தங்குதன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(டங்க்ஸ்டன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
74 டாண்ட்டலம்தங்குதன்ரேனியம்
Mo

W

Sg
W-TableImage.png
பொது
பெயர், குறி எழுத்து,
தனிம எண்
தங்குதன், W, 74
வேதியியல்
பொருள் வரிசை
பிறழ்வரிசை மாழைகள்
நெடுங்குழு,
கிடை வரிசை,
வலயம்
6, 6, d
தோற்றம் பளபளப்பான சாம்பல்-வெள்ளை
TungstenMetalUSGOV.jpg
அணு நிறை
(அணுத்திணிவு)
183.84(1) g/mol
எதிர்மின்னி
அமைப்பு
[Xe] 4f14 5d4 6s2
சுற்றுப்
பாதையிலுள்ள
எதிர்மின்னிகள்
(எலக்ட்ரான்கள்)
2, 8, 18, 32, 12, 2
இயல்பியல் பண்புகள்
இயல் நிலை திண்மம்
அடர்த்தி
(அறை வெ.நி அருகில்)
19.25 கி/செ.மி³
உருகுநிலையில்
நீர்மத்தின் அடர்த்தி
17.6 g/cm³
உருகு
வெப்பநிலை
3695 K
(3422 °C, 6192 °F)
கொதி நிலை 5828 K
(5555 °C, 10031 °F)
நிலை மாறும்
மறை வெப்பம்
52.31 கி.ஜூ/மோல்
(kJ/mol)
வளிமமாகும்
வெப்ப ஆற்றல்
806.7 கி.ஜூ/மோல் kJ/mol
வெப்பக்
கொண்மை
(25 °C)
24.27 ஜூ/(மோல்·K)
J/(mol·K)
ஆவி அழுத்தம்
அழுத் / Pa 1 10 100 1 k 10 k 100 k
வெப். நி / K 3477 3773 4137 4579 5127 5823
அணுப் பண்புகள்
படிக அமைப்பு cubic body centered
ஆக்சைடு
நிலைகள்
6, 5, 4, 3, 2
(மென் காடிய ஆக்ஸைடு)
எதிர்மின்னியீர்ப்பு 2.36 (பௌலிங் அளவீடு)
அயனாக்க ஆற்றல் 1st: 770 கிஜூ/மோல்
2nd: 1700 kJ/mol
அணு ஆரம் 135 பிமீ
அணுவின்
ஆரம் (கணித்)
193 pm
கூட்டிணைப்பு ஆரம் 146 pm
வேறு பல பண்புகள்
காந்த வகை no data
மின் தடைமை (20 °C) 52.8 nΩ·m
வெப்பக்
கடத்துமை
(300 K) 173
வாட்/(மீ·கெ) W/(m·K)
வெப்ப நீட்சி (25 °C) 4.5 மைக்.மீ/(மி.மீ·கெ) µm/(m·K)
ஒலியின் விரைவு
(மென் கம்பி)
(அறை வெ.நி) (annealed)
4620 மீ/நொ
யங்கின் மட்டு 411 GPa
Shear modulus 161 GPa
அமுங்குமை 310 GPa
பாய்சான் விகிதம் 0.28
மோவின்(Moh's) உறுதி எண் 7.5
விக்கர் உறுதிஎண்
Vickers hardness
3430 MPa (மெகாபாஸ்)
பிரிநெல் உறுதிஎண்
Brinell hardness]]
2570 MPa (மெகாபாஸ்)
CAS பதிவெண் 7440-33-7
குறிபிடத்தக்க ஓரிடத்தான்கள்
தனிக்கட்டுரை: தங்குதன் ஓரிடத்தான்கள்
ஓரி இ.கி.வ அரை
வாழ்வு
சி.மு சி.ஆ
(MeV)
சி.வி
180W 0.12% 1.8×1018 y α 2.516 176Hf
181W syn 121.2 நாள் ε 0.188 181Ta
182W 26.50% W is stable with 108 நொதுமிகள்
183W 14.3% W is stable with 109 நொதுமிகள்
184W 30.64% W is stable with 110 நொதுமிகள்
185W syn 75.1 d β- 0.433 185Re
186W 28.43% W is stable with 112 நொதுமிகள்
மேற்கோள்கள்

தங்குதன் அல்லது டங்க்ஸ்டன் (ஆங்கிலம்: Tungsten, (IPA: /ˈtʊŋstən/), மற்றுமொரு பெயர் wolfram (IPA: /ˈwʊlfrəm, -am/), என்பது W என்னும் வேதியியல் குறியீடு கொண்ட ஒரு வேதியியல் தனிமம். இது கெட்டியான, எடை மிகுந்த இரும்பு போன்ற சாம்பல் நிறம் உடைய, அணுவெண் 74 கொண்ட பிறழ்வரிசை மாழைகள் வரிசையைச் சேர்ந்த தனிமம். டங்க்ஸ்டன் பல கனிமங்களில் இருந்து பிரித்து எடுக்கப்படுகின்றது. அவற்றுள் வுல்ஃவ்ரமைட் (wolframite) மற்றும் ஷீலைட் (scheelite) முக்கியமானவை. இத்தனிமம் கலப்பில்லாத தனி மாழைகள் யாவற்றினும் மிக அதிக உருகு வெப்பநிலை கொண்டதும், தனிமங்களிலும் கரிமத்திற்கு அடுத்தாற்போல அதிக உருகுநிலை கொண்டது. டங்க்ஸ்டன் மின்விளக்குகளிலும், நுண்மின்கருவிகளிலும் (குறைக்கடத்துக் கருவிகளிலும்) எக்ஸ்-கதிர் உண்டாக்கும் குழல்களிலும் பயன்படுத்தப்படுகின்றது.

வரலாறு[தொகு]

1781ல் கார்ல் வில்கெல்ம் சீல் என்பவர் ஒரு புதிய அமிலத்தைக் கண்டுபிடித்தார். அதுதான் சீலைத் இலிருந்து தங்குதிக் அமிலம். கார்ல் வில்கெல்ம் சீல் மற்றும் டோர்பெர்ன் பெர்க்மன் ஆகியோர் இந்த தங்குதிக் அமிலத்திலுள்ள அமிலத்தன்மையை நீக்குவதன்மூலம் ஒரு புதிய உலோகம் உருவாகும் என நினைத்தனர். 1783 இல் ஜான் ஜோஸ் எல்ஹுயார் மற்றும் பாஸ்டோ எல்ஹுயார் ஆகியோர் வோல்ப்ரமைட் இலிருந்து உருவாகும் ஒரு அமிலம் தங்குதிக் அமிலத்தை ஒத்திருப்பதை கண்டுபிடித்தனர். அந்தவருடத்திற்குப் பின், ஸ்பானியாவில் ஜான் ஜோஸ் எல்ஹுயார்பாஸ்டோ எல்ஹுயார் சகோதரர்கள் நிலக்கரியைப் பயன்படுத்தி அந்த அமிலத்தை நீக்குவதன் மூலம் தங்குதனைப் பிரித்தெடுத்தனர். அவர்களுக்கே அந்த தனிமத்தைக் கண்டுபிடித்தமைக்கான பாராட்டு கிடைத்தது.[1][2]

இரண்டாம் உலகப்போரில் அரசியல் ஒப்பந்தங்களில் தங்குதன் ஒரு குறிப்பிடத்தக்க முக்கிய இடம் வகித்தது. ஐரோப்பியாவின் முக்கிய தனிம வளமான போர்த்துக்கல் இருபக்கமும் கடும் அழுத்தத்துக்கு உள்ளானது. இதற்க்குக் காரணம் போர்த்துக்கலின் பணசுகுயிரா எனும் பகுதியில் அதிக அளவான வோல்ப்ரமைட் படிமங்கள் இருந்தமையாகும். தங்குதன் அதிக வெப்பத்தைத் தாங்கக்கூடிய ஒரு உலோகமாக இருந்தமையும் அது மற்றக் கலப்புலோகங்களுக்கு அதிக பலம் தந்தமையும் இராணுவ பொருட்கள் உற்பத்தியில் மூலப்பொருளாக தங்குதன் முக்கிய இடம் வகிக்க முக்கிய காரணங்கள்.

சொல்லிலக்கணம்[தொகு]

தங்குதன் எனும் பெயர் (ஸ்வீடிஷ் மொழியிலிருந்து தங் ஸ்டேன், "பலமான கல்") ஆங்கிலம், பிரெஞ்சு போன்ற மேலும் பல மொழிகளில் இதே பெயரில் அழைக்கப்படுகிறது. ஆனால் இவ்வார்த்தை நோர்டிக் நாடுகளில் பயன்படுத்தப்படுவதில்லை. தங்குதன் என்பது சீலைத்இன் பழைய ஸ்வீடிஷ் பெயராகும். இதன் இன்னொரு பெயர் வோல்ப்ரம் என்பதாகும். இவார்த்தை அதிகமான ஐரோப்பிய நாடுகளில் குறிப்பாக செருமானிய மற்றும் சல்விக் மொழிகளில் பயன்படுகிறது. இது வோல்ப்ரமைத் எனும் மிநேரலில் இருந்து வந்ததாகும். இந்தப்பெயரிலிருந்து தான் W என்கிற தங்குதனின் குறியீடும் அறிமுகமானது. "வோல்ப்ரமைட்" எனும் பெயர் செருமானிய சொல்லான "வோல்ப் ரம்" ("wolf soot" or "wolf cream") இலிருந்து வந்தது. இந்தப்பெயர் ஜோகன் கோட்ஸ்சால்க் வோலாரியாசால் 1747 ஆம் ஆண்டு சூட்டப்பட்டது.

இயற்பியல் பண்புகள்[தொகு]

தங்குதன் கடினமான சாம்பல் நிற உலகம் ஆகும். இது வளையக்கூடிய மற்றும் அடித்து வேறு பொருட்களாக மாற்றக்கூடிய உலோகமாக இருப்பதால் இதில் உருக்கைப்போல பல பொருட்களைச் செய்யலாம். மிகவும் சுத்தமான தனுதன் கடினமானது மற்றும் அதை அடித்து வேறு உருவுக்கு மாற்றவும் முடியும் ஆகையால் இதில் போருத்களிச் செய்வது மிகவும் இலகுவானது. இது பல செயற்பாடுகளுக்கு உட்பட்டு தங்குதனாக உருவாகிறது. மிகவும் தூய நிலையிலுள்ள எல்லா உலோகங்களிலும் தங்குதன் மிகவும் கூடிய உருகும் நிலையைக் கொண்டுள்ளது.(3,422 °C, 6,192 °F)

உற்பத்தி[தொகு]

வோல்ப்ரமைத், அளவீடுகள் சென்டி மீட்டர்களில்
2005இல் தங்குதன் உற்பத்தி

சுமார் 61,300 தொன்கள் அளவிலான தங்குதன் 2009 ஆம் ஆண்டு உற்பத்தி செய்யப்பட்டது.[3] தங்குதன் அதன் தாதுப்பொருள்களிலிருந்து பல நிலைகளில் பிரித்தெடுக்கப்படுகிறது.

தங்கத்தைப் போல பயன்படுத்தல்[தொகு]

இதனுடைய அடர்த்தி தங்கத்தினதை ஒத்திருப்பதால் இது நகைகள் தயாரிப்பதில் தங்கத்திற்கும் பிளாட்டினத்துக்கும் பதிலாக பயன்படுத்த உதவுகிறது.[4] உலோகத் தங்குதன் தங்கக் கலப்புலோகங்களை விட கடினமானது. இதன் காரணமாக இது மோதிரங்கள் செய்ய பயன்படுகிறது. மோதிரம் செய்ய இதைப் பயன்படுத்துவதால் உராய்வுத் தன்மை குறையும்.

தங்கத்தினுடைய அடர்த்திக்கு கிட்டத்தட்ட சமனாக இருப்பதால் (தங்குதன் இன் உடைய அடர்த்தி தங்கத்தை விட 0.36% குறைந்தது) தங்கத்திற்குப் பதிலாக பயன்படுத்துகிறார்கள். தங்குதனின் மேல் தங்கப் படலமிட்டு பயன்படுத்துகின்றார்கள்.[5][6][7] இது 1980 ஆம் ஆண்டுகளிலிருந்து கவனிக்கப்பட்டு வருகிறது.[8] அல்லது தங்கக் கட்டியை எடுத்து நடுவில் பெரிய துளையிட்டு அதனுள் தங்குதனை இட்டும் பயன்படுத்துகின்றார்கள்.[9] தங்குதனினதும் தங்கத்தினதும் அடர்த்தி மிகச்சரியாக ஒன்றாக இல்லை, தங்குதனின் ஏனைய இயல்புகளும் தங்கத்துடன் மிகச்சரியாக ஒத்துப்போகவில்லை ஆனாலும் பரிசோதனைகளில் இவற்றைக் கண்டுபிடிப்பது கடினமாய் உள்ளது.[5]

தங்கப்படலமிட்ட தங்குதன்கள் சீனாவில் (தங்குதனை அதிகமாக உற்பத்தி செய்யும் நாடுகளில் முதன்மையானது) கட்டிகளாகவும் நகைகளாகவும் கிடைக்கின்றன.[10]

மேற்கோள்கள்[தொகு]

  1. "ITIA Newsletter" (PDF). International Tungsten Industry Association. June 2005. http://web.archive.org/web/20110721214335/http://www.itia.info/FileLib/Newsletter_2005_06.pdf. பார்த்த நாள்: 2008-06-18. 
  2. "ITIA Newsletter" (PDF). International Tungsten Industry Association. December 2005. http://web.archive.org/web/20110721214335/http://www.itia.info/FileLib/Newsletter_2005_12.pdf. பார்த்த நாள்: 2008-06-18. 
  3. Shedd, Kim B. (2009). "Tungsten (table 15)" (PDF). United States Geological Survey. http://minerals.usgs.gov/minerals/pubs/commodity/tungsten/myb1-2009-tungs.pdf. பார்த்த நாள்: 2011-06-18. 
  4. Hesse, Rayner W. (2007). "tungsten". Jewelrymaking through history: an encyclopedia. Westport, Conn.: Greenwood Press. பக். 190–192. ISBN 978-0-313-33507-5. http://books.google.com/?id=DIWEi5Hg93gC&pg=PA190. 
  5. 5.0 5.1 Gray, Theo (March 14, 2008). "How to Make Convincing Fake-Gold Bars". Popular Science. http://www.popsci.com/diy/article/2008-03/how-make-convincing-fake-gold-bars. பார்த்த நாள்: 2008-06-18. 
  6. "Zinc Dimes, Tungsten Gold & Lost Respect", Jim Willie, Nov 18 2009
  7. Largest Private Refinery Discovers Gold-Plated Tungsten Bar, March 2, 2010, Patrick A. Heller, reporting story by ProSieben
  8. Reuters (1983-12-22). "Austrians Seize False Gold Tied to London Bullion Theft". The New York Times. http://www.nytimes.com/1983/12/22/world/austrians-seize-false-gold-tied-to-london-bullion-theft.html. பார்த்த நாள்: 2012-03-25. 
  9. Tungsten filled Gold bars, ABC Bullion, Thursday, March 22, 2012
  10. Tungsten Alloy for Gold Substitution, China Tungsten
"https://ta.wikipedia.org/w/index.php?title=தங்குதன்&oldid=2222439" இருந்து மீள்விக்கப்பட்டது