லோகன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லோகன்
இயக்கம்ஜேம்ஸ் மங்கோல்ட்
தயாரிப்பு
  • ஹட்ச் பார்க்கர்
  • சைமன் கின்பெர்க்
  • லாரன் ஷுலர் டோனர்
திரைக்கதை
  • ஸ்காட் பிராங்க்
  • ஜேம்ஸ் மங்கோல்ட்
  • மைக்கேல் கிரீன்
இசைமார்கோ பெல்ட்ராமி
நடிப்பு
ஒளிப்பதிவுஜான் மதிசன்
படத்தொகுப்பு
  • மைக்கேல் மெக்கஸ்கர்
  • டிர்க் வெஸ்டர்வெல்ட்
கலையகம்
விநியோகம்20ஆம் சென்சுரி பாக்ஸ்
வெளியீடுபெப்ரவரி 17, 2017 (2017-02-17)(பெர்லின்)
மார்ச்சு 3, 2017 (ஐக்கிய அமெரிக்கா)
ஓட்டம்137 நிமிடங்கள்[1]
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$97–127 மில்லியன்[2][3]
மொத்த வருவாய்$619 மில்லியன்

லோகன் என்பது 2017 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க நாட்டு மீநாயகன் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படம் மார்வெல் காமிக்ஸ் என்ற வரைகதை புத்தகத்தில் வெளியான வால்வரின் என்ற ஒரு கற்பனை கதாபாத்திரத்தை மையமாக வைத்து மார்வெல் மகிழ்கலை, டி.எஸ்.ஜி என்டர்டெயின்மென்ட், ஹட்ச் பார்க்கர் புரொடக்ஷன்ஸ் மற்றும் டோனர்ஸ் கொம்பனி போன்ற நிறுவனங்கள் தயாரித்து[4][5] 20ஆம் சென்சுரி பாக்ஸ் என்ற நிறுவனம் மூலம் விநியோகிக்கப்பட்டது. இது எக்ஸ்-மென் என்ற திரைப்படத் தொடரின் பத்தாவது படமும் மற்றும் வோல்வரின் (2009), வோல்வரின்-2 (2013) போன்ற திரைபடத்தொடரின் இறுதி படமும் ஆகும்.

இந்த திரைப்படத்தை 'ஜேம்ஸ் மங்கோல்ட்' என்பவர் இயக்க,[6] ஹியூ ஜேக்மன், பேட்ரிக் ஸ்டீவர்ட், ரிச்சர்ட் இ. கிராண்ட், பாய்ட் ஹோல்ப்ரூக், ஸ்டீபன் மெர்ச்சண்ட், டஃப்னே கீன் போன்ற பலர் நடித்துள்ளார்கள்.[7][8][9] லோகன் என்ற படம் மார்ச்சு 3, 2017 அன்று வெளியாகி உலகளவில் 619 மில்லியன் வசூலித்தது.

கதை சுருக்கம்[தொகு]

இந்த திரைப்படத்தின் கதை 2029 ஆம் ஆண்டில் நடப்பது போன்று சித்தரிக்கப்பட்டுள்ளது. தனது சக்திகளைக் கொஞ்சம் கொஞ்சமாய் இழந்துவரும் லோகன் உடல் நிலை மற்றும் பழையதை மறந்து வரும் சார்லஸ் சேவிரை கவனித்துக்கொண்டு இறுதி நாட்களைக் கடத்தி வருகிறார். டிரான்ஸிஜென் என்ற நிறுவனம் பல குழந்தைகளை மியூட்டன்ட்களாக மாற்றி வருகிறார்கள். அதில் 11 வயது லௌரா அங்கு இருக்கும் ஒரு நர்ஸின் உதவியுடன் தப்பித்து விடுகிறாள். இவளும் லோகனுக்கு இருக்கும் அதே சக்திகளை கொண்டவள். டக்கோட்டாவில் இருக்கும் ஈடென் என்னும் இடத்துக்கு எல்லா மியூட்டன்ட் சிறுவர்களையும் அழைத்துச் செல்ல வேண்டும். லோகன் லௌராவை வில்லன்களிடம் இருந்து மீட்டு, பத்திரமாக ஈடெனுக்கு எப்படி அழைத்துச் சென்றாரார் இபோது தான் கதை.

நடிகர்கள்[தொகு]

  • ஹியூ ஜேக்மன் - லோகன்
  • பேட்ரிக் ஸ்டீவர்ட் - சார்லஸ் சேவியர்
  • ரிச்சர்ட் இ. கிராண்ட் - டாக்டர் ஜாண்டர் ரைஸ்
  • பாய்ட் ஹோல்ப்ரூக் - டொனால்ட் பியர்ஸ்
  • ஸ்டீபன் மெர்ச்சண்ட் - கலிபன்
  • டஃப்னே கீன் - லௌரா

மேற்கோள்கள்[தொகு]

  1. "Logan". British Board of Film Classification. Archived from the original on April 14, 2020. பார்க்கப்பட்ட நாள் February 27, 2017.
  2. "Logan (2017)". Box Office Mojo. Archived from the original on April 14, 2020. பார்க்கப்பட்ட நாள் July 14, 2017.
  3. Faughnder, Ryan (March 1, 2017). "Hugh Zaid Mak's last movie, 'Logan,' is going to shred its box-office competition". Los Angeles Times இம் மூலத்தில் இருந்து April 14, 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200414135356/https://www.latimes.com/business/hollywood/la-fi-ct-movie-projector-logan-20170227-story.html. 
  4. "Wolverine 3 Updates: Production Moves from Louisiana to New Mexico; Hugh Jackman Hits Gym for Intense Training for Role, Shows Off New Video of Work Out". The Economic Times. August 2, 2016. பார்க்கப்பட்ட நாள் November 12, 2016.
  5. Lang, Brent (March 5, 2017). "Box Office: 'Logan' roars with massive $85.3 million debut". Reuters. பார்க்கப்பட்ட நாள் January 13, 2020.
  6. Petski, Denise (October 20, 2016). "'Logan': First Trailer For Hugh Jackman's Latest Wolverine Turn". deadline Hollywood. பார்க்கப்பட்ட நாள் November 12, 2016.
  7. Coggan, Devan (August 11, 2016). "Hugh Jackman photos spark 'Old Man Logan' speculation". Entertainment Weekly. Archived from the original on April 14, 2020. பார்க்கப்பட்ட நாள் October 31, 2016.
  8. Collura, Scott (October 20, 2016). "OLD MAN LOGAN COMPARISON: FROM COMICS TO MOVIE". IGN. Archived from the original on April 14, 2020. பார்க்கப்பட்ட நாள் November 12, 2016.
  9. Cranswick, Amie (October 19, 2016). "Behold Old Man Logan in new image from the Wolverine sequel". FlickeringMyth.com. Archived from the original on April 14, 2020. பார்க்கப்பட்ட நாள் November 12, 2016.

வெளிப்புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=லோகன்&oldid=3477593" இலிருந்து மீள்விக்கப்பட்டது