டாமன்சாரா பெர்டானா
டாமன்சாரா பெர்டானா | |
---|---|
Damansara Perdana | |
ஆள்கூறுகள்: 3°10′6.34″N 101°36′34.87″E / 3.1684278°N 101.6096861°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | சிலாங்கூர் |
மாவட்டம் | பெட்டாலிங் மாவட்டம் |
மாநகராட்சி | பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி |
அரசு | |
• வகை | உள்ளாட்சி |
• நிர்வாகம் | பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி |
நேர வலயம் | ஒசநே+8 (மலேசிய நேரம்) |
டாமன்சாரா பெர்டானா (மலாய்: Damansara Perdana; ஆங்கிலம்: Damansara Perdana); என்பது மலேசியா, சிலாங்கூர், பெட்டாலிங் மாவட்டத்தின் வடக்குப் பகுதியில் அமைந்து உள்ள ஒரு குடியிருப்பு புறநகர்ப் பகுதியாகும். கோலாலம்பூர் மாநகருக்கு மிக அருகாமையில் உள்ளது.
இந்தப் புறநகர்ப் பகுதிக்கு அருகில் பண்டார் உத்தாமா, தாமான் துன் டாக்டர் இசுமாயில், முத்தியாரா டாமன்சாரா; டாமன்சாரா ஜெயா; பண்டார் ஸ்ரீ டாமன்சாரா ஆகிய புறநகர்ப் பகுதிகள் உள்ளன. 1996-ஆம் ஆண்டில் இந்த புறநகர்ப் பகுதி உருவாக்கப்பட்டது.
RM 1.9 பில்லியன் மொத்த கட்டுமான மதிப்பைக் கொண்டுள்ளது.
வரலாறு
[தொகு]டாமன்சாரா பெர்டானா முன்பு ஒரு ஓராங் அஸ்லி கிராமமாக இருந்தது. மேம்பாட்டு நிறுவனமான எம்கே லேண்ட் சவுசானா டிரைங்கல் (MK Land Saujana Triangle) அந்தக் கிராமத்தின் பெரும்பகுதியை விலை கொடுத்து வாங்கியது.[1]
பின்னர் 1996-இல் அதை அபிவிருத்தி செய்யத் தொடங்கியது. அதன் பின்னர், டாமன்சாரா பெர்டானா பெட்டாலிங் ஜெயாவின் சிறந்த நகரங்களில் ஒன்றாக மாறியுள்ளது.[2]
அமைவு
[தொகு]டாமன்சாரா பெர்டானா 750 ஏக்கர் பரப்பளவு கொண்டது. பெட்டாலிங் ஜெயாவின் தங்க முக்கோணத்திற்குள் (Golden Triangle of Petaling Jaya) அமைந்துள்ளது. டாமன்சாரா பெர்டானா நகர்ப் பகுதியை எளிதில் அணுகுவதற்குச் சிறந்த நெடுஞ்சாலைகள் மற்றும் விரைவுச்சாலைகள் உள்ளன. அவையாவன:
- டாமன்சாரா - பூச்சோங் விரைவுச்சாலை (Damansara–Puchong Expressway - LDP);
- இஸ்பிரிண்ட் விரைவுச்சாலை (Sprint Expressway - SPRINT);
- புதிய கிள்ளான் பள்ளத்தாக்கு விரைவுச்சாலை (New Klang Valley Expressway - NKVE):
வணிக வளாகம்
[தொகு]டாமன்சாரா பெர்டானாவில் பிரபலமான வணிக நிறுவனங்கள் தங்களின் வணிக மையங்களை அமைத்துள்ளன.
- 1 உத்தாமா - 1 Utama
- இக்கியா - IKEA
- தி கர்வ் - The Curve
- தெசுகோ - Tesco
- கத்தே சினிலெய்சர் - Cathay Cineleisure
- தி பிலேஸ் - The Place
- பெர்டானா வர்த்தக மையம் - Perdana Trade Centre
குடியிருப்புகள்
[தொகு]டாமன்சாரா பெர்டானாவில் உள்ள குடியிருப்பு பகுதிகள்:
- பெர்டானா எமரால்டு காண்டோமினியம் - Perdana Emerald Condo
- பெர்டானா வியூ காண்டோமினியம் - Perdana View Condo
- புளோரா டாமன்சாரா - Flora Damansara
- பெர்டானா பிரத்தியேக காண்டோமினியம் - Perdana Exclusive Condo
- ரிட்சு பெர்டானா 1 - Ritze Perdana 1
- பெருநகர சதுக்கம் - Metropolitan square
- அர்மானி தெரெஸ் I- Armanee Terrace I
- PJ வர்த்தக மையம் - PJ Trade Center
- அர்மானி தெரெஸ் 2 - Armanee Terrace 2
- ரிட்சு பெர்டானா 2 - Ritze Perdana 2
- ரபலேசியா - Rafflesia
- எம்பயர் குடியிருப்பு - Empire Residence
- நியோ டமன்சாரா குடியிருப்பு - Neo Damansara Residence
- பாயிண்ட் 92 - Point 92
- எம்பயர் டாமன்சாரா - Empire Damansara
- எம்பயர் சிட்டி - Empire City
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Originally an Orang Asli village, the 760-acre Damansara Perdana started development in 1996 thanks to MKLand Saujana Triangle". PropSocial (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 10 September 2022.
- ↑ "MKLAND Holdings Berhad - Real estate developer in Petaling Jaya". www.mkland.com.my. பார்க்கப்பட்ட நாள் 10 September 2022.