சனவரி 16
Appearance
<< | சனவரி 2024 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | 6 | |
7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
28 | 29 | 30 | 31 | |||
MMXXIV |
சனவரி 16 (January 16) கிரிகோரியன் ஆண்டின் 16 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 349 (நெட்டாண்டுகளில் 350) நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
- கிமு 27 – கையஸ் யூலியஸ் சீசர் ஒக்டேவியஸ் அகுஸ்டசு என்ற மரபுப் பெயரைப் பெற்றார். இது உரோமைப் பேரரசின் ஆரம்பமாகக் கருதப்படுகிறது.
- 929 – குர்துபா கலீபகம் அமைக்கப்பட்டது.
- 1362 – வடகடலில் ஏற்பட்ட பெரும் சூறாவளியால் இங்கிலாந்தின் கிழக்குக் கரை பெரும் சேதத்திற்குள்ளானது. ருங்கோல்ட் என்ற செருமனிய நகரம் அழிந்தது.
- 1492 – எசுப்பானிய மொழியின் முதலாவது இலக்கண நூல் பேரரசி முதலாம் இசபெல்லாவிடம்]] கையளிக்கப்பட்டது.
- 1547 – இளவரசர் நான்காம் இவான் உருசியாவின் 1-வது (சார்) பேரரசராக முடிசூடினார். 264-ஆண்டு கால மாசுக்கோ தன்னாட்சிப் பிரதேசம் உருசிய சாராட்சியாக மாறியது.
- 1556 – இரண்டாம் பிலிப்பு எசுப்பானியாவின் அரசராக முடிசூடினார்.
- 1572 – இங்கிலாந்தில் கத்தோலிக்க திருச்சபையை மீளக் கொண்டுவருவதற்கு சதியில் ஈடுபட்டமைக்காக நோர்போக் கோமகன் தொதாம்சு ஓவார்டு மீது விசாரணை ஆரம்பமானது.
- 1707 – இசுக்காட்லாந்து, இங்கிலாந்துடன் இணைந்து பெரிய பிரித்தானிய இராச்சியம் ஆக உருவாவதற்கு ஏதுவாக அமைந்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது.
- 1757 – நரேலா சமரில் மராட்டியப் பேரரசுப் படைகள் 5-000 படைகளைக் கொண்ட துராணிப் பேரரசைத் தோற்கடித்தது.[1]
- 1761 – பிரித்தானியர் பாண்டிச்சேரியை பிரான்சிடம் இருந்து கைப்பற்றினர்.
- 1777 – வெர்மொண்ட் நியூயோர்க்கில் இருந்து விடுதலையை அறிவித்தது.
- 1862 – இங்கிலாந்து, நோர்தம்பலாந்து என்ற இடத்தில் இடம்பெற்ற நிலக்கரிச் சுரங்க விபத்தில் 204 பேர் உயிரிழந்தனர்.
- 1900 – சமோவா தீவுகளுக்கான உரிமையை விட்டுக் கொடுக்கும் ஐக்கிய இராச்சியத்தின் 1899 ஆங்கிலோ-செருமன் உடன்படிக்கையை அமெரிக்க மேலவை ஏற்றுக் கொண்டது.
- 1909 – ஏர்னஸ்ட் சாக்கிளெட்டனின் குழுவினர் தென் முனையைக் கண்டுபிடித்தனர்.
- 1920 – உலக நாடுகள் சங்கத்தின் முதலாவது கூட்டம் பாரிசில் நடைபெற்றது.
- 1942 – அமெரிக்காவில் நெவாடா மாநிலத்தில் விமானம் ஒன்று வீழ்ந்ததில் நடிகை கரோல் லம்பார்டு உட்பட 22 பேர் உயிரிழந்தனர்.
- 1945 – இட்லர் தனது சுரங்க மறைவிடத்திற்கு தப்பிச் சென்றார்.
- 1969 – செக்கோசிலோவாக்கியாவில் சோவியத் இராணுவம் முதல் வருடத்தில் மாணவர் எழுச்சியை அடக்கியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து யான் பலாக்கு என்ற செக் மாணவர் பிராகாவில் தீக்குளித்து மாண்டார்.
- 1969 – சோவியத் விண்கலங்கள் சோயுசு 4, சோயுசு 5 விண்கலங்கள் முதல் தடவையாக புவியின் சுற்றுப்பாதையில் விண்வெளிவீரர்களைப் பரிமாறிக் கொண்டன.
- 1979 – ஈரான் கடைசி மன்னர் முகம்மத் ரிசா ஷா பஹ்லவி குடும்பத்துடன் நாட்டை விட்டு வெளியேறி எகிப்தில் குடியேறினார்.
- 1991 – ஐக்கிய அமெரிக்கா ஈராக் மீது போரை அறிவித்தது. வளைகுடாப் போர் ஆரம்பமானது.
- 1992 – எல் சல்வடோர் அதிகாரிகள் தீவிரவாதத் தலைவர்களுடன் மெக்சிக்கோ நகரில் அமைதி ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.
- 1993 – விடுதலைப் புலிகளின் தளபதி கேணல் கிட்டு உட்பட 10 விடுதலைப் புலிகள் வெளிநாடொன்றில் இருந்து இலங்கை திரும்புகையில் சர்வதேசக் கடற்பரப்பில் இந்தியக் கடற்படையால் சுற்றி வளைக்கப்பட்ட போது கப்பலை வெடிக்க வைத்து இறந்தனர்.
- 2001 – கொங்கோ தலைவர் லாரன்ட் கபிலா தனது மெய்க்காவலரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
- 2003 – கொலம்பியா விண்ணோடம் தனது கடைசிப் பயணத்தை ஆரம்பித்தது. இது 7 விண்வெளி வீரர்களுடன் 16 நாட்களின் பின்னர் பூமி திரும்புகையில் வெடித்துச் சிதறியது.
- 2006 – எலன் ஜான்சன் சர்லீஃப் லைபீரியாவின் அரசுத்தலைவரானார். இவரே ஆபிரிக்க நாடொன்றின் முதலாவது பெண் அரசுத் தலைவர் ஆவார்.
- 2008 – 2002 போர்நிறுத்த உடன்படிக்கையில் இருந்து இலங்கை அரசு அதிகாரபூர்வமாக விலகியது.
- 2008 – இலங்கைப் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு இலங்கையில் தனது பணிகள் அனைத்தையும் நிறுத்தியது.
- 2016 – புர்க்கினா பாசோவில் உணவு விடுதி ஒன்றில் இடம்பெற்ற தாக்குதல் ஒன்றில் 23 பேர் கொல்லப்பட்டனர்.
பிறப்புகள்
- 1630 – குரு ஹர் ராய், சீக்கிய குரு (இ. 1661)
- 1890 – டபிள்யூ. ஏ. சில்வா, சிங்களப் புதின எழுத்தாளர் (இ. 1957)
- 1895 – த. மு. சபாரத்தினம், இலங்கை அரசியல்வாதி (இ. 1966)
- 1901 – புல்ஜென்சியோ பாட்டிஸ்ட்டா, கியூபாவின் 9வது அரசுத்தலைவர் (இ. 1973)
- 1920 – நானி பல்கிவாலா, இந்திய அரசியல்சட்ட நிபுணர், பொருளியல் அறிஞர், கல்வியாளர் (இ. 2002)
- 1929 – எஸ். ஜே. தம்பையா, இலங்கை மானுடவியலாளர், கல்வியாளர் (இ. 2014)
- 1932 – டயேன் ஃபாசி, அமெரிக்க விலங்கியலாளர் (இ. 1985)
- 1944 – ஜில் டார்ட்டர், அமெரிக்க வானியலாளர், உயிரியலாளர்
- 1946 – கபீர் பேடி, இந்திய நடிகர்
- 1952 – நெல்லை சிவா, தமிழகத் திரைப்பட, தொலைக்காட்சி நடிகர் (இ. 2021)
- 1974 – கஜேந்திரகுமார் பொன்னம்பலம், இலங்கை அரசியல்வாதி, வழக்கறிஞர்
- 1978 – விஜய் சேதுபதி, தமிழ்த் திரைப்பட நடிகர்
- 1979 – ஆலியா, அமெரிக்கப் பாடகி, நடிகை (இ. 2001)
- 1985 – சித்தார்த் மல்ஹோத்ரா, இந்திய நடிகர்
இறப்புகள்
- 309 – முதலாம் மர்செல்லுஸ் (திருத்தந்தை), உரோமை ஆயர் (பி. 255)
- 1656 – தத்துவ போதகர், இத்தாலிய இயேசு சபைப் போதகர் (பி. 1577)
- 1711 – யோசப் வாசு, இந்திய-இலங்கை கத்தோலிக்க மதகுரு, புனிதர் (பி. 1651)
- 1794 – எட்வார்ட் கிப்பன், ஆங்கிலேய வரலாற்றாளர், அரசியல்வாதி (பி. 1737)
- 1938 – சரத்சந்திர சட்டோபாத்யாயா இந்திய எழுத்தாளர் (பி. 1876)
- 1938 – வில்லியம் என்றி பிக்கெரிங், அமெரிக்க வானியலாளர் (பி. 1858)
- 1943 – திரிபுரனேனி இராமசாமி, ஆந்திர வழக்கறிஞர், நாடக ஆசிரியர், சீர்திருத்தவாதி (பி. 1887)
- 1967 – ராபர்ட் ஜெ. வான் டி கிராப், அமெரிக்க இயற்பியலாளர் (பி. 1901)
- 1978 – ஏ. பீம்சிங், தமிழக இயக்குநர், தயாரிப்பாளர், தொகுப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் (பி. 1924)
- 1993 – கேணல் கிட்டு, விடுதலைப் புலிகளின் மத்தியகுழு உறுப்பினர், தளபதி (பி. 1961)
- 1997 – ராஜகோபால தொண்டைமான், புதுகோட்டை சமத்தானத்தின் 9-வது, கடைசி ஆட்சியாளர் (பி. 1922)
- 2006 – பி. சாந்தகுமாரி, தென்னிந்தியத் திரைப்பட நடிகை (பி. 1920)
- 2006 – தாத்தேயசு அகேகியான், சோவியத்-ஆர்மேனிய வானியற்பியலாளர் (பி. 1913)
- 2010 – ஜோதி பாசு, மேற்கு வங்கத்தின் 9வது முதலமைச்சர் (பி. 1914)
- 2014 – ஹிரூ ஒனோடா, சப்பானிய இராணுவத் தளபதி (பி. 1922)
- 2014 – சிவயோகமலர் ஜெயக்குமார், ஈழத்து எழுத்தாளர்
- 2016 – தி. ச. சின்னத்துரை, சிங்கப்பூர் உச்சநீதிமன்ற நீதிபதி (பி. 1930)
- 2017 – சி. வி. விசுவேசுவரா, இந்திய அறிவியலாளர், கருந்துளை ஆய்வாளர், வானியலாளர் (பி. 1938)
சிறப்பு நாள்
- தேசிய சமய சமத்துவ நாள் (அமெரிக்கா)
- ஆசிரியர் நாள் (தாய்லாந்து, பர்மா)
மேற்கோள்கள்
- ↑ Jaswant Lal Mehta (2005). Advanced study in the history of modern India 1707-1813. Sterling Publishers Pvt. Ltd. p. 225. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-932705-54-6.