பென்னு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பென்னு
இரட்டை மகுடம் அணிந்த பென்னு கடவுள்
தேர் அல்-மதினா நகரத்தில் தலை மீது சூரியத் தட்டுகளுடன் கூடிய பென்னு கடவுளின் உருவம்

பென்னு (Bennu), உலகின் படைப்பிற்கு காராணமான எகிப்தியக் கடவுளான இரா (சூரியன்) கடவுளுடன் தொடர்புடைய பறவை வடிவக் கடவுள் ஆவார். கிரேக்க புராணங்களில் கூறப்படும் பீனிக்ஸ் பறவையின் புனைவுக்கு பென்னு தெய்வம் காரணமாக இருந்திருக்கலாம்.

எகிப்திய தொன்மவியல்படி, பென்னு தெய்வம் சுயமாக உருவான ஒரு உயிரினம் ஆகும். உலகப் படைப்பின் போது கடவுள் இராவுடன் பென்னு தெய்வம் பங்கு வகித்ததாகக் கூறப்படுகிறது.[1] பென்னு தெய்வம் இராவின் ஆக்கப்பூர்வமான செயல்களை செயல்படுத்தியவர் என்றும் கூறப்படுகிறது. பென்னு தெய்வம் மறுபிறப்பின் அடையாளமாகவும் இருந்தார். எனவே பென்னு கடவுள் வாழ்வு, இறப்பு, மறுவாழ்வுக்கு காரணமான ஒசிரிசுடன் தொடர்புடையவர்.[2] பென்னு கடவுள் தன்னை அவ்வப்போது புதுப்பித்துக் கொள்ளும் ஆற்றல் கொண்டவர்.

வழிபாடு[தொகு]

பண்டைய எகிப்தின் வில் உள்ள ஐரினெஃபரின் கல்லறையில் இருந்து தலையில் சூரிய வட்டுடன் பென்னுவின் சித்தரிப்பு ஆத்தூம் மற்றும் இரா கடவுள்களைப் போல இருந்தது. ஹெல்லியோபோலிஸ் நகரத்தில் பென்னுவின் வழிபாடு இருந்திருக்கலாம். பண்டைய எகிப்தியர்களின் இறுதிச் சடங்குகளின் போது வைக்கப்படும் கல் வண்டு தாயத்துகளில் பென்னுவின் உருவம் காணப்படுகிறது.

புது எகிப்து இராச்சியத்தில்[தொகு]

புது எகிப்து இராச்சியக் காலத்தில் பென்னு கடவுளின் உருவம் சாம்பல் நாரையின் வடிவத்தில், நீண்ட அலகுடன், தலையில் இரண்டு சிறகுகளுடன் வடிக்கப்பட்டுள்ளது.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

மேலும் படிக்க[தொகு]

  • Labrique, Françoise (2013). "Le regard d'Hérodote sur le phénix (II, 73)". in Coulon, Laurent; Giovannelli-Jouanna, Pascale; Kimmel-Clauzet, Flore (in fr). Regards croisés sur le Livre II de l’Enquête d’Hérodote. Actes de la journée d’étude organisée à la Maison de l’Orient et de la Méditerranée – Lyon, le 10 mai 2010. Maison de l’Orient et de la Méditerranée. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-2-35668-037-2. 
  • Lecocq, Françoise (2016). "Inventing the Phoenix: A Myth in the making Through Words and Images". In Johnston, Patricia A.; Mastrocinque, Attilio; Papaioannou, Sophia. Animals in Greek and Roman Religion and Myth. Cambridge Scholars Publishing, pp. 449–478.
  • Lecocq, Françoise (2019). "L'oiseau bénou-phénix et son tertre sur la tunique historiée de Saqqâra. Une interprétation nouvelle" (in பிரெஞ்சு மொழி), ENiM (Égypte nilotique et méditerranéenne) 12, 2019, pp. 247–280.
  • Van Den Broek, Roelof (1971). The Myth of the Phoenix According to Classical and Early Christian Traditions. Brill. 
  • Wolterman, Carles (1991–1992). "On the Names of Birds and Hieroglyphic Sign-List G 22, G 35 and H 3". Jaarbericht van het Vooraziatisch-Egyptisch genootschap Ex Oriente Lux 32. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பென்னு&oldid=3794243" இலிருந்து மீள்விக்கப்பட்டது