சிவப்பு நகரம் ஜெய்ப்பூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்ப்பூர் நகரத்தை "இளஞ்சிவப்பு நகரம்"என்கிறார்கள்.அந்த மண்ணின் புவ்யியல் அமைப்பின்படி அங்குள்ள பாறைகள் இளஞ்சிவப்பு நிறத்தில் உள்ளன.அங்கு வாழும் மக்கள் பெரும்பாலும் தங்கள் வீடுகளை இந்த பாறைகளைகொண்டே அமைத்துள்ளனர்.1876 ம்ஆண்டு இந்தியாவிற்கு சுற்றுபயணம் வந்த வேல்ஸ் இளவரசர் மற்றும் விக்டோரியா மகாராணி ஆகியோர் ஜெய்ப்பூர் வந்த பொழுது ,அப்போதைய மன்னர் மகாராஜா ராம்சிங் நகரில் உள்ள விடுகள் மற்றும் கட்டிடங்கள் அனைத்தையும் இளஞ்சிவப்பில் வண்ணம் தீட்டும்படி உத்தரவிட்டதாக சொல்லப்படுகிறது.காரணம் இளஞ்சிவப்பு நிறம் விருந்தினரை உபசரிக்கும் பண்பை உணர்த்தும் வண்ணமாக இருந்ததாம்.

நீலம் நகரம்[தொகு]

ராஜஸ்தானின் மற்றொரு நகரமான "ஜோத்பூர் நகரம்"நீல நகரம் என்று அழைக்கபடுகிறது.இம்மக்கள் எதனால் இந்நிரத்தை பயன்படுத்தினார்கள் என்பதற்கு உறுதியான ஆதாரங்கள் இல்லை.ஒரு சிலர் வெயிலுக்கு இதமான தன்மை ஏற்படும் என்கிறார்கள்.சிலர் கொசுபோன்ற சிறிய பூச்சிகள் அண்டாது என்கிறார்கள்.எது எப்படி இருந்தாலும் சுற்றுலா பயணிகள் இதைபார்க்க ஆர்வமாக வருகின்றனர்.

பார்வை நூல்[தொகு]

மனோரமா இயர் புக்,2017,மலையாள மனோரம்மா பதிப்பு,கோட்டயம் 001,ISSN-0975-3052