உள்ளடக்கத்துக்குச் செல்

நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நெகிரி செம்பிலான்
மாநில சட்டமன்றம்
Negeri Sembilan State Legislative Assembly
Dewan Undangan Negeri Sembilan
14-ஆவது சட்டப் பேரவை
மரபு சின்னம் அல்லது சின்னம்
நெகிரி செம்பிலான் மாநில
சட்டமன்ற சின்னம்
வகை
வகை
வரலாறு
தோற்றுவிப்பு1959
தலைமை
துவாங்கு முக்ரிஸ்
29 திசம்பர் 2008 (2008-12-29) முதல்
சுல்கிப்லி முகமது உமர், பாக்காத்தான்அமாணா
2 சூலை 2018 (2018-07-02) முதல்
துணைப் பேரவைத் தலைவர்
ரவி முனுசாமி, பாக்காத்தான்பிகேஆர்
2 சூலை 2018 (2018-07-02) முதல்
அமினுடின் அருண், பாக்காத்தான்பிகேஆர்
12 மே 2018 (2018-05-12) முதல்
எதிர்க்கட்சித் தலைவர்
முகமட் அசன், பாரிசான்-அம்னோ
2 சூலை 2018 (2018-07-02) முதல்
செயலாளர்
முகமது அமின் லுடின்
கட்டமைப்பு
உறுப்பினர்கள்36
குறைவெண் வரம்பு:12
எளிய பெரும்பான்மை: 19
மூன்றில் இரண்டு பெரும்பான்மை: 24
அரசியல் குழுக்கள்
ஆண்டு
13.04.2019

அரசாங்கம் (20)
     பாக்காத்தான் (20)

நம்பிக்கை மற்றும் வழங்கல் (16)
     பாரிசான் (16)

பேரவைத் தலைவர் (1)

     பாக்காத்தான் (non-MLA)
தேர்தல்கள்
அண்மைய தேர்தல்
9 மே 2018
அடுத்த தேர்தல்
2 செப்டம்பர் 2023
கூடும் இடம்
Wisma Negeri, Negeri Sembilan, Seremban, Negeri Sembilan
விஸ்மா நெகிரி, சிரம்பான், நெகிரி செம்பிலான்
வலைத்தளம்
www.ns.gov.my
தற்போதைய நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றத் தொகுதிகள் (2022)

நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றம் அல்லது நெகிரி செம்பிலான் சட்டப் பேரவை (மலாய்: Dewan Undangan Negeri Sembilan; ஆங்கிலம்: Negeri Sembilan State Legislative Assembly; சீனம்: 森美兰州立法议会) என்பது மலேசியா, நெகிரி செம்பிலான் மாநிலத்தின் சட்டப் பேரவையாகும்.

மலேசியாவின் 13 மாநிலங்களில் ஒன்றான நெகிரி செம்பிலான் மாநிலத்தில், சட்டங்களை இயற்றும் அல்லது சட்டங்களைத் திருத்தும் அவையாகும். நெகிரி செம்பிலான் மாநிலச் சட்டமன்றம் 36 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.

நெகிரி செம்பிலான், சிரம்பான் மாவட்டம், சிரம்பான், விஸ்மா நெகிரி (Wisma Negeri) சட்டமன்ற வளாகத்தில் நெகிரி செம்பிலான் மாநிலப் பேரவை கூடுகிறது.

பொது

[தொகு]

நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றம் நெகிரி செம்பிலான் மாநிலத்திற்குப் பொருத்தமான சட்டங்களை இயற்றுகிறது. ஒரு வருடத்திற்கு குறைந்த பட்சம் மூன்று அமர்வுகளை நடத்த வேண்டும். ஒவ்வோர் ஆண்டும் மார்ச் மற்றும் அக்டோபர் மாத இறுதியில் அல்லது நவம்பர் மாதத் தொடக்கத்தில் மாநில வரவு செலவு கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டும்.

நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றம் ஒரு நாடாளுமன்றத்தைப் போல இயங்குகிறது. நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றம், நெகிரி செம்பிலான் மாநிலம் தொடர்பான சட்டங்களை நிறைவேற்றுகிறது. அதன் உறுப்பினர்கள் பொதுத் தேர்தல் அல்லது இடைத் தேர்தல் மூலமாகத் தேர்ந்தெடுக்கப் படுகின்றனர்.

சட்டமன்ற உறுப்பினர் உரிமை

[தொகு]

மலேசிய அரசியலமைப்பு சட்டத்தின் கீழ், பொதுப் புகார்கள் போன்ற தற்போதைய பிரச்சனைகளைச் சுதந்திரமாக விவாதிக்கச் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு உரிமைகள் வழங்கப்பட்டு உள்ளன.

நிதி விசயங்களில், மாநில அரசாங்கத்திற்கு நிதி வழங்குவதற்கு மாநிலச் சட்டமன்றம் ஒப்புதல் அளிக்கிறது; மற்றும் வரி செலுத்துவோர் நலன் கருதி, அந்த நிதி ஒதுக்கீடு முறையாகச் செலவிடப் படுவதையும் உறுதி செய்கிறது.

ஒரு சட்டமன்ற உறுப்பினரின் பதவிக் காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். ஒவ்வோர் ஐந்தாண்டுகளுக்கும் ஒரு முறை கிளாந்தான் சட்டமன்றம் கலைக்கப்பட வேண்டும்.

சபாநாயகர் தலைமை

[தொகு]

நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றக் கூட்டங்களுக்கு சபாநாயகர் (Speaker) தலைமை தாங்குகிறார். தவிர விவாதங்களின் போது ஒழுங்கை உறுதிப் படுத்துகிறார். தற்போதைய சபாநாயகர் சுல்கிப்லி முகமது உமர் (Zulkefly Mohamad Omar).

சட்டமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவைப் பெற்ற கட்சி அல்லது கூட்டணி மந்திரி பெசார் தலைமையில் மாநில அரசாங்கத்தை அமைக்கிறது. பின்னர் அவர் நெகிரி செம்பிலான் மாநில ஆட்சிக்குழு எனும் மாநிலச் செயற்குழுவை (Majlis Mesyuarat Kerajaan) நியமிக்கிறார்.

நெகிரி செம்பிலான் வரலாறு

[தொகு]

இந்தோனேசியாவில் இருந்து 18-ஆம் நூற்றாண்டுகளில் இந்தோனேசியாவின் மினாங்கபாவ் (Minangkabau) இனத்தவர்கள், இந்தோனேசியா மேற்கு சுமாத்திராவில் இருந்து; மலேசியாவிற்குப் புலம் பெயர்ந்தனர். அவர்கள் நெகிரி செம்பிலானில் புதுக் குடியேற்றங்களை உருவாக்கினார்கள். அடுத்து ஒரு புது மன்னராட்சியையும் தோற்றுவித்தார்கள்.

இவர்களின் மன்னராட்சி முறை மற்ற மாநிலங்களைக் காட்டிலும் சற்று மாறு பட்டு இருக்கிறது. ஒரு மன்னரின் மகன் வாரிசாக அமையாமல் ஒரு மாவட்டத்தின் தலைவர் மன்னராகப் பிரகடனம் செய்யப் படுவதே இந்த மாநிலத்தில் காணப்படும் சிறப்புத் தன்மை ஆகும்.

யாங் டி பெர்துவான் பெசார்

[தொகு]

நெகிரி செம்பிலான் மாநிலம் நான்கு மாவட்டப் பிரிவுகளாகப் பிரிக்கப் பட்டுள்ளது. சுங்கை ஊஜோங் மாவட்டம், ஜெலுபு, ஜொகூல் மாவட்டம், ரெம்பாவ் மாவட்டம் என நான்கு பிரிவுகள். இந்த ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு தலைவர் இருக்கின்றார்.

அந்தத் தலைவரை உண்டாங் (Undang) என்று அழைக்கிறார்கள். மாநிலத்தின் மன்னர் பதவி காலியாகும் போது நான்கு மாவட்டத் தலைவர்களும் ஒன்று கூடி அவர்களின் நம்பிக்கைக்கு உரிய ஒருவரை மன்னராகத் தெரிவு செய்கின்றனர்.

அப்படி தெரிவு செய்யப் படும் மன்னர், சுல்தான் என அழைக்கப் படுவது இல்லை. அதற்குப் பதிலாக யாங் டி பெர்துவான் பெசார் (Yang di-Pertuan Besar) என்று அழைக்கப் படுகின்றார். அவரின் பெயருக்கு முன் யாம் துவான் பெசார் (Yam Tuan Besar) எனும் உயர் அழைப்புச் சொல் பயன்படுத்தப் படுகிறது.

பூகிஸ் படையெடுப்பு

[தொகு]

15-ஆம் நூற்றாண்டில் மினாங்கபாவ் இனத்தவர் சுமத்திராவில் இருந்து மலேசியாவில் குடியேறினர். அவர்களுக்கு மலாக்கா சுல்தான்கள் பாதுகாப்பு வழங்கினர். மலாக்கா சுல்தான்களுக்குப் பின்னர் ஜொகூர் சுல்தான்கள் உதவி வழங்கினர்.

அந்தக் காலக்கட்டத்தில் சுமத்திராவில் இருந்து வந்த பூகிஸ் எனும் மற்றோர் இனத்தவர் ஜொகூரின் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தினர். அதனால் ஜொகூர் ஆட்சி பலகீனம் அடைந்தது.

ஆகவே, நெகிரி செம்பிலானில் வாழ்ந்து வந்த மினாங்கபாவ்கள் தங்களின் சொந்த சுமத்திரா சுல்தானின் உதவியைக் கோரினர். அப்போது சுமத்திராவில் மினாங்கபாவ்களுக்கு சுல்தான் அப்துல் ஜாலில் என்பவர் சுல்தானாக இருந்தார்.[1][2]

ராஜா மெலாவார்

[தொகு]

நெகிரி செம்பிலான் மினாங்கபாவ் மக்களுக்கு உதவி செய்ய ராஜா மெலாவார் (Raja Mahmud ibni Almarhum Sultan Abdul Jalil) என்பவர் சுமத்திராவில் இருந்து அனுப்பப் பட்டார்.[3] ஆனால், ராஜா மெலாவார் வந்த போது ராஜா காத்திப் (Raja Khatib) என்பவர் தன்னைத் தானே மன்னராகப் பிரகடனம் செய்து கொண்டு ஆட்சியில் இருந்தார்.

சினம் அடைந்த ராஜா மெலாவார், ராஜா காத்திப் மீது போர் பிரகடனம் செய்தார். போர் நடந்தது. அதில் ராஜா மெலாவார் வெற்றியும் பெற்றார். உடனே ஜொகூர் சுல்தான் புதிய ஆட்சியாளரான யாம் துவான் பெசார் ராஜா மெலாவாரை அங்கீகரித்து புதிய யாங் டி பெர்துவான் பெசார்|யாங் டி பெர்துவான் பெசாராக]] அறிவித்தார். யாங் டி பெர்துவான் பெசார் என்றால் எல்லா மாநிலங்களுக்கும் தலைவர் என்று பொருள். இது 1773-இல் நடந்த நிகழ்ச்சி.[3]

ராஜா மெலாவார் இறந்ததும் அரியணைப் போட்டி தீவிரமானது. சிலர் தங்களைத் தலைவர்களாகப் பிரகடனம் செய்து கொண்டனர். அதனால், நெகிரி செம்பிலானில் குழப்பம் தான் மிஞ்சியது. இந்தக் கட்டத்தில் பிரித்தானியர்கள் நெகிரி செம்பிலான் ஆட்சியில் தலையிட்டனர்.

பிரித்தானிய ஆளுமை

[தொகு]

பிரித்தானியர்களின் முதலீடுகளைப் பாதுகாக்கப் பிரித்தானியர்களுக்குச் சகல உரிமைகளும் உள்ளன எனும் சாக்குப் போக்குகளைச் சொல்லி சுங்கை ஊஜோங் உள்நாட்டுக் கலகத்தில் தலையிட்டனர். அதன்படி 1873-இல் சுங்கை ஊஜோங் மாவட்டம் பிரித்தானியர்களின் பாதுகாப்பின் கீழ் வந்தது.

சுங்கை ஊஜோங் மாவட்டத்திற்கு பிரித்தானிய கண்காணிப்பாளர் (British Resident) நியமிக்கப் பட்டார். 1886-இல் ஜெலுபு மாவட்டம் பிரித்தானியர்களின் ஆளுமையின் கீழ் வந்தது. இதர ஜொகூல் மாவட்டம், ரெம்பாவ் மாவட்டம் எனும் மாவட்டங்கள் 1897-இல் பிரித்தானியர்களின் கைகளுக்கு மாறின.

நெகிரி செம்பிலான் மாநிலத்தை ஜப்பானியர்கள் 1941-ஆம் ஆண்டில் இருந்து 1945-ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்தனர். 1948-இல் மலாயா கூட்டமைப்பு மாநிலங்கள் அமைப்பில் இணைந்தது. பின்னர் 1963-இல் மலேசியாவின் ஒரு மாநிலமாக உறுப்பியம் பெற்றது.[4]

அரசாங்கமும் அரசியலும்

[தொகு]

அரசியல் சாசனப் படி நெகிரி செம்பிலான் யாம் துவான் பெசார் தான் நெகிரி செம்பிலான் மாநிலத்தை ஆட்சி செய்பவராகும். அவருடைய ஆளுமைத் தகுதி பாரம்பரிய மரபு வழியாக வருகின்றது. ஆயுள் காலம் வரை அவர் ஆட்சி செய்வார். நெகிரி செம்பிலான் மாநிலத்தில் இசுலாம் சமயத்தின் தலைவராகவும் இவர் செயல் படுகின்றார்.

நெகிரி செம்பிலான் மாநிலத்தில் இப்போது யாம் துவான் பெசார் துவாங்கு முக்ரிஸ் (Tuanku Muhriz Al-Marhum Tuanku Munawir) என்பவர் யாங் டி பெர்துவான் பெசார் எனும் சுல்தானாக உள்ளார். இவர் 2009-ஆம் ஆண்டில் இருந்து யாம் துவான் பெசாராக அரச பணி செய்து வருகிறார்.[5]

மாநிலச் செயலாட்சி மன்றம் (State Executive Council) யாம் துவான் பெசார் அவர்களைத் தலைவராகக் கொண்டு செயல் பட்டு வருகின்றது. அரசாங்க நிர்வாகச் சேவைத் தலைவராக இருப்பவர் மாநில முதலமைச்சர். இவரை மந்திரி பெசார் (Menteri Besar) என்று அழைக்கிறார்கள். இவருக்கு உதவியாகப் பதின்மர் மாநிலச் செயலாட்சி உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள் அனைவரும் மாநில அமைச்சர்கள் ஆவர்.

இவர்கள் மாநிலச் சட்டசபையில் இருந்து தேர்வு செய்யப் படுகின்றார்கள். மாநில முதலமைச்சரையும் மாநிலச் செயலாட்சி உறுப்பினர்களையும் சுல்தான் நியமனம் செய்கின்றார்.

தற்போதைய நெகிரி செம்பிலான் சட்டமன்றம் (2022)

[தொகு]
அரசு நம்பிக்கை ஆதரவு
பாக்காத்தான் பாரிசான்
20 16
11 6 3 15 1
ஜசெக பிகேஆர் அமாணா அம்னோ மஇகா

நெகிரி செம்பிலான் மாநிலத்தின் மாவட்டங்கள்

[தொகு]

நெகிரி செம்பிலான் மாநிலத்தில் மொத்தம் 7 மாவட்டங்கள் உள்ளன. அவை கீழ் வருமாறு:-

மேற்கோள்

[தொகு]
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-07-28. பார்க்கப்பட்ட நாள் 2021-11-27.
  2. https://museumvolunteersjmm.com/2016/04/04/the-minangkabau-of-negeri-sembilan/
  3. 3.0 3.1 History behind Negri's unique selection of ruler பரணிடப்பட்டது 2009-01-22 at the வந்தவழி இயந்திரம், The New Straits Times, 29 December 2008.
  4. "Colonial Reports--annual, Issues 1570-1599". 1931. பார்க்கப்பட்ட நாள் 9 January 2021.
  5. 12th Negeri Sembilan State Legislative Assembly begins Loke Siew Fook. 25 April 2008. Accessed 18 June 2010

மேலும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]