சி. வி. விசுவேசுவரா
சி. வி. விசுவேசுவரா ( C.V. Vishveshwara 6 மார்ச்சு 1938–16 சனவரி 2017) என்பவர் இந்திய அறிவியலாளர், கருந்துளை ஆய்வாளர் மற்றும் வானியலாளர் ஆவார். ஐன்சுடீன் சார்புக் கொள்கையை ஆழமாக ஆய்வு செய்து அதில் நிபுணர் ஆனார்.[1]
இளமையும் கல்வியும்
[தொகு]சி. வி. விசுவேசுவராவின் தந்தை பத்மசிறீ சி. வி. வெங்கடராமையா ஒரு கல்வியாளர். விசுவேசுவரா சிறுவராக இருக்கும்போது இலக்கியம் இசை ஆகியவற்றில் ஆர்வம் காட்டினார். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் அணுத் துகள் இயற்பியல் துறையில் முதுகலை பட்டம் பெற்ற சி.வி.விசுவேசுவரா, மேரிலேண்ட் பல்கலைக்கழகத்தில் கருந்துளைகள் பற்றி ஆய்வுசெய்து முனைவர் பட்டம் பெற்றார். நியூயார்க்கு பல்கலைக்கழகம், பாசுடன் பல்கலைக்கழகம், பிட்சுபர்க் பல்கலைக் கழகம் ஆகியவற்றில் கற்பிக்கும் துறையில் பணி செய்தார். பின்னர் சொந்த ஊரான பெங்களூருவுக்குத் திரும்பினார்.
அறிவியல் பணிகள்
[தொகு]கடந்த 1970 ஆம் ஆண்டு ‘கருந்துளை வடிவம் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டார். இதைத் தொடர்ந்து 130 கோடி ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு ராட்சதக் கருந்துளைகள், ஒன்றை யொன்று சுற்றிக்கொண்டே மோதியபோது ஏற்பட்ட ஈர்ப்பலைகளின் வடிவத்தை வரைந்தார்.
பெங்களூருவில் கோளரங்கத்தைத் தோற்றுவித்து அதன் இயக்குநராக இருந்தார். கோளரங்கு நிகழ்ச்சிகளை எழுதியும் நிகழ்ச்சிகளை இயக்கியும் செயல்பட்டார். இரண்டு அறிவியல் குறும் படங்களை உருவாக்கினார். ஐன்சுடீன் கருந்துளைகள் பற்றி சில நூல்களும் பல கட்டுரைகளும் எழுதினார்.
மேற்கோள்
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- Leaves from an unwritten diary: http://www.ias.ac.in/currsci/apr252000/generalia.pdf
- The Engelbert Experience-Pathways from the Past: http://prints.iiap.res.in/bitstream/2248/4915/3/The%20Engelbert%20experience%20pathways%20from%20the%20past