் (ஆங்கில மொழி: Agatha All Along) என்பது மார்வெல் காமிக்சு கதாபாத்திரமான 'அகதா ஹார்க்னஸை' அடிப்படையாகக் கொண்ட அமெரிக்க நாட்டு குறுந்தொடர் ஆகும். இந்த தொடர் டிஸ்னி+க்காக ஜாக் ஷாஃபர் என்பவர் உருவாக்கியுள்ளார்.[1] இது மார்வெல் ஸ்டுடியோசு தயாரித்த மார்வெல் திரைப் பிரபஞ்சத்தின் 11வது தொடராகவும், 2021 ஆம் ஆண்டு வெளியான வாண்டாவிஷன்[2] என்ற தொடரின் வழித்தொடரும் ஆகும்.[3] அத்துடன் மார்வெல் தொலைக்காட்சி என்ற நிறுவனத்தின் உரிமையின் மூலம் மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படங்களின் தொடர்ச்சியைப் பகிர்ந்து கொள்கிறது.

நடிகை காத்ரின் ஹான் வாண்டாவிஷனில் இருந்து அகதா ஹார்க்னஸ் என்ற பாத்திரத்தில் மீண்டும் நடிக்க, இவருடன் ஜோ லோக், கிங்ஸ்லி பென்-அடிர், சஷீர் ஜமாதா, அலி அஹ்ன், மரியா டிசியா, பால் அடெல்ஸ்டீன், மைல்ஸ் குட்டிரெஸ்-ரிலே, ஓக்வோய் ஓக்போக்வாசிலி, டெப்ரா ஜோ ரூப், பட்டி லுபோன் மற்றும் ஆப்ரி பிளாசா போன்றோர் நடித்துள்ளார்கள்.[4]

அகதா ஆல் அலாங் தொடர் செப்டம்பர் 18, 2024 அன்று டிஸ்னி+ இல் அதன் முதல் இரண்டு அத்தியாயங்களுடன் திரையிட திட்டமிடப்பட்டுள்ளது. மற்ற ஏழு அத்தியாயங்கள் நவம்பர் 6 வரை வாரந்தோறும் வெளியிடப்படும். அத்துடன் இது மார்வெல் திரைப் பிரபஞ்சத்தின் ஐந்தாம் கட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும்.[5]

கதைச்சுருக்கம்

[தொகு]

வாண்டாவிஷன் (2021) என்ற குறுந்தொடரின் முடிவில், நியூ ஜெர்சியில் உள்ள வெஸ்ட்வியூ நகரில் அகதா ஹார்க்னஸ் என்ற சூனியக்காரி சிக்கினார்.[6] இந்த தொடரில், புகழ்பெற்ற மந்திரவாதிகளின் சாலையின் சோதனைகளை எதிர்கொள்ள விரும்பும் இவர் ஒரு டீன் கோத்தின் உதவியுடன் அவள் தப்பிக்கிறாள். இவள் மாயாஜால சக்திகள் இல்லாமல், ஹார்க்னெஸ் மற்றும் டீன் ஏஜ் சோதனைகளை எதிர்கொள்ள மந்திரவாதிகளின் புதிய உடன்படிக்கையை உருவாக்குகிறார்கள்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Otterson, Joe (May 26, 2021). "'WandaVision' Head Writer Jac Schaeffer Sets Overall Deal With Marvel Studios, 20th Television". Variety. Archived from the original on May 26, 2021. பார்க்கப்பட்ட நாள் May 26, 2021.
  2. Coggan, Devan (November 10, 2020). "Honey, I'm Chrome: Marvel prepares to take over TV with WandaVision". Entertainment Weekly. Archived from the original on November 10, 2020. பார்க்கப்பட்ட நாள் November 10, 2020.
  3. Otterson, Joe (October 7, 2021). "'WandaVision' Spinoff Starring Kathryn Hahn in the Works at Disney Plus (Exclusive)". Variety. Archived from the original on October 7, 2021. பார்க்கப்பட்ட நாள் October 7, 2021.
  4. Coggan, Devin (August 23, 2019). "Kat Dennings, Randall Park, and Kathryn Hahn join Disney+'s WandaVision". Entertainment Weekly. Archived from the original on August 24, 2019. பார்க்கப்பட்ட நாள் August 24, 2019.
  5. Vary, Adam B. (July 23, 2022). "Marvel Studios' Phases 5 and 6: Everything We Learned at Comic-Con About the Multiverse Saga". Variety. Archived from the original on July 24, 2022. பார்க்கப்பட்ட நாள் July 24, 2022.
  6. Purslow, Matt (February 19, 2021). "WandaVision: Season 1, Episode 7 Review". IGN. Archived from the original on February 19, 2021. பார்க்கப்பட்ட நாள் February 19, 2021.

வெளிப்புற இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அகதா_ஆல்_அலாங்கு&oldid=4054074" இலிருந்து மீள்விக்கப்பட்டது