தங்கம்(I) குளோரைடு
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
தங்கம்(I) குளோரைடு
| |
இனங்காட்டிகள் | |
10294-29-8 | |
ChEBI | CHEBI:30078 |
ChemSpider | 25464 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 27366 |
| |
பண்புகள் | |
AuCl | |
வாய்ப்பாட்டு எடை | 232.423 கி/மோல் |
தோற்றம் | மஞ்சள்நிறத் திண்மம் |
அடர்த்தி | 7.6 கி/செ.மீ3 [1] |
உருகுநிலை | 170 °C (338 °F; 443 K) |
கொதிநிலை | 298 °C (568 °F; 571 K) (சிதைவடையும்) |
மிகச்சிறிதளவு கரையும் | |
கரைதிறன் | HCl, HBr கரிமக் கரைப்பான்களில் கரையும் |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | நான்முகம், tI16 |
புறவெளித் தொகுதி | I41/amd, No. 141 |
தீங்குகள் | |
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | MSDS |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தங்கம்(I) குளோரைடு (Gold(I) chloride) என்பது AuCl என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.
தயாரிப்பு
[தொகு]தங்கம்(III) குளோரைடை வெப்பச் சிதைவு அடையச் செய்யும் வினையின் மூலமாகத் தங்கம்(I) குளோரைடு தயாரிக்கலாம்.
வினைகள்
[தொகு]குளோரினின் ஆவியழுத்தத்தால் உயர்வெப்பநிலைகளில் இதனுடைய சிறுபகுதி நிலைப்புத் தன்மையுடன் காணப்பட்டாலும் இச்சேர்மம் வெளிச்சூழலில் சிற்றுறுதி நிலைப்புத் தன்மையுடன் காணப்படுகிறது.தண்ணீருடன் சேர்த்து வினைப்படுத்தும் பொழுது தங்கம்(I) குளோரைடு விகிதச்சமமாதலின்றி பிரிகையடைந்து தங்கம் உலோகமாகவும் தங்கம்(III) குளோரைடு ஆகவும் தன்னொடுக்க வினையால் மாற்றமடைகிறது:
- 3 AuCl → 2 Au + AuCl3
பொட்டாசியம் புரோமைடுடன் வினைபுரிந்து பொட்டாசியம் தங்க புரோமைடு எனப்படும் பொட்டாசியம் ஆரிக் புரோமைடையும், பொட்டாசியம் குளோரைடையும் ,தங்கம் உலோகத்தையும் கொடுக்கிறது:
- 3 AuCl + 4 KBr → KAuBr4 + 2 Au + 3 KCl
பாதுகாப்பு
[தொகு]கண்கள் மற்றும் தோலில் தங்கம்(I) குளோரைடு எரிச்சலை உண்டாக்கும், சிறுநீரகத்தைப் பாதிக்கும், இரத்த வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையைக் குறைக்கும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Pradyot Patnaik. Handbook of Inorganic Chemicals. McGraw-Hill, 2002, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-07-049439-8