த. மு. சபாரத்தினம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ரி. எம். சபாரத்தினம்
T. M. Sabaratnam


சட்டசபை உறுப்பினர்
இலங்கை சட்டவாக்கப் பேரவை உறுப்பினர்
பதவியில்
1924–1931
பின்வந்தவர் பேரா. செ. சுந்தரலிங்கம்
தனிநபர் தகவல்
பிறப்பு சனவரி 16, 1895(1895-01-16)
முல்லைத்தீவு
இறப்பு 23 சனவரி 1966(1966-01-23) (அகவை 71)
முல்லைத்தீவு
தேசியம் இலங்கைத் தமிழர்
அரசியல் கட்சி அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்
வாழ்க்கை துணைவர்(கள்) வாலாம்பிகை அழகம்மா
பிள்ளைகள் புலேந்திரா சபாரத்தினம்,
சகுந்தலா நல்லையா
தொழில் வழக்கறிஞர்
சமயம் இந்து

தம்பையா முதலியார் சபாரத்தினம் (Thambaiyah Mudaliyar Sabaratnam, 16 சனவரி 1895 - 23 சனவரி 1966) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், வழக்கறிஞரும் ஆவார். இவர் இலங்கை சட்டவாக்கப் பேரவை உறுப்பினராக 1924 முதல் 1931 வரை வட மாகாணத்தின் கிழக்குப் பகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.[1]

வாழ்க்கைச் சுருக்கம்[தொகு]

ரி. எம். சபாரத்தினம் கொழும்பு ரோயல் கல்லூரியில் கல்வி கற்று, பின்னர் சட்டக் கல்வியை கொழும்பு சட்டக் கல்லூரியில் முடித்து இலங்கை உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றினார்.[2] வாலாம்பிகை அழகம்மா என்பாரைத் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு ராசக்கோன் புலேந்திரா, சகுந்தலா நல்லையா என்ற இரு பிள்ளைகள்.

அரசியல் வாழ்க்கை[தொகு]

1924 தேர்தலில் இலங்கை சட்டவாக்கப் பேரவையின் உறுப்பினராக வட மாகாணத்தின் கிழக்குப் பகுதிக்கு போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3] இப்பதவியை அவர் 1931 ஆம் ஆண்டு வரை வகித்து வந்தார். பின்னர் 1947 நாடாளுமன்றத் தேர்தல்[4], மற்றும் 1952 தேர்தல்களில்[5] அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் கட்சியின் சார்பில் வவுனியா தேர்தல் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.

சமூகப் பணி[தொகு]

சபாரத்தினம் இலங்கை இராமகிருஷ்ண மடத்தின் நிருவாக உறுப்பினராகவும்[6] பின்னர் வற்றாப்பளை அம்மன் கோவில் அறங்காவல் தலைவராகவும் சேவையாற்றினார்.[7]

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Rajasingham, K. T. "SRI LANKA: THE UNTOLD STORY: Chapter 5: Political polarization on communal lines", ஏசியா டைம்ஸ், செப்டம்பர் 8, 2001
  2. law/nlr/common/html/NLR53V472.htm VELUPILLAI et al v PULENDRA et al, S. C. 462-D. C. Vavuniya, 831 (law case report)
  3. Sabaratnam, T., Sri Lankan Tamil Struggle, Struggle 19.php?uid=4171 Chapter 19: "The Birth and Death of the Jaffna Youth Congress"
  4. "Result of Parliamentary General Election 1947". இலங்கைத் தேர்தல் திணைக்களம்.
  5. "Result of Parliamentary General Election 1952". இலங்கைத் தேர்தல் திணைக்களம்.
  6. process.php?chapterid=1956Y10V344C&sectionno=4&title=RAMAKRISHNA%20MISSION%20&path=3 Article 4, Ramakrishna Mission (Ceylon Branch) Ordinance
  7. வற்றாப்பளை அம்மன் கோவில் வரலாறு
"https://ta.wikipedia.org/w/index.php?title=த._மு._சபாரத்தினம்&oldid=2712566" இருந்து மீள்விக்கப்பட்டது